بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஹதீஸை பெறும் வழிகள் 8 ஆகும்.
1 . السماع – ஹதீஸை அறிவிப்பவரிடமிருந்து நேரடியாக செவியேற்பது.
2 . القراءة على الشيخ حفظاً أو من كتاب – மனனம் செய்த ஹதீஸ்களை அல்லது எழுதிவைத்திருந்த ஹதீஸ்களை ஹதீஸை அறிவிப்பவரிடம் கூறி சரிபார்த்துக் கொள்ளுதல்.
3 . الإجازة – ஹதீஸ்களை நூலாக தொகுத்துள்ளவர், அதை தனது மாணவர்களிடம் கொடுத்து இதிலிருந்து அறிவித்துக் கொள்ளுங்கள் என்று அனுமதி அளிப்பது.
4 . المناولة – ஹதீஸ்களை நூலாக தொகுத்துள்ளவர், அதை தனது மாணவர்களிடம் கொடுப்பது. இதிலிருந்து அறிவித்துக் கொள்ளுங்கள் என்று அனுமதி கொடுத்தால் அது அல்இஜாஸாவாகும். அனுமதி இல்லாவிட்டால் முனாவலாவாகும்.
5 . المكاتبة – ஹதீஸை அறிவிப்பவர் தன் கைப்பட ஹதீஸை எழுதி மாணவர்களுக்கு தருவது; அல்லது நம்பிக்கைக்குரியவர் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது.
இதிலிருந்து அறிவித்துக் கொள்ளுங்கள் என்று அனுமதி கொடுத்தால் அது அல்இஜாஸாவாகும். அனுமதி இல்லாவிட்டால் முனாவலாவாகும்.
6 . الإعلام – ஹதீஸை அறிவிப்பவர், தனது மாணவருக்கு சில ஹதீஸ்களை குறிப்பிட்டோ அல்லது நூலைக் கொடுத்தோ இதில் உள்ள ஹதீஸ்களை நான் இன்னாரிடமிருந்து செவியேற்றேன் என்று தெரிவிப்பது.
7 . الوصية – தனது ஆசிரியரிடமிருந்து பெற்ற ஹதீஸ்நூலை மற்றவரிடம் தந்து இதிலிருந்து ஹதீஸை அறிவியுங்கள் என்று வஸிய்யத் செய்வது.
8 . الوجادة – விஜாதஹ் – மற்றவரின் கடிதம் அல்லது நூலிலிருந்து ஹதீஸைப் பெறுதல், பிறகு அதை அறிவித்தல்.
ஒரு ஹதீஸை ஸஹீஹ்-சரியானது என சொல்வதாக இருந்தால் அதில் ஐந்து நிபந்தனைகள் இருக்க வேண்டும். அதில் முதல் நிபந்தனை اتصال السند – அறிவிப்பாளர்தொடர் இடைமுறிவு ஏற்படாமல் இருக்க வேண்டும்.
இதனுடன் தொடர்புடைய பகுதி தான் இன்ன அறிவிப்பாளர், இந்த அறிவிப்பாளரிடம் ஹதீஸை நேரடியாக கேட்டுள்ளாரா? இல்லையா? என்பது பற்றி முடிவு செய்வதாகும்.
1 . السماع – ஹதீஸை அறிவிப்பவரிடமிருந்து நேரடியாக செவியேற்பது பற்றிய விளக்கம்:
ஒருவர் மற்றவரிடம் ஹதீஸைக் கேட்டுள்ளாரா? இல்லையா? என்பதை எவ்வாறு முடிவு செய்வது?
1 . அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்களில் பார்த்து முடிவு செய்வது.
இதில் உள்ள தகவல்களின்படி முடிவு செய்வதிலும் விளக்கம் உள்ளது. மிஸ்ஸீ இமாம் அவர்கள், ஒருவரின் தகவல் பற்றி கூறும் போது அவரின் ஆசிரியர்களையும், மாணவர்களையும் கூறியிருப்பார். சிலரை விட்டிருப்பார். இதனால் விடுபட்டவர்கள் வரும் செய்திகளை முன்கதிஃ என்று முடிவு செய்து விடக்கூடாது.
இவ்வாறு ஒருவர் இன்னாரிடம் ஹதீஸை அறிவித்திருப்பதை வைத்தும் இவர் இன்னாரின் மாணவர் என்றும் குறிப்பிட்டிருப்பார். இதை வைத்து மட்டும் இவர், இன்னாரின் மாணவர் என்று முடிவு செய்துவிடக்கூடாது.
2 . எனவே இரண்டாவது கட்டம், ஹதீஸ்கலை அறிஞர்கள் இவர், இன்னாரிடம் கேட்டுள்ளாரா? இல்லையா? என்பதை கூறியுள்ளார்களா? என்று பார்க்க வேண்டும்.
3 . ஒருவர், இன்னாரிடம் கேட்டுள்ளாரா? இல்லையா? என்பது பற்றி யாரும் கூறியிருக்காவிட்டால், அல்லது காரணத்தை கூறியிருக்காவிட்டால் வேறு சான்றுகளை வைத்து பார்க்க வேண்டும்.
இவை பலவகையாக உள்ளன.
1 . வரலாற்றுத் தகவல்.
இருவரும் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்து, சந்திக்காமல் இருப்பது, அல்லது இருவரில் ஒருவர் மற்றவரிடம் ஹதீஸைக் கேட்கும் நிலையில் இல்லாமல் இருப்பது போன்றவைகளால் இவர் இன்னாரிடம் கேட்கவில்லை என்றும், இந்த நிலை இல்லாவிட்டால் கேட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்றும் முடிவு செய்யலாம்.
2 . அவரின் அறிவிப்புகளை ஆய்வு செய்து பார்ப்பது.
ஒருவர் ஒரு செய்தியை ஒரு தடவை இன்னாரிடமும், மற்றொரு சமயம் இருவருக்கும் இடையில் ஒருவரை கூறியும் அறிவித்திருந்தால் அது ஆய்வுக்குரியதாகும்.
அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பவராக இருந்து இருவரிடமும் நேரடியாக கேட்டிருந்ததாக வார்த்தை அமைப்பு இருந்தால் இதில் பிரச்சனை இல்லை. குறைந்த ஹதீஸ்களை அறிவிப்பவராக இருந்து, அன்அனவாக அறிவிக்கும் செய்திகள் விசயத்தில் அறிஞர்கள் இதைக் குறையாக பார்க்கின்றனர்.
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் அவர்கள், ஒருவர் பலமானவராக; தத்லீஸ் செய்யாதவராக இருந்து தனது ஆசிரியரை சந்திக்கும் வாய்ப்பு உள்ளவராக இருந்தால் அந்த செய்திகளில் அன்அனாவை குறையாக பார்ப்பதில்லை. ஆனால் சந்திக்க வாய்ப்பு இருந்தும் இவர் இன்னாரிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று ஒரு அறிஞர் (தகுந்த ஆதாரத்துடன் கூறிவிட்டால்) முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் அவர்களும் அது முன்கதிஃ என்றே கூறியுள்ளார்.
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் அவர்களின் கருத்திற்கு மாற்றமானவர்கள் இவ்வாறு அன்அனாவை மட்டும் வைத்து இவர் இன்னாரிடம் கேட்டார் என்று முடிவு செய்யமாட்டார்கள். குறைந்தபட்சம் ஒரு செய்தியிலாவது இவர் இன்னாரிடம் கேட்டதாக அறிவித்திருக்க வேண்டும் என்று நிபந்தனையாக கூறியுள்ளனர்.
…
சமீப விமர்சனங்கள்