بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
சில ஹதீஸ்களின் தரம் பற்றி குறிப்பிடும்போது முர்ஸலான செய்தி என்று கூறுகிறோம். முர்ஸல் என்ற வழக்குச் சொல்லை முற்கால அறிஞர்கள் முன்கதிஃ – அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்திக்கும் கூறியுள்ளனர்.
இவ்வாறே அறிவிப்பாளர்தொடரில் வரும் ஆசிரியர், மாணவருக்கிடையில் சந்திப்பு நிகழாவிட்டாலும் அல்லது நேரடியாக கேட்டல் என்ற அம்சம் இல்லாவிட்டாலும் முர்ஸல் என்ற வழக்குச் சொல்லை பயன்படுத்தியுள்ளனர்.
பிற்கால அறிஞர்கள், முர்ஸல் என்ற வழக்குச் சொல்லை ஒரு தாபிஈ நபித்தோழரைக் கூறாமல் நேரடியாக நபியிடமிருந்து அறிவிக்கும் செய்திக்கு கூறுகின்றனர்.
ஏன் சிலர் முர்ஸலாக ஹதீஸ்களை அறிவிக்கின்றனர்?
1 . ஒரு தாபிஈ, ஒரு செய்தியை பல நபித்தோழர்களிடமிருந்து கேட்டிருப்பார்.
2 . (அல்லது) பல நம்பகமான ஆசிரியர்களிடமிருந்து கேட்டு, அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தியிருப்பார். (ஒரு தாபிஈ, தான் நேரடியாக கேட்காத நபித்தோழரிடமிருந்து அறிவிப்பதை இதற்கு உதாரணமாக கூறலாம். (எ.கா: இப்ராஹீம் அந்நகஈ அவர்கள், இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவை.)
இந்த இரண்டு நிலைகளிலும் ஒரு தாபிஈ அந்தச் செய்தி உண்மை என்று கருதியதால் நபியிடமிருந்து நேரடியாக அறிவிப்பார்.
3 . நினைவில் இல்லாத நிலை:
ஹதீஸை யாரிடமிருந்து கேட்டார் என்பதை மறந்துவிட்டாலும், ஹதீஸின் கருத்தை அறிந்திருப்பார். மேலும் இவர், தாம் எப்போதும் நம்பகமானவர்களிடமிருந்தே ஹதீஸைக் கேட்பவராக இருந்தார் என்பதால் முர்ஸலாக அறிவிப்பார்.
4 . ஹதீஸை, ஹதீஸாக அறிவிக்கும் நோக்கம் இல்லாத நிலை:
ஹதீஸை, ஹதீஸாக அறிவிக்கும் நோக்கம் இல்லாமல் (அதாவது அறிவிப்பாளர்கள் இடம்பெறுமாறு அறிவிப்பாளர்தொடரைக் கூறாத நோக்கம் இல்லாமல்) கேள்விக்கு பதில் கூறுதல், மார்க்க தீர்ப்பு கூறுதல், கலந்துரையாடுவது, உபதேசம் செய்வது போன்ற நேரங்களில் கருத்தை மட்டும் கூறும் நோக்கம் இருப்பதால் முர்ஸலாக அறிவிப்பார்.
5 . அறிவிப்பாளர்தொடரில் பலவீனமானவர் இருப்பது:
தமது ஆசிரியரோ அல்லது அறிவிப்பாளர்தொடரில் உள்ள யாரேனும் ஒருவர் பலவீனமானவராக இருந்தால், அவரது பெயரை மறைத்து முர்ஸலாக அறிவிப்பார்.
6 . சூழ்நிலை காரணம்:
சில சமயங்களில், யாரிடமிருந்து ஹதீஸைக் கேட்டார் என்பதைக் குறிப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்தும். (எ.கா: உமைய்யாக்களின் ஆட்சிக் காலத்தில் அலீ (ரலி) வழியாக கேட்ட ஹதீஸ்களை ஹஸன் பஸரீ அவர்கள் முர்ஸலாக அறிவித்தது.
ஹஸன் பஸரீ அவர்கள், நேரடியாக அலீ (ரலி) அவர்களிடம் கேட்டேன் என்று சொல்லாமல் அலீ (ரலி) கூறினார் என்பது போன்ற வார்த்தைகளைக் கூறி அறிவித்திருப்பார்.)
7 . ஹதீஸின் நிலை குறித்து சந்தேகம் இருப்பது:
ஹதீஸின் வாசக அமைப்பை வைத்து அல்லது அந்த செய்தியின் கருத்து முர்ஸலா அல்லது முஸ்னதா என்று சந்தேகம் ஏற்படும். இது போன்ற நேரத்தில் சிலர் அதை முர்ஸலாகவே அறிவிப்பார்கள். (எ.கா: இமாம் மாலிக். தனக்கு சந்தேகம் ஏற்பட்ட செய்தியை முர்ஸலாகவே அறிவிப்பார்)
8 . அறிவிப்பாளரின் மனநிலை மாறுபடுவது:
சிலர் சுறுசுறுப்பாக இருக்கும் நேரங்களில், முழுமையாக அறிவிப்பாளர்களைக் குறிப்பிட்டு முஸ்னதாக-முத்தஸிலாக ஹதீஸை அறிவிப்பார்கள். சோர்வாக இருக்கும் போது கவனக்குறைவாக முர்ஸலாக அறிவிப்பார்கள். (இதைப் பற்றி முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம், தனது முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
நூலின் முன்னுரையில் விவரித்துள்ளார்.)
மேற்கூறப்பட்ட பெரும்பாலான காரணங்கள் குறைக் கூறப்படாத நம்பகமான தாபிஈன்கள், மற்ற நம்பகமான பலமான அறிவிப்பாளர்கள் விசயத்தில் தான் பொருந்திப் போகும்.
தகவல்: ما هي الأسباب الحاملة على الإرسال؟ .
ஆய்வு நூல்: أسباب إرسال الحديث عند الرواة .
இதனுடன் தொடர்புடையவை:
1 . முர்ஸல்.
2 . முர்ஸல், முர்ஸலுல் கஃபீ, தத்லீஸ் இவற்றின் வித்தியாசம்.
சமீப விமர்சனங்கள்