தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

ஒரு ஹதீஸை முறிவில்லாத அறிவிப்பாளர் தொடர் என்று எவ்வாறு முடிவு செய்வது?

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

இத்திஸால், இன்கிதாஃ

ஒரு ஹதீஸை சரியானது என்று கூறுவதற்கு 5 நிபந்தனைகள் இருக்க வேண்டும். இதில் முதல் நிபந்தனை – اتصال السند – அறிவிப்பாளர்தொடர் முத்தஸிலாக அதாவது இடைமுறிவு ஏற்படாததாக இருக்க வேண்டும் என்பதாகும்.

ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரை முத்தஸில் (முறிவில்லாத அறிவிப்பாளர் தொடர்) என்றோ,

அல்லது முன்கதிஃ இடை முறிவு ஏற்பட்ட அறிவிப்பாளர்தொடர் என்றோ முடிவு செய்யும் காரணங்கள்:

1 . இத்திஸாலைக் குறிக்கும் வார்த்தைகள்:

ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும் அனைத்து அறிவிப்பாளர்களும் தனது ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதை குறிக்கும் வார்த்தைகளைக் கூறி அறிவித்திருக்க வேண்டும். (தத்லீஸ் செய்யாதவர் என்பதுடன், சந்திப்பு நிகழ்ந்தவர் என்பவர் என்றால் அன்அனாவாக அறிவித்திருந்தாலும் பரவாயில்லை)

سمعت فلاناً يقول، أو حدثنا فلان، أو أخبرنا فلان، أو حدثني فلان، أو رأيت فلاناً فقال كذا، ونحو ذلك من العبارات الصريحة في الاتصال

பொய்யர்கள், அதிகம் தவறிழைப்பவர்கள் ஒரு செய்தியை முத்தஸிலாக அறிவித்திருந்தாலும் அது ஏற்கப்படாது. அதை முன்கதிஃ என்றே கருத வேண்டும்.

இவ்வாறே பிரபலமில்லாத நூல்களில் கூறப்படும் இத்திஸால் வார்த்தைகள், பிரதிகளில், பதிப்புகளில் ஏற்பட்ட தவறான இத்திஸால் வார்த்தைள், அஸல் நூல்களை ஆய்வு செய்யாமல் வெளியிடப்பட்ட பிரபலமான நூல்களில் வரும் இத்திஸால் வார்த்தைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாது.

مثل كتب الغرائب، وكتب الفوائد، والأجزاء الحديثية التي ليست من الكتب المشهورة

وكذلك الكتب المشهورة المنشورة دون تحقيق علمي جيد

2 . நேரடியாக கேட்பது, அல்லது நேரடியாக இல்லாமல் மற்றவர்கள் மூலமாகவும் கேட்பது என்ற இரண்டு கருத்தை தரும் வார்த்தைகள்:

عن , قال ، ذكر، حكى ، حدث ، أن فلاناً قال ، أنه ذكر …

தனது ஆசிரியர்களிடமிருந்து நேரடியாக ஹதீஸைக் கேட்ட அறிவிப்பாளர்கள் கூட, சில நேரம் சுருக்கமாக அறிவிப்பதற்காக அன் என்பதை பயன்படுத்தியுள்ளனர். நேரடியாக கேட்காதவர்களிடமிருந்தும் அன் என்பதை பயன்படுத்தியுள்ளனர். எனவே தான் அன் என்ற வார்த்தை இரண்டு கருத்தை தருவதால் ஒரு அறிவிப்பாளர் அன் என்பதைக் கூறி அறிவித்தால் அது முன்கதிஃ என்று ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஆரம்பத்தில் கூறியிருந்தார். இந்தக் கருத்தின்படி சிலர் உள்ளனர் என்று இப்னு ஸலாஹ், இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஸர்கஷீ ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள், இந்தக் கருத்திலிருந்து மீண்டுவிட்டார் என்று இப்னு அப்துல்பர் குறிப்பிட்டுள்ளார்.

ஈராக்வாசிகள் – عن – அன் என்று அறிவிப்பதையே அழகாக கருதுகிறார்கள். ஹத்தஸனா, அக்பரனா போன்ற வார்த்தைகளை அதிகமாக குறிப்பிடுவதில்லை. (அல்கிஃபாயா-1/289)

பஸராவாசிகள் ஹத்தஸனா, அக்பரனா போன்ற வார்த்தைகளை குறிப்படுவதையே அழகாக கருதுகிறார்கள். கூஃபாவாசிகள் இவ்வாறு அல்ல. அவர்களின் செய்திகளில் ஒளி இல்லை என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியதை அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
குறிப்பிட்டுள்ளார். (ஸுஆலாது அபீதாவூத்-1/200)

ஒரு அறிவிப்பாளர் ஹதீஸை அறிவிக்க குறிப்பிடும் அன்ன என்பதை பற்றி விரிவாக விளக்கம் உள்ளது. சில நேரம் அவர் ஹதீஸை அறிவிக்கும் முறைப்படி இல்லாமல் நிகழ்வை கூறியிருப்பார்.

உ.ம் ஸயீத் பின் முஸய்யிப் அவர்கள், அன் அபீஹுரைரா என்றால் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
அவர்களிடமிருந்து அறிவிக்கிறார் என்று பொருளாகும். அன்ன அபாஹுரைரா என்று அறிவித்தால் இந்த வாசகம் இவர் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களிடமிருந்து கேட்டு அறிவிக்கவில்லை. அவரைப் பற்றிய நிகழ்வை சொல்கிறார் என்று பொருளாகும்.

இது முத்தஸிலா அல்லது முன்கதிஃயா என்பதை ஆசிரியர், மாணவர்களின் தொடர்பு போன்ற வேறு சான்றுகளை வைத்தே முடிவு செய்யவேண்டும்.


ஒரு அறிவிப்பாளர், இன்ன அறிவிப்பாளரிடம் ஹதீஸைக் கேட்டுள்ளாரா இல்லையா என்பதை தெரிந்துக் கொள்ளும் வழிகள்:

1 . அறிவிப்பாளர்கள் பற்றி தனியாக தொகுக்கப்பட்டுள்ள நூல்கள், ஜர்ஹ், தஃதீல் நூல்கள், இலல் நூல்கள் போன்றவற்றில் குறிப்பிட்ட அறிவிப்பாளர் யாரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்; இவரிடமிருந்து யார் அறிவித்துள்ளார் என்ற தகவலைக் காணவேண்டும்.

சிலர் இன்னார் இன்னாரிடமிருந்து அறிவித்துள்ளார் என்ற தகவலை பதிவு செய்திருப்பார்கள்.

இதன் மூலம் இதில் குறிப்பிடாதவர்களை இவரின் ஆசிரியர் அல்ல என்றோ அல்லது மாணவர்கள் இல்லை என்றோ முடிவு செய்துவிடக்கூடாது. இவ்வாறே இவர், இவரிடமிருந்து அறிவித்துள்ளார் என்ற தகவலை வைத்து மட்டும் இவர், இவரிடமிருந்து நேரடியாக ஹதீஸைக் கேட்டுள்ளார் என்றும் முடிவு செய்துவிடக்கூடாது. இதை உறுதிப்படுத்த வேறு சான்றுகள் தேவை.

2 . சில அறிஞர்கள், இன்ன அறிவிப்பாளர் இன்னாரிடம் கேட்டுள்ளார் என்றோ அல்லது கேட்கவில்லை என்றோ தெளிவுபடுத்தியிருப்பார்கள். இந்த நூல்கள் மூலமும் முத்தஸில், முன்கதிஃ எது என்ற தெரிந்துக் கொள்ளலாம்.

உ.ம் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களின் மராஸீல், அலாயீ அவர்களின் ஜாமிஉத் தஹ்ஸீல், அபூஸுர்ஆ ஈராகீ அவர்களின் துஹ்ஃபதுத் தஹ்ஸீல் போன்ற நூல்கள். இவ்வாறே தாரீக் வகை நூல்கள், இலல் நூல்கள், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்கள்.

 

2 .  இவர், இன்னாரிடம் ஹதீஸை கேட்டுள்ளார் என்று ஏதேனும் ஹதீஸ்கலை அறிஞர் கூறியிருக்க வேண்டும்..



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.