தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

தத்லீஸ்

---

தத்லீஸ் (அறிவிப்பாளர்தொடரில் உள்ள குறையை மறைத்தல்) பற்றி சிறு குறிப்பு

தத்லீஸ் மூன்று வகைப்படும்.

1 . தத்லீஸுல் இஸ்னாத்.

(தத்லீஸின் வகை- 1. تدليسِ الإسنادِ – தனது காலத்தில் வாழ்ந்த அதே நேரத்தில் அவரை சந்திக்காமலே அவரிடமிருந்து ஹதீஸை அறிவிப்பது-இருவரும் சந்திக்க வாய்ப்பு இருக்கலாம், இல்லாமலும் போகலாம் – இடையில் விடுப்பட்டவர் ஒருவரோ பலரோ கூட இருக்கலாம். (இதற்கு இப்னு ஸலாஹ் அவர்கள் تدليسِ الإسنادِ என்று பெயரிட்டாலும் المُرسل الخفي என்ற பெயரே பொருத்தமானது என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் கூறியுள்ளார்.)

  • தனது ஆசிரியரிடமிருந்து கேட்காத செய்தியையும் அவரிடமிருந்து அறிவிப்பது-(இந்த ஹதீஸ்களை நேரடியாக தன் ஆசிரியரிடமிருந்து கேட்காமல் தனது  ஆசிரியரின் மற்ற மாணவர்களிடமிருந்து இதை கேட்டிருப்பார்) (இதற்கு تدليسِ الإسنادِ என்ற பெயர் பொருத்தமானது) தத்லீஸ் செய்பவர் மேற்கூறப்பட்ட இரண்டு வகையிலும் سمعت -அவரிடமிருந்து நான் கேட்டேன், أخبرنا – அவர் எங்களுக்கு அறிவித்தார்- அல்லது இது போன்ற வார்த்தைகளை கூறாமல் قال -அவர் கூறினார், عن – அவர் வழியாக -என்று இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி அறிவிப்பார். இடையில் விடுப்பட்டவர் ஒருவரோ பலரோ கூட இருக்கலாம்.

2 . தத்லீஸுஷ் ஷுயூக்.

تدليس الشيوخ  –  தனது ஆசிரியரைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ளாத வகையில் அவரின் பட்டப் பெயரை அல்லது புனைப்பெயரைக் குறிப்பிட்டு அறிவிப்பது,

3 . தத்லீஸுத் தஸ்வியஹ்.

تدليس التسوية – ஒரு ஹதீஸில் இரு பலமான அறிவிப்பாளர்களுக்கிடையில் ஒரு பலவீனமானவர் இருப்பார், தத்லீஸ் தஸ்வியத் செய்பவர் இதில் வரும் பலவீனமான அறிவிப்பாளரை நீக்கிவிட்டு ஹதீஸை அறிவிப்பார். இந்த இரு பலமான அறிவிப்பாளர்களும் சந்தித்து ஹதீஸைக் கேட்டிருப்பார்கள்; அல்லது சந்திக்கும் வாய்ப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். இருவரில் ஒருவர் மற்றவரிடம் நேரடியாக ஹதீஸைக் கேட்டாரா என்பதை தெளிவாக கூறாமல் –عن-அவர் வழியாக -என்று அல்லது இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி அறிவிப்பார். இது போன்ற குறைகளை (ஒரு கருத்தில் வரும் அனைத்து அறிவிப்பாளர்தொடர்களையும் ஆய்வு செய்யும் கலையான இல்முல் இலல் என்ற கல்வியை தெரிந்த அறிஞர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஷாகிர் அவர்கள், கூடுதலாக தத்லீஸுல் அத்ஃப், தத்லீஸுஸ் ஸுகூத் என்ற இரண்டு வகையைக் கூறியுள்ளார்.

1 . தத்லீஸுல் அத்ஃப்.

ஹத்தஸனா ஸைத், வ அம்ர்- (ஸைதும் அம்ரும் எங்களுக்கு அறிவித்தனர்) என்று அறிவிக்கும் போது தத்லீஸ் செய்பவர் அம்ரிடம் கேட்காதபோதும் இவ்வாறு கூறுவார்.

2 . தத்லீஸுஸ் ஸுகூத்.

ஹத்தஸனா என்று கூறிவிட்டு சிறிது நேரம் கழித்து ஸைத் என்று தத்லீஸ் செய்பவர் கூறுவார்.

(நூல்: ஹாஷியா-அல்பாயிஸுல் ஹஸீஸ், பக்கம்-64)

முக்கிய குறிப்பு

தத்லீஸ் பற்றிய விளக்கத்தில் சில ஹதீஸ்கலை அறிஞர்களின் பார்வை வெவ்வேறாக உள்ளது. எனவே ஒரு ஹதீஸ்கலை அறிஞர் ஒரு அறிவிப்பாளரை பற்றி  தத்லீஸ் செய்பவர் என்று கூறினால் அவரின் பார்வையில் தத்லீஸ் என்பதற்கு என்ன பொருள் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒரு நபர் தத்லீஸ் செய்பவர் என்பதால் அவர் அறிவிக்கும் எல்லா ஹதீஸ்களையும் நிராகரித்து விடக்கூடாது. அவர் யாரிடமிருந்து அறிவிக்கும் போது தத்லீஸ் செய்பவர் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இதனுடன் தொடர்புடைய விளக்க குறிப்பு: முதல்லஸ் .



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.