بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஒரு அறிவிப்பாளரை பலவீனமானவர் என்று முடிவு செய்வதின் காரணங்கள்:
1 . நம்பகத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்துபவை.
2 . நினைவாற்றலில் பாதிப்பை ஏற்படுத்துபவை.
- நம்பகத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்துபவை- 5
1 . ஹதீஸில் பொய் கூறுதல்.
2 . பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கும்படி நடந்து கொள்ளுதல்.
3 . பாவச் செயல்களை செய்தல்.
4 . பித்அத் செயல்களை செய்தல்.
5 . அறியப்படாதவராக இருத்தல்.
- நினைவாற்றலில் பாதிப்பை ஏற்படுத்துபவை-5
1 . (ஹதீஸை அறிவிப்பதில்) கவனக்குறைவாக செயல்படல்.
2 . (சில ஹதீஸ்களை சரியாக அறிவித்திருந்தாலும் அதிகமான ஹதீஸ்களில்) அதிகத் தவறுகள் செய்தல்.
3 . நினைவாற்றல் சரியில்லாமை.
4 . (ஹதீஸை அறிவிப்பதில்) மோசமான தவறுகள் ஏற்படல்.
5 . பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்தல்.
இந்த 5 செயல்களும் நினைவாற்றல் சரியில்லாதவர்களுக்கு ஏற்படும் நிலை தான் என்றாலும் இதில் எல்லோரும் சரிசமமானவர்கள் அல்ல. எனவே 5 வகையான அறிவிப்பாளர்களுக்கு 5 வகையான பெயர்களைக் கொண்டு அடையாளம் காட்டப்படுகிறது.
…
சமீப விமர்சனங்கள்