بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
புகாரியில் இடம்பெறும் முஅல்லக் செய்திகள்.
ஒரு நூலாசிரியர் முழு அறிவிப்பாளர் தொடரையோ, அல்லது சிலரையோ விட்டு விட்டு நபி (ஸல்) அவர்களின் சொல் அல்லது செயல் தொடர்புடைய செய்திகளை அறிவித்தால் அவற்றுக்கு முஅல்லக் என்று கூறப்படும்
புகாரியில் இடம்பெறும் இந்த வகை செய்திகளைப் பற்றி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் தனது “அன்னுகது அலா கிதாபி இப்னிஸ் ஸலாஹ்” எனும் நூலில் விரிவாகக் கூறியுள்ளார்.
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)(ரஹ்) அவர்கள் கூறுகிறார்:
இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
(ரஹ்) அவர்கள் தனது ஸஹீஹ் நூலில் மர்ஃபூஃ ஹதீஸ்களை அறிவிக்கும்போது சில இடங்களில் அதன் இஸ்னாதை-அறிவிப்பாளர்தொடரை முழுமையாக கூறாமல் “முஅல்லக்” (தொங்கவிடப்பட்ட) நிலையில் அறிவிப்பார்.
இவை இரண்டு வகைகளாக உள்ளன:
1 . வேறு இடத்தில் முழு இஸ்னாதுடன் காணப்படும் ஹதீஸ்கள்:
இவை இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
(ரஹ்) அவர்களின் ஸஹீஹ் நூலில் வேறொரு இடத்தில் முழுமையான அறிவிப்பாளர்தொடருடன் அறிவிக்கப்பட்டிருக்கும்.
2 . முஅல்லக் நிலையில் மட்டும் காணப்படும் ஹதீஸ்கள்:
இவை இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
(ரஹ்) அவர்களின் ஸஹீஹ் நூலில் முஅல்லக் நிலையில்தான் காணப்படும். வேறு எங்கும் முழு அறிவிப்பாளர்தொடர் இடம்பெற்றிருக்காது.
முதல் வகை: வேறு இடத்தில் முழு இஸ்னாதுடன் காணப்படும் முஅல்லக் ஹதீஸ்கள்:
இதை புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் குறிப்பிடுவதின் காரணங்கள்:
புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
(ரஹ்) அவர்களின் வழக்கப்படி, அவர்கள் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் அறிவிக்க மாட்டார். அவ்வாறு அறிவித்தால் ஏதேனும் ஒரு நன்மைக்காகவே-பயனுக்காகவே அறிவிப்பார்.
1 . ஒரு ஹதீஸின் மத்ன் (கருத்து) பல சட்டங்களைக் கொண்டிருந்தால், அந்த சட்டங்களைக் கூறும் பாடத்தலைப்பில் அதை மீண்டும் மீண்டும் அறிவிப்பார்கள்.
2 . ஒரு ஹதீஸின் குறிப்பிட்ட வாக்கியத்தின் கருத்து மட்டும் பல சட்டங்களைக் கொண்டிருந்தால், அந்த சட்டங்களைக் கூறும் பாடத்தலைப்பில் அதை மீண்டும் மீண்டும் அறிவிப்பார்கள்.
அவ்வாறு மீண்டும் அறிவிக்கும்போது, அதே இஸ்னாதை-அறிவிப்பாளர்தொடரை மீண்டும் கூறுவதில்லை. மாறாக, அதே செய்தியை தனக்கு அறிவித்த ஆசிரியர்கள் மூலமாக அல்லது ஆசிரியர்களின் ஆசிரியர்கள் மூலமாக வேறு அறிவிப்பாளர்தொடரைக் குறிப்பிடுவார். (பல வகையான அறிவிப்பாளர்தொடர்கள் அவர்களுக்கு மனனமாக இருந்ததால் இவ்வாறு அறிவிப்பார்)
3 . ஒரு ஹதீஸுக்கு ஒரே ஒரு இஸ்னாத் மட்டுமே இருந்து, அது பல சட்டங்களைக் கொண்டிருந்தால், அதை மீண்டும் மீண்டும் கூற வேண்டிய தேவை ஏற்படும்போது, புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
(ரஹ்) அவர்கள் அந்த ஹதீஸின் மத்ன்-கருத்தையோ அல்லது இஸ்னாதையோ சில நேரம் சுருக்கிக் கூறுவார்கள்.
ஒரு ஹதீஸை மற்றொரு இடத்தில் முழு இஸ்னாதுடன் அறிவித்திருந்தாலும், வேறு இடத்தில் முஅல்லக் நிலையில் அறிவிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
இரண்டாவது வகை: முஅல்லக் நிலையில் மட்டும் காணப்படும் ஹதீஸ்கள்.
இந்த வகை முஅல்லக் ஹதீஸ்கள் இரண்டு வடிவங்களில் உள்ளன:
1 . உறுதியான சொற்களுடன் (صيغة الجزم) அறிவிக்கப்படுவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்…” அல்லது “அவர் கூறினார்…” போன்ற உறுதியான சொற்களுடன் அறிவிக்கப்படுவது.
2 . பலவீனத்தை சுட்டிக்காட்டும் சொற்களுடன் (صيغة التمريض) அறிவிக்கப்படுவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்று சொல்லப்படுகிறது…” அல்லது “அவர் கூறினார் என்று சொல்லப்படுகிறது…” போன்ற பலவீனத்தை சுட்டிக்காட்டும் சொற்களுடன் அறிவிக்கப்படுவது.
உறுதியான சொற்களுடன் அறிவிக்கப்படும் முஅல்லக் ஹதீஸ்கள்:
உறுதியான சொற்களுடன் அறிவிக்கப்படும் இந்த வகை முஅல்லக் ஹதீஸ்கள், அவற்றை முஅல்லக் நிலையில் அறிவித்தவர் வரை ஆதாரப்பூர்வமானவை. மீதமுள்ள அறிவிப்பாளர்களின் நிலை ஆராயப்பட வேண்டும். இவற்றுள் சில இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
(ரஹ்) அவர்களின் நிபந்தனைப் படி சரியாகவும் இருக்கும்.
இந்த வகை ஹதீஸ்களை முஅல்லக் நிலையில் அறிவிப்பதற்கான காரணங்கள்:
1 . அந்த ஹதீஸ் அவர்களுக்கு செவிவழி அறிவிப்பாக-தனது ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டு கிடைத்திருக்காது.
மாறாக ஹதீஸ் பற்றிய கலந்துரையாடல் சமயத்தில் கிடைத்த செய்தியாகவோ அல்லது (பிறர் நூலிலிருந்து இவர் அறிவிக்கலாம் என்று) அனுமதி பெற்ற நூலிலிருந்து கிடைத்த செய்தியாகவோ இருக்கலாம்.
2 . அந்த ஹதீஸுக்கு ஈடான மற்றொரு ஹதீஸை அவர்கள் ஏற்கனவே அறிவித்திருக்கலாம். அதனால் இங்கு முழுமையாக அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
3 . அல்லது இது போன்று வேறு ஏதேனும் ஒரு காரணம் இருந்திருக்கலாம்.
(உ.ம்) இவற்றுள் சிலவை இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
(ரஹ்) அவர்களின் நிபந்தனைப் படி இல்லாவிட்டாலும் மற்ற அறிஞர்கள் அதை ஸஹீஹ் என்று உறுதிப்படுத்தியிருக்கலாம் அல்லது ஹஸன் என்று கூறியிருக்கலாம்.
அல்லது இவற்றுள் சிலவை இன்னார் இன்னாரிடம் கேட்டாரா இல்லையா என்ற உறுதி இல்லை என்பதால் இன்கிதாஃ ஏற்பட்டு (அதாவது அறிவிப்பாளர்தொடரில் இடைமுறிவு ஏற்பட்டதால்) பலவீனமானவையாகவும் இருக்கலாம்.
பலவீனத்தை சுட்டிக்காட்டும் சொற்களுடன் அறிவிக்கப்படும் முஅல்லக் ஹதீஸ்கள்:
இந்த வகை முஅல்லக் ஹதீஸ்கள் பெரும்பாலும் இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
(ரஹ்) அவர்களின் நிபந்தனைப்படி இல்லாத ஹதீஸ்களாகும். (விதிவிலக்காக இவற்றில் சிலவை சரியாகவும் இருக்கலாம்.)
(என்னுடைய ஆசிரியர் இதுபற்றி கூறும் போது, இந்த வகை செய்தியின் கருத்தை மட்டும் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் சில இடத்தில் முஅல்லகாக கூறியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்)
1 . இவற்றில் சில ஹதீஸ்கள் இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
(ரஹ்) அவர்களின் நிபந்தனைப்படி இல்லாவிட்டாலும் மற்றவர்களின் பார்வையில் சரியானதாக இருக்கும்.
அந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
(ரஹ்) அவர்களின் நிபந்தனைப் படி இல்லாத அறிவிப்பாளர்கள் என்பதால் அல்லது வேறு ஏதேனும் ஒரு குறைபாடு இருந்ததாலோ இருக்கலாம்.
2 . இன்னும் சிலவை ஹஸன் தர செய்திகளாக இருக்கலாம்.
3 . இன்னும் சிலவை பலவீனமானவையாக இருக்கலாம்.
இந்த பலவீனமானவை இரண்டு வகைகளாக உள்ளன:
ஒரு வகைப் பலவீனம்: வேறொரு ஆதாரத்தால் பலவீனம் நீங்கி சரியாகிவிடும்.
மற்றொரு வகைப் பலவீனம்: பலவீனமான நிலையிலிருந்து மாறாத செய்திகள். இந்த நிலையில் உள்ள ஹதீஸ்களை பற்றி கூறும்தேவை ஏற்படும்போது அதன் பலவீனத்தை புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் தெளிவாக கூறிவிடுவார்.
تقسيم التعليق في البخاري:
الأحاديث المرفوعة التي لم يوصل البخاري إسنادها في صحيحه.
1 . منها: ما يوجد في موضع آخر من كتابه.
2 . ومنها: ما لا يوجد إلا معلقا.
فأما الأول: فالسبب في تعليقه أن البخاري من عادته في صحيحه أن لا يكرر شيئا إلا لفائدة، فإذا كان المتن يشتمل على أحكام كرره في الأبواب بحسبها، أو قطعة في الأبواب إذا كانت الجملة يمكن انفصالها من الجملة الأخرى. ومع ذلك فلا يكرر الإسناد بل يغاير بين رجاله إما شيوخه أو شيوخ شيوخه ونحو ذلك.
فإذا ضاق مخرج الحديث ولم يكن له إلا إسناد واحد، واشتمل على أحكام واحتاج إلى تكريرها، فإنه والحالة والحالة هذه أما أن يختصر المتن أو يختصر الإسناد.
وهذا أحد الأسباب في تعليقه الحديث الذي وصله في موضع آخر.
وأما الثاني: وهو ما لا يوجد فيه إلا معلقا، فهو على صورتين:
1 . إما بصيغة الجزم
2 . وإما بصيغة التمريض.
فأما الأول: فهو صحيح إلى من علقه عنه، وبقي النظر فيما أبرز من رجاله، فبعضه يلتحق بشرطه.
والسبب في تعليقه له إما كونه لم يحصل له مسموعا، وإنما أخذه على طريق المذاكرة أو الإجازة، أو كان قد خرج ما يقوم مقامه، فاستغنى بذلك عن إيراد هذا المعلق مستوفي السياق أو لمعنى غير ذلك، [وبعضه] يتقاعد عن شرطه، وإن صححه غيره أو حسنه، وبعضه يكون ضعيفا من جهة الانقطاع خاصة.
وأما الثاني: وهو المعلق بصيغة التمريض مما لم يورده في موضع آخر فلا يوجد فيه ما يلتحق بشرطه إلا مواضع يسيرة، قد أوردها بهذه الصيغة لكونه ذكرها بالمعنى كما نبه عليه شيخنا رضي الله عنه.
نعم، فيه ما هو صحيح وإن تقاعد عن شرطه إما لكونه لم يخرج لرجاله أو لوجود علة فيه عنده،
ومنه: ما هم حسن،
ومنها: ما هو ضعيف وهو على قسمين:
أحدهما: ما ينجبر بأمر آخر. وثانيهما: ما لا يرتقي عن رتبة الضعيف وحيث يكون بهذه المثابة، فإنه يبين ضعفه ويصرح به حيث يورده في كتابه.
ولنذكر أمثلة لما ذكرناه:
فمثال التعليق الجازم الذي يبلغ شرطه ولم يذكره في موضع آخر: …
இதனுடன் தொடர்புடைய தகவல்:
பார்க்க: முஅல்லக்.
சமீப விமர்சனங்கள்