தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

ஸதூக் எனும் தரமுடைய அறிவிப்பாளர்

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஸதூக் எனும் தரமுடைய அறிவிப்பாளர்.

ஹதீஸ்கலை நூல்களில் ஒரு அறிவிப்பாளரைப் பற்றி -صدوق-ஸதூக் எனும் தரமுடையவர் என்று கூறப்படுவதை நாம் காணலாம்.

இதன் அரபு அகராதிப் பொருள் (ஸதக-ஸித்க்-உண்மை கூறினார் என்பதிலிருந்து ஃபஊல் எனும் வார்த்தை அமைப்பில் உள்ள, மிகைப் பொருளைத் தரும்) மிகவும் உண்மையாளர்; எப்போதும் உண்மையாளர் என்பதாகும்.

ஹதீஸ்கலை வழக்கில் இந்த வார்த்தையை ஹதீஸ்கலை அறிஞர்கள் பல பொருள்களில் கூறியுள்ளனர்.

(1 . ஒரு அறிவிப்பாளரின் தரத்தைக் குறிப்பிட ஸதூக் என்ற வார்த்தையை தனியாக சிலர் கூறியுள்ளனர்.

2 . ஸதூக் என்ற வார்த்தையுடன், மற்ற (தஃதீல் வார்த்தைகளை அதாவது) பாராட்டுவதைக் குறிக்கும் வார்த்தைகளையும் சேர்த்து சிலர் கூறியுள்ளனர்.

3 . ஸதூக் என்ற வார்த்தையுடன், மற்ற (ஜர்ஹ் அதாவது) குறையைக் குறிக்கும் வார்த்தைகளையும் சேர்த்து சிலர் கூறியுள்ளனர்)


1 . மிகப்பலமானவர்.

2 . பலமானவர்.

3 . ஹதீஸ்களை அறிவிப்பதில் சில தவறுகளையே செய்த பலமானவர்.

4 . சுமாரானவர், நடுத்தரமானவர்.

5 . நினைவாற்றல் சரியில்லாதவர்.

6 . மற்றவர்களால் குறைக் கூறப்படாதவர்.

இதுபோன்ற பல பொருள்களில் ஸதூக் என்ற வார்த்தையை அறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர்.


ஆரம்பக்கால அறிஞர்களில் சிலர் – ثقة -ஸிகத் (பலமானவர்; உறுதியானவர்; நம்பகமானவர்) என்ற வார்த்தையையும், ஸதூக் என்ற வார்த்தையையும் வேறுபாடுள்ள வார்த்தைகளாக கருதவில்லை. இரண்டையும் ஒரே பொருளில் பயன்படுத்தியுள்ளனர்.

1 . யஹ்யா பின் ஆதம் அவர்களை பற்றி, حجة ثبت صدوق ثقة ஸிகத் ஸதூக் ஸப்த் ஹுஜ்ஜத் என்று யஹ்யா பின் அபூஷைபா கூறியுள்ளார்.

2 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் இஸ்மாயீல் அவர்களை பற்றி, متقن ثبت صدوق ஸதூக் ஸப்த் முத்கின் என்று உஸ்மான் பின் அபூஷைபா பிறப்பு ஹிஜ்ரி 156
இறப்பு ஹிஜ்ரி 239
வயது: 83
கூறியுள்ளார்.

3 . ஃபள்ல் பின் துகைன் அவர்களை பற்றி, موضع حجة ثقة صدوق ஸதூக் ஸிகத் மவ்ளிஉ ஹுஜ்ஜத் என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியுள்ளார்.

4 . ரபீஉ பின் நாஃபிஃ அவர்களை பற்றி, حجة ثقة صدوق ஸதூக் ஸிகத் ஹுஜ்ஜத் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார்.

5 . முஹம்மத் பின் இஸ்ஹாக் பின் குஸைமா அவர்களை பற்றி, صدوق ثقة ஸிகத் ஸதூக் என்று இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
கூறியுள்ளார்.

6 . ஸுலைமான் பின் மூஸா அவர்களை பற்றி, صدوق ثبت ஸப்த் ஸதூக் என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-7/196, தஹ்தீபுத் தஹ்தீப்-,)

இதுபோன்று பல அறிவிப்பாளர்களை இவ்வாறு கூறியுள்ளனர்.

ஒரு அறிவிப்பாளரைப் பற்றி இதுபோன்ற கூடுதல் வார்த்தைகள் மூலம் குறிப்பிடுவது இவர்கள் மிகப்பலமானவர்கள் என்ற கருத்தை தரும்.


1 . இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அவர்கள், தான் அறிவிக்கும் செய்திகள் சிலவற்றில் அதில் இடம்பெறும் அறிவிப்பாளர்களைக் கூறும் போது ஸதூக் என்று கூறி அறிவித்துள்ளார். நபித்தோழரைக் கூட ஸதூக் என்று கூறி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பாளர்கள் அனைவரும் பலமானவர்கள் என்று மற்ற அறிஞர்களால் நற்சான்று கூறப்பட்டவர்கள் ஆவர்.

2 . இஸ்மாயீல் பின் அபான் அல்வர்ராக் என்பவரை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் ஸதூக் என்று கூறியுள்ளார். இவரின் சில செய்திகளையும் தனது ஸஹீஹில் பதிவு செய்துள்ளார். இவரை இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
போன்றோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.

எனவே பலமானவருக்கும் ஸதூக் என்று கூறும் வழக்கம் இந்த அறிஞர்களிடம் இருந்துள்ளது.


ஸதூக், ஸிகத் என்பதை வேறுபடுத்தி பார்த்தவர்கள்

1 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ

2 . அபூஹாதிம்

3 . இப்னு அபூஹாதிம்

4. இவர்களைப் பின்பற்றியவர்கள்.


அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்களிடம், அபூகல்தா (காலித் பின் தீனார் அத்தமீமீ) என்பவர் ثقة – ஸிகதா? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், அவர் ஸதூக், மஃமூன் ஆவார். ஸிகத் என்பவர்கள் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
(அல்லது மிஸ்அர் பின் கிதாம்), ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஆகியோர் ஆவர் என்று பதில் கூறினார்.

(இதனடிப்படையில் தான் சிலர் ஸிகத், ஸதூக் என்பது வெவ்வேறான தரத்தைக் குறிப்பவை என்று கூறியுள்ளனர்)

அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்களின் இந்தக் கருத்தை குறிப்பிட்ட இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள், இதன் மூலம் ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் பல தரத்தில் உள்ளனர். இவர்களில் முதல் தரமுடையவர்கள் ஸிகாத் என்பவர்கள் ஆவர். இதற்கடுத்த தரமுடையவர்கள் ஸித்க், அமானத் உடையவர்கள் ஆவர் என்று அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
கூறியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/37)

என்றாலும் அபூகல்தா அவர்களைப் பற்றி அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்களுக்கு முன்னுள்ள யஸீத் பின் ஸுரைஃ அவர்கள் ஸிகத் என்று கூறியுள்ளார். இவ்வாறே பலரும் ஸிகத் என்று கூறியுள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் இவரை ஸதூக் என்று கூறியுள்ளார்.

அறிவிப்பாளர்களைப் பற்றி பாராட்டப்படும் ஹுஜ்ஜத், ஸிகத், ஸப்த் என்ற இந்த தஃதீல் வார்த்தைகளை கூட சில அறிஞர்கள் வேறுபடுத்தி கூறியுள்ளனர். பலமானவர்களில் கூட சிறிது வித்தியாசம் உள்ளது என்ற கருத்தில் கூறியுள்ளனர்.

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்களிடம் அகீல் பின் காலித், யூனுஸ் பின் யஸீத், ஷுஐப் பின் அபூஹம்ஸா ஆகியோர் பற்றி கேட்கப்பட்டபோது அவர்கள் ஸிகத் மட்டும் தான் என்று கூறிவிட்டு ஸிகத் என்றால் யார் தெரியுமா? என்று கேட்டுவிட்டு யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்கத்தான் ஸிகத் ஆவார். ஹுஜ்ஜத் என்றால் யார் தெரியுமா? என்று கேட்டுவிட்டு ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஹுஜ்ஜத் ஆவர். மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் ஹுஜ்ஜத் ஆவார் என்று கூறினார்.

இந்த விளக்கத்தின்படி ஸதூக் என்பவரும் பலமானவர்களில் உள்ள ஒரு வகையினரே என்று சிலர் கூறுகின்றனர்.


இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள், தனது அல்ஜர்ஹு வத்தஃதீல் எனும் நூலில் மூன்று இடங்களில் அறிவிப்பாளர்களின் வகைகளைக் குறிப்பிட்டுள்ளார்.

முதல் இடம்

இந்த இடத்தில் பொதுவாக அனைத்து அறிவிப்பாளர்களைப் பற்றி சுருக்கமாக 4 வகையினராக குறிப்பிடுகிறார்…

الجرح والتعديل لابن أبي حاتم (1/ 6):
ويعرف من كان منهم عدلا في نفسه من أهل الثبت في الحديث والحفظ له والاتقان فيه – هؤلاء هم أهل العدالة.
ومنهم الصدوق في روايته الورع في دينه الثبت الذي يهم أحيانا وقد قبله الجهابذة النقاد – فهذا يحتج بحديثه أيضا.
ومنهم الصدوق الورع المغفل الغالب عليه الوهم والخطأ والسهو والغلط – فهذا يكتب من حديثه الترغيب والترهيب والزهد والآداب ولا يحتج بحديثه في الحلال والحرام.
ومنهم من قد الصق نفسه بهم ودلسها بينهم – ممن قد ظهر للنقاد العلماء بالرجال منهم الكذب، فهذا يترك حديثه ويطرح روايته ويسقط ولا يشتغل به

இரண்டாவது இடம்

இந்த இடத்தில் தபஉத் தாபிஈன்களின் வகையினரைப் பற்றி குறிப்பிடுகிறார். மேலும் இவர்களை 5 வகையினராக குறிப்பிடுகிறார்.

الجرح والتعديل لابن أبي حاتم (1/ 10):
فمنهم الثبت الحافظ الورع المتقن الجهبذ الناقد للحديث – فهذا الذي لا يختلف فيه، ويعتمد على جرحه وتعديله، ويحتج بحديثه وكلامه في الرجال.
ومنهم العدل في نفسه، الثبت في روايته، الصدوق في نقله، الورع
في دينه، الحافظ لحديثه، المتقن فيه، فذلك العدل الذي يحتج بحديثه، ويوثق في نفسه.
ومنهم الصدوق الورع الثبت الذي يهم أحيانا وقد قبله الجهابذة النقاد – فهذا يحتج بحديثه.
ومنهم الصدوق الورع المغفل الغالب عليه الوهم والخطأ والغلط والسهوفهذا يكتب من حديثه الترغيب والترهيب والزهد والآداب ولا يحتج بحديثه في الحلال والحرام.
وخامس قد الصق نفسه بهم ودلسها بينهم ممن ليس من أهل الصدق والأمانة، ومن قد ظهر للنقاد العلماء بالرجال أولى المعرفة منهم الكذب – فهذا يترك حديثه ويطرح روايته

முதல் இரண்டு இடங்களை கவனித்தால் இதில், இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
3 வகையான ஸதூக் தரத்தினரைக் குறிப்பிட்டுள்ளார்.

1 . பலமானவர்கள்; ஹதீஸை அறிவிப்பதில் உண்மையாளர்கள்-ஸதூக் என்ற வகையினர்.

2 . பலமானவர்கள்; பேணுதல் உள்ளவர்கள்; ஹதீஸை அறிவிப்பதில் சில தவறுகளை மட்டும் செய்த ஸதூக் என்ற வகையினர்.

3 . பேணுதல் உள்ளவர்கள்-நல்லோர்கள்; என்றாலும் ஹதீஸை அறிவிப்பதில் அதிகம் தவறிழைத்தவர்கள். இவர்களின் செய்திகள் ஹலால், ஹராம் சட்டங்களைப் பற்றியிருந்தால் அதை ஏற்கக்கூடாது. இவர்கள் அறிவிப்பவை ஆர்வமூட்டுதல், எச்சரிக்கை செய்தல், உலக விசயத்தில் பேணுதலாக நடத்தல், ஒழுக்கங்கள் சார்ந்த செய்திகளாக இருந்தால் எழுதிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

  • இந்த மூன்று வகையினர்களில் முதல் வகையினரை தான் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் தனது 12 வகையினரில் 3 வது, 4 வது தரத்தில் குறிப்பிடுகிறார். அதாவது 3 வது வகையினர் ஸிகத் என்று கூறப்பட்டவர்கள். 4 வது வகையினர் ஸதூக் என்று கூறப்பட்டவர்கள்.
  • இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
    இறப்பு ஹிஜ்ரி 327
    வயது: 87
    அவர்கள் கூறும், “ஹதீஸை அறிவிப்பதில் சில தவறுகளை மட்டும் செய்த ஸதூக் என்ற வகையினரை” இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் 5 வது தரத்தில் கூறியுள்ளார்.
  • இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
    இறப்பு ஹிஜ்ரி 327
    வயது: 87
    அவர்கள் கூறும், “அதிகம் தவறிழைத்தவர்கள்” என்ற வகையினரில் சிலரை தனது 8 வது தரத்திலும், சிலரை 10 வது தரத்திலும் கூறியுள்ளார்.

(பார்க்க: 12 வகை அறிவிப்பாளர்கள்)

மூன்றாவது இடம்

இந்த இடத்தில் அறிவிப்பாளர்களைப் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள் குறிப்பிடும் வார்த்தைகளின் அடிப்படையில் 8 வகையாக குறிப்பிட்டுள்ளார்.

الجرح والتعديل لابن أبي حاتم (2/ 37):
ووجدت الألفاظ في الجرح والتعديل على مراتب شتى وإذا قيل للواحد إنه ثقة أو متقن ثبت فهو ممن يحتج بحديثه، وإذا قيل له صدوق أو محله الصدق أولا بأس به فهو ممن يكتب حديثه وينظر فيه وهي المنزلة الثانية، وإذا قيل شيخ فهو بالمنزلة الثالثة يكتب حديثه وينظر فيه إلا أنه دون الثانية، وإذا قيل صالح الحديث فإنه يكتب حديثه للاعتبار، واذا أجابوا في الرجل بلين الحديث فهو ممن يكتب حديثه وينظر فيه اعتبارا، وإذا قالوا ليس بقوي فهو بمنزلة الأولى في كتبة حديثه إلا إنه دونه، وإذا قالوا ضعيف الحديث فهو دون الثاني لا يطرح حديثه بل يعتبر به، وإذا قالوا متروك الحديث أو ذاهب الحديث أو كذاب فهو ساقط الحديث لا يكتب حديثه وهي المنزلة الرابعه

இந்த இடத்தில் ஸதூக் என்ற தரமுடையோரை 2 வது வகையில் குறிப்பிட்டுவிட்டு இவர்களின் ஹதீஸ்களை ஆதாரமாக எழுதிக் கொள்ளலாம். என்றாலும் இவர்கள் மற்ற பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார்களா என்று பார்க்க வேண்டும் என இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
கூறியுள்ளார்.

ஒரு அறிவிப்பாளரை பலமானவர் என்று கூறுவதற்கு 2 அம்சங்கள் இருப்பது மிகவும் அவசியம்.

1 . அறிவிப்பாளர் அதாலத்-நம்பகத்தன்மை உள்ளவராக இருக்க வேண்டும்.
2 . ஹதீஸ்களை நினைவில் அல்லது நூலில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள் கூறிய அறிவிப்பாளர்களின் வகைகளைக் குறிப்பிட்ட இப்னுஸ் ஸலாஹ் பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
அவர்கள், ஒருவரை ஸதூக் என்று கூறப்பட்டால் இந்த வார்த்தையில் நினைவாற்றல் பற்றிய கருத்து இல்லை என்பதால் தான் இவரின் செய்தியை மற்ற பலமானவர்களின் செய்தியுடன் ஒப்பிட்டுபார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


  • 1 . ஸதூக் தரத்தில் கூறப்பட்டவரின் செய்திகளை மற்ற பலமானவர்களின் செய்தியுடன் ஒப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தே ஏற்கவேண்டும் என்ற கருத்துடையவர்கள்:

1 . இப்னு அபூஹாதிமின் நூலைக் காணும்போது ஸதூக் என்று கூறப்பட்டவர் எந்த வகை ஸதூக் என்று ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும் என்று தெரிந்துக் கொள்ளலாம்.

2 . இப்னுஸ் ஸலாஹ் பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
போன்ற வேறு சிலர் ஸதூக் என்று கூறப்பட்டவரின் செய்தியை மற்ற பலமானவர்களின் செய்தியுடன் ஒப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தே ஏற்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

(இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள் முதல் இடத்தில் கூறிய தகவல்படியே இப்னுஸ் ஸலாஹ் பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
அவர்கள் இந்தக் கருத்தை கூறியுள்ளார். மற்ற இரு இடங்களை கவனிக்கவில்லை போலும். இப்னுஸ் ஸலாஹ் பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
அவர்கள் கூறியதையே இவருக்கு பின்னால் வந்த நவவீ,பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
ஸுயூதீ, இப்னுல் முலக்கின்,பிறப்பு ஹிஜ்ரி 723
இறப்பு ஹிஜ்ரி 804
வயது: 81
ஸகாவீ, மஹ்மூத் தஹ்ஹான் (தைஸீர் முஸ்தலஹின் ஆசிரியர்) போன்ற பெரும்பாலோர் இது தான் பொதுச் சட்டம் என்று விளங்கிவிட்டனர். ஆனால் தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
போன்றோர் இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள் கூறியதின்படி அறிவிப்பாளர்களை தரம் பிரித்துள்ளனர். ஸதூக் வகையினரை வகைப்படுத்தியுள்ளனர்.)


அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
ஆகியோர் அறிவிப்பாளர்களைப் பற்றி கூறும் ஜர்ஹ், தஃதீல் வார்த்தைகளை பார்க்கும் போது முன்று வகையான ஸதூக் வகையினர் உள்ளனர் என்று தெரிந்துக் கொள்ளலாம்.

1 . ஸதூக் என்பதுடன் ஸிகத் போன்ற தஃதீல் வார்த்தைகளை சேர்த்து கூறப்பட்டவர்கள்.

2 . ஸதூக் என்பதுடன் صالح الحديث , حسن الحديث ஹஸனுல் ஹதீஸ்-ஹஸன் தரமுடையவர்; ஸாலிஹுல் ஹதீஸ் போன்ற நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற கருத்தைத் தரும் வார்த்தைகளை சேர்த்து கூறப்பட்டவர்கள்.

3 . ஸதூக் என்பதுடன் يكتب حديثه ولا يحتج به யுக்தபு ஹதீஸுஹூ வலா யுஹ்தஜ்ஜு பிஹீ- இவரின் செய்திகளை எழுதிக் கொள்ளலாம்; தனி ஆதாரமாக ஏற்கக்கூடாது என்பது போன்ற வார்த்தைகளை சேர்த்து கூறப்பட்டவர்கள்.

(இது போன்று 3 வகையினர் பற்றி அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
ஆகியோரால் கூறப்பட்டவர்கள் 160 க்கு மேல் உள்ளனர்)

மேலும் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், ஸதூக் என்று கூறப்பட்டவர்களை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்ற கருத்தைக் கொண்டிருக்கவில்லை. இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள், தனது தந்தை அபூஹாதிமிடம் அதாஉ அல்குராஸனீ பற்றி கேட்கும் போது அவர் பற்றி லா பஃஸ பிஹீ, ஸதூக் என்று கூறினார். இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள், அவரை ஆதாரமாக ஏற்கலாமா என்று கேட்டபோது ஆம் ஆதாரமாக ஏற்கலாம் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார்.

(நூல்: மஸ்தருஸ் ஸாபிக்-6/335)


  • 2 . ஸதூக் என்று கூறப்பட்டவர்களின் செய்திகள் தனி ஆதாரமாகும்; இவர்களைப் போன்று மற்றவர்கள் அறிவித்துள்ளார்களா என பார்க்கத் தேவையில்லை என்ற கருத்துடையவர்கள்:

1 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள், ஸதூக் தரத்தில் உள்ள பித்அத்வாதிகள் பற்றி கூறும்போது அவர்கள் உண்மையாளர்கள் என்பதுடன் ஹதீஸை சரியாக மனனமிட்டவர்கள் என்றால் அவர்களின் செய்திகளை ஏற்கலாம். அவர்கள் தனது பித்அத்திற்கு அழைப்பவர்கள் என்றால் அவர்களின் செய்திகளை ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார். (பித்அத் கொள்கையுடைவர்கள் உண்மையாளர்களாக, நினைவாற்றல் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களை சிலர் ஸிகத் என்று கூறமாட்டார்கள். ஸதூக் என்றே குறிப்பிடுவார்கள். இவர்களைப் பற்றியே இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.)

2 . இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், தனது அல்காமிலு ஃபீ ளுஅஃபாயிர் ரிஜால் எனும் நூலைப் பற்றி குறிப்பிடும் போது, இதில் நான், சிறிதளவு பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டவர்கள் முதல் கருத்துவேறுபாடு உள்ள அறிவிப்பாளர்கள் வரை அனைவரையும் கூறியுள்ளேன். ஸிகத், ஸதூக் தரத்தில் உள்ளவர்களை இதில் நான் கூறவில்லை என்று கூறியுள்ளார். (எனவே ஸதூக் தரத்தினரின் செய்திகளை தனி ஆதாரமாக ஏற்கலாம் என்பது இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்களின் கருத்தாகும்.)

3 . தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களும் ஸதூக் வகையினரின் செய்திகளை ஆதாரமாக ஏற்கலாம் என்ற கருத்தில் கூறியுள்ளார்…

4 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஷாகிர் போன்ற பிற்கால அறிஞர்களில் சிலர் ஸதூக் என்ற தரத்தில் உள்ளோரின் செய்திகளை ஸஹீஹ் தரத்தில் கூறுகின்றனர்.

ஸதூக் தரமுடையோரின் செய்திகளை தனி ஆதாரமாக ஏற்கலாம் என்ற கருத்துடையோர்களில் சிலர் இவர்களின் செய்திகளை ஸஹீஹ் என்றும் வேறுசிலர் ஹஸன் தரம் என்றும் கூறுவர்.

(நூல்கள்: அஸ்ஸிகாத்-6/140, அல்காமில்-1/78-79, மீஸானுல் இஃதிதால்-1/114, அல்பாயிஸுல் ஹஸீஸ்-1/106)


இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களின் பார்வையில் ஸதூக் வகையினர்.

الثالثة: من أُفرِدَ بصفة: كثقة، أو متقن، أو ثَبْت، أو عَدْل.
الرابعة: من قَصُرَ عن درجة الثالثة قليلًا، وإليه الإشارة: بصَدُوق، أو لا بأس به، أو ليس به بأس.

نخبة الفكر في مصطلح أهل الأثر (ن مكتب الرحاب) (ص: 2)
وَخَبَرُ الآحَادِ بِنَقْلِ عَدْلٍ تَامِّ الضَّبْطِ، مُتَّصِلَ السَّنَدِ، غَيْرَ مُعَلَّلٍ وَلاَ شَاذٍّ؛ هُوَ الصَّحِيحُ لِذَاتِهِ.
وَتَتَفَاوَتُ رُتَبُهُ بِتَفَاوُتِ هَذِهِ الأَوْصَافِ، وَمَنْ ثَمَّ قُدِّمَ صَحِيحُ البُخَارِيِّ، ثُمَّ مُسْلِمٌ، ثُمَّ شَرْطُهُمَا.
فَإِنْ خَفَّ الضَّبْطُ؛ فَالْحَسَنُ لِذَاتِه، وَبِكَثْرَةِ طُرُقِهِ يُصَحَّحُ.

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் தனது தக்ரீபில் குறிப்பிட்டுள்ள மேற்கண்ட தகவலில் ஸதூக் எனும் தரமுடையோரை 12 வகை அறிவிப்பாளர்களில் 4 வது வகையில் குறிப்பிட்டுள்ளார். இதைக் கூறும்போது பலமானவர்களின் தரத்தைவிட சிறிது குறைந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.

நுக்பதுல் ஃபிக்ர் என்ற நூலில், ஹஸன் தர செய்தி எது என்று கூறும்போது நினைவாற்றல் சிறிது குறைந்தவர் இடம்பெற்றால் அது ஹஸன் தர செய்தி என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்முன்னுரை, நுக்பதுல் ஃபிக்ர்-1/2)

இதனடிப்படையில் ஸதூக் தரமுடையோர் இடம்பெறும் ஹதீஸ்கள் ஹஸன் தரமுடையவை என்று அதிகமானோர் கருதுகின்றனர். ஆனால் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களின் நூல்களையும், அவர் ஸதூக் என்று கூறிய அறிவிப்பாளர்களையும் ஆய்வு செய்யும்போது சிலர் பலமானவர்கள் என்ற தரத்திலும் உள்ளனர் என்பதைக் காணலாம்.

இதற்கான சான்றுகள்:

1 . தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களால் ஸிகத்-பலமானவர் என்று கூறப்பட்டவர்களையும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் ஸதூக் தரத்தில் கூறியுள்ளார். (தற்போது இவர்களில் 63 பேர் கைவசம் உள்ளது)

2 . புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகியோர் ஆதாரமாக ஏற்ற சில அறிவிப்பாளர்களையும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் ஸதூக் தரத்தில் கூறியுள்ளார். (தற்போது இவர்களில் 50 பேர் கைவசம் உள்ளது)

3 . தனது தக்ரீபில் ஸதூக் என்று கூறியிருந்தாலும் வேறு நூல்களில் இவர்களை ஸிகத்-பலமானவர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
கூறியுள்ளார். (தற்போது இவர்களில் 11 பேர் கைவசம் உள்ளது)

4 . புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகிய அறிவிப்பாளர்களில் சிலரை பலவீனமானவர்கள் என்று வேறுசிலர் விமர்சித்துள்ளதை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் மறுத்து பலவீனமானவர் என்று கருத்துக்கு ஆதாரம் இல்லை என்றோ அல்லது ஆதாரம் சரியானதல்ல என்றோ காரணத்தைக் கூறியிருப்பார். இந்த வகையினரையும் ஸதூக் என்ற தரத்தில் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
கூறியுள்ளார். (தற்போது இவர்களில் 18 பேர் கைவசம் உள்ளது)

5 . தக்ரீபில் ஸதூக் என்று கூறப்பட்ட சிலரின் செய்திகளை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் தன்னுடைய வேறு நூல்களில் ஸஹீஹ் என்று கூறியுள்ளார். (தற்போது இவர்களில் 10 பேர் கைவசம் உள்ளது. எனவே இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் ஸதூக் தரமுடையோரின் செய்திகளை ஹஸன் தரம் என்று கருதவில்லை. ஸஹீஹ் என்று கருதியுள்ளார் எனத் தெரிகிறது.)

6 . இமாம் புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோர் சிலர் இடம்பெறும் செய்திகளை சரியானது என்று கூறியுள்ளனர். இவர்களில் சிலரை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஸதூக் தரத்தில் கூறியுள்ளார். (தற்போது இவர்களில் 11 பேர் கைவசம் உள்ளது).

மேற்கண்ட இந்த தகவல்களிலிருந்து இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் ஒருவரை ஸதூக் என்று கூறினால் அது அவரின் தனி வழக்குச் சொல் ஆகும். ஹதீஸ்கலையில் சில அறிஞர்களுக்கென்று தனிப்பட்ட வழக்குச் சொல் இருக்கும். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் ஒருவரை லா பஃஸ பிஹீ என்று கூறினால் அவர் பலமானவர் என்ற கருத்தும் வரும். மற்றவர்கள் இந்த வார்த்தையை சுமாரானவருக்கு கூறுவர். இது போன்றே இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களின் தனி வழக்குச் சொல் தான் ஸதூக் என்பதும்.

ஒரு அறிவிப்பாளரை அதிகமானோர் பலமானவர் என்று கூறியிருக்கும் போது ஒருவரோ அல்லது சிலரோ ஸதூக் என்று கூறியிருந்தால் அதிகமானோர் கருத்துக்கே முதலிடம் தரவேண்டும் என்றிருந்தாலும் ஸதூக் என்று கூறியவர்களின் கருத்துக்கும் சில நேரம் மதிப்பளித்து இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் அவரை ஸதூக் தரத்தில் கூறுவார்.

இப்படி பல காரணங்களால் தன்னுடைய ஆய்வின்படி இவ்வாறு சிலரை ஸதூக் என்று கூறியுள்ளார்.

ஆய்வின் சுருக்கம்:

1 . அறிவிப்பாளரின் தரம் பற்றி கூறப்படும் ஸதூக் என்ற வார்த்தை பல பொருள்களில் கூறப்பட்டுள்ளது.

2 . ஸதூக் என்று கூறிய அறிஞரின் வழக்குச் சொல் என்ன என்பதைத் தெரிந்தே நாம் முடிவு செய்ய வேண்டும்.

3 . ஸதூக் தரமுடையோரின் செய்திகள் அதற்கென்றுள்ள சான்றுகளின் படி ஸஹீஹ் அல்லது ஹஸன் தர செய்திகளாகும். ஸதூக் தரத்தைவிட கூடுதல் தரமுடைய மற்ற பலமானவர்களின் வகையினருக்கு மாற்றமாக இருந்தால் இவர்களின் செய்திகள் ஏற்கப்படாது.

(ஆதார நூல்கள்: மர்தபதுஸ் ஸதூக் இன்த இப்னி ஹஜர், அர்ராவிஸ் ஸதூக் இன்த இப்னி ஹஜரி வ அயிம்மதில் ஜர்ஹி வத்தஃதீல், அஸ்ஸதூக் இன்தல் முஹத்திஸீன்)


இதனுடன் தொடர்புடைய தகவல்கள்:

1 . பார்க்க: அறிவிப்பாளர்களின் தர விளக்க வார்த்தைகள் .

2 . பார்க்க: ஹதீஸை ஆய்வு செய்யும் முறை .



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.