6023. யாரேனும் உளூ செய்தபின் “சுப்ஹானல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு அஸ்தஃக்பிருக வ அதூபு இலைக” என்று ஓதினால் அது சீல்(முத்திரை)யிட்டு அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் வைத்துப் பாதுகாக்கப்படும். மறுமை நாள் வரை அதன் சீல் உடைக்கப்படாது.
யார் கஹ்ஃப் அத்தியாயத்தை அது இறக்கப்பட்ட முறையில் ஓதுவாரோ, அவர் ஓதிய பின்னர் தஜ்ஜால் வந்தால் அவர் மீது அவன் சாட்டப்படமாட்டான். மேலும் அவருக்கு எதிராக அவன் எந்த சதியும் செய்ய முடியாது. மேலும் யார் கஹ்ஃப் அத்தியாயத்தின் இறுதி வசனங்களை ஓதுவாரோ, அவர் ஓதிய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி உண்டாகும், என அபூ ஸயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : கைஸ் பின் அப்பாத் (ரஹ்)
مَنْ تَوَضَّأَ، ثُمَّ فَرَغَ مِنْ وُضُوئِهِ، ثُمَّ قَالَ: سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ، خُتِمَ عَلَيْهَا بِخَاتَمٍ فَوُضِعَتْ تَحْتَ الْعَرْشِ فَلَا تُكْسَرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ كَمَا أُنْزِلَتْ ثُمَّ أَدْرَكَ الدَّجَّالَ لَمْ يُسَلَّطْ عَلَيْهِ وَلَمْ يَكُنْ لَهُ عَلَيْهِ سَبِيلٌ، وَمَنْ قَرَأَ خَاتِمَةَ سُورَةِ الْكَهْفِ أَضَاءَ نُورُهُ مِنْ حَيْثُ قَرَأَهَا مَا بَيْنَهُ وَبَيْنَ مَكَّةَ
சமீப விமர்சனங்கள்