தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-6023

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: More Info

6023. யாரேனும் உளூ செய்தபின் “சுப்ஹானல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு அஸ்தஃக்பிருக வ அதூபு இலைக” என்று ஓதினால் அது சீல்(முத்திரை)யிட்டு அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் வைத்துப் பாதுகாக்கப்படும். மறுமை நாள் வரை அதன் சீல் உடைக்கப்படாது.

யார் கஹ்ஃப் அத்தியாயத்தை அது இறக்கப்பட்ட முறையில் ஓதுவாரோ, அவர் ஓதிய பின்னர் தஜ்ஜால் வந்தால் அவர் மீது அவன் சாட்டப்படமாட்டான். மேலும் அவருக்கு எதிராக அவன் எந்த சதியும் செய்ய முடியாது. மேலும் யார் கஹ்ஃப் அத்தியாயத்தின் இறுதி வசனங்களை ஓதுவாரோ, அவர் ஓதிய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி உண்டாகும், என அபூ ஸயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : (ரஹ்)

கைஸ் பின் அப்பாத் (ரஹ்)

قيس بن عباد القيسي

இறப்பு: ஹிஜ்ரி 80-க்குப் பிறகு

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: கைஸ் பின் அப்பாத் அல்கைஸீ

தந்தை பெயர்: அப்பாத்

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: பஸரா, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 80-க்குப் பிறகு

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

கைஸ் பின் அப்பாத் ரஹ் அவர்கள் ஒரு தாபிஈ ஆவார். இவர் பஸராவைச் சேர்ந்தவர். இவர் ஹிஜ்ரி 80-க்குப் பிறகு மரணமடைந்தார்.

இவர் பலமானவர் என்று அறிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் குதிரைகளை வளர்த்து அல்லாஹ்வின் பாதையில் பயன்படுத்தினார். இவர் தொழுகைக்குப் பிறகு நீண்ட நேரம் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ர் செய்பவராக இருந்தார்.

மேலும், இருவரிடையே சண்டை ஏற்பட்டால், அநியாயம் செய்பவரை சந்தித்து உண்மைக்குத் திரும்புமாறு அறிவுறுத்துவார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): உபை பின் கஅப், ஸஃத் பின் அபீ வக்காஸ், அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப், அப்துல்லாஹ் பின் ஸலாம், அப்துல்லாஹ் பின் உமர் பின் கத்தாப், அலீ பின் அபீ தாலிப், அம்மார் பின் யாஸிர், உமர் பின் கத்தாப், அபூ தர் அல்-கிஃபாரீ, அபூ ஸயீத் அல்குத்ரீ, நபித்தோழர்கள்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அபூ மஜ்லஸ் லாஹிக் பின் ஹுமைத், அல்ஹஸன் அல்-பஸரீ, முஹம்மத் பின் ஸீரீன், அப்துல்லாஹ் பின் கைஸ் பின் அப்பாத், அப்துல்லாஹ் பின் மத்தர் அல்கைஸீ, அன்னழ்ர் பின் அப்துல்லாஹ் பின் மத்தர் அல்கைஸீ, இயஸ் பின் கதாதா அல்-பக்ரீ, பக்ர் பின் அப்துல்லாஹ் அல்முஸனீ, அபூ நழ்ரா அல்அப்தீ

வேறு பெயர்கள்: கைஸ் பின் இபாதா


ஆதாரம்: muslimscholars.info (11609) · Should verify


عَنِ الثَّوْرِيِّ، عَنْ أَبِي هَاشِمٍ الْوَاسِطِيِّ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عَبَّادٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيُّ قَالَ:

مَنْ تَوَضَّأَ، ثُمَّ فَرَغَ مِنْ وُضُوئِهِ، ثُمَّ قَالَ: سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ، خُتِمَ عَلَيْهَا بِخَاتَمٍ فَوُضِعَتْ تَحْتَ الْعَرْشِ فَلَا تُكْسَرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ كَمَا أُنْزِلَتْ ثُمَّ أَدْرَكَ الدَّجَّالَ لَمْ يُسَلَّطْ عَلَيْهِ وَلَمْ يَكُنْ لَهُ عَلَيْهِ سَبِيلٌ، وَمَنْ قَرَأَ خَاتِمَةَ سُورَةِ الْكَهْفِ أَضَاءَ نُورُهُ مِنْ حَيْثُ قَرَأَهَا مَا بَيْنَهُ وَبَيْنَ مَكَّةَ


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-6023.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-5862.



மேலும் பார்க்க : ஹாகிம்-2072 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.