தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-2072

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அபூ ஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது :

“யார் கஹ்ஃப் அத்தியாயத்தை அது இறக்கப்பட்ட முறையில் ஓதுவாரோ அவருக்குக் கியாம நாளில் அவருடைய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி உண்டாகும்.

யார் அதனுடைய இறுதி பத்து வசனங்களை ஓதிய பின்னர் தஜ்ஜால் வந்தால் அவர் மீது அவன் சாட்டப்படமாட்டான். (அதாவது தஜ்ஜாலின் தீங்கு ஏற்படாது)

யாரேனும் உளூ செய்தபின் “சுப்ஹானல்லாஹும்ம வபிஹம்திக லாயிலாஹ இல்லா அன்த அஸ்தஃக்பிருக வ அதூபு இலைக” என்று ஓதினால் அது ஒரு ஏட்டில் எழுதப்பட்டு சீல்(முத்திரை)யிட்டுப் பாதுகாக்கப்படும். மறுமை நாள் வரை அதன் சீல் உடைக்கப்படாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


ஹாகிம் இமாம் கூறுகிறார் :

இந்த செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ, அபூஹாஷிமிடமிருந்து அறிவிக்கும்போது அபூ ஸயீத் (ரலி) அவர்களின் சொல்லாக அறிவிக்கிறார். (பார்க்க ஹாகிம் ஹதீஸ் எண்-2073)

(ஹாகிம்: 2072)

أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ أَحْمَدُ بْنُ عُثْمَانَ الْمُقْرِيُّ، بِبَغْدَادَ، ثنا أَبُو قِلَابَةَ عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدٍ، ثنا يَحْيَى بْنُ كَثِيرٍ، ثنا شُعْبَةُ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ قَيْسِ بْنِ عَبَّادٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ كَمَا أُنْزِلَتْ، كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ مِنْ مَقَامِهِ إِلَى مَكَّةَ، وَمَنْ قَرَأَ عَشْرَ آيَاتٍ مِنْ آخِرِهَا ثُمَّ خَرَجَ الدَّجَّالُ لَمْ يُسَلَّطْ عَلَيْهِ، وَمَنْ تَوَضَّأَ ثُمَّ قَالَ: سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ كُتِبَ فِي رَقٍّ، ثُمَّ طُبِعَ بِطَابَعٍ فَلَمْ يُكْسَرْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ

هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ وَلَمْ يُخَرِّجَاهُ “. وَرَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي هَاشِمٍ فَأَوْقَفَهُ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-2072.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-2005.




  • இந்தச் செய்தி அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வழியாக இரண்டு முறைகளில் இடம் பெற்றுள்ளது. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகவும், மற்றொன்று நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நபித்தோழரின் கூற்று என்பதே சரியானது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
  • நபி (ஸல்) அவர்களின் கூற்றாக வருவது தவறாகும். நபித்தோழரின் கூற்று என்பதே சரியானதாகும் என்று இமாம் நஸயீ குறிப்பிடுகிறார்கள். (நூல்: அமலுல் யவ்மி வல்லைலா, பாகம்: 1, பக்கம்: 173)
  • நபி (ஸல்) அவர்களின் கூற்றாக வந்துள்ளதை ஹாஸிம் அவர்கள் பலவீனமாக்கி உள்ளார்கள். இமாம் நஸயீ அவர்கள் நபித்தோழரின் கூற்று என்பது தான் சரி என்று கூறுகிறார்கள். இமாம் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், நபித்தோழரின் கூற்று என்பதற்கே முன்னுரிமை வழங்குகிறார்கள். (தல்கீஸுல் ஹபீர், பாகம்: 1, பக்கம்: 102)
  • சிலர் இது போன்ற செய்தியை நபித்தோழர் ஆய்வின்படி கூறமுடியாது. இது நமக்கு முன் வேதம்கொடுக்கப்பட்டோரின் சொல் சார்ந்த விசயமும் அல்ல. எனவே இதுவும் நபி (ஸல்) அவர்களின் சொல் போன்று தான் என்று கூறுகின்றனர்.

(பார்க்க-1 . ஹுக்முல் மர்ஃபூ-மக்தபா2 . ஹுக்முல் மர்ஃபூஃ-இஸ்லாம் வெப்)


1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ரஸ்ஸாக்-730 , 6023 , தாரிமீ-3450 , குப்ரா நஸாயீ-10722 , 10723  , 10724 , அல்முஃஜமுல் அவ்ஸத்-1455 , ஹாகிம்-2072 , 2073 , 3392 , 8562 , குப்ரா பைஹகீ-5996 , ஸகீர்-பைஹகீ-606 , ஷுஅபுல் ஈமான்-2220 , 2221 , 2499 , 2776 , 2777 ,

2 . முஆத் பின் அனஸ் (ரலி) அவர்கள் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-15626 .

3 . பொதுவாக கஃஹ்ப் அத்தியாயத்தின் சிறப்பு பற்றி:

பார்க்க :  அஹ்மத்-21712  , அஹ்மத்-18474 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.