பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தமது வீட்டில் வாகனப் பிராணி ஒன்று இருக்க, “அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தை ஓதினார். உடனே அந்தப் பிராணி மிரள ஆரம்பித்தது. அந்த மனிதர் (திரும்பிப்) பார்த்தார். அப்போது மேகத்திரள் ஒன்று வந்து அவரை மூடிக்கொண்டது.
இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், “இன்னாரே, நீர் தொடர்ந்து ஓதிக்கொண்டேயிரு(ந்திருக்க வேண்டு)ம். அந்த மேகம் குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உம்மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்” என்று சொன்னார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 18474)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ الْبَرَاءَ، يَقُولُ:
قَرَأَ رَجُلٌ الْكَهْفَ وَفِي الدَّارِ دَابَّةٌ، فَجَعَلَتْ تَنْفِرُ، فَنَظَرَ فَإِذَا ضَبَابَةٌ، أَوْ سَحَابَةٌ، قَدْ غَشِيَتْهُ. قَالَا: فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «اقْرَأْ فُلَانُ، فَإِنَّهَا السَّكِينَةُ تَنَزَّلَتْ عِنْدَ الْقُرْآنِ، أَوْ تَنَزَّلَتْ لِلْقُرْآنِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-18474.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-18100.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-749, அஹ்மத்-18509, 18591, 18637, 18474, புகாரி-3614, 4839, 5011, முஸ்லிம்-1458, 1459, திர்மிதீ-2885, குப்ரா நஸாயீ-11439, இப்னு ஹிப்பான்-769, முஸ்னத் அபீ யஃலா-1722, ஷுஅபுல் ஈமான்-2217, 2218,
கஹ்ஃப் அத்தியாயத்தைப் பற்றி வேறு சில செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-21712, ஹாகிம்-2072,
சமீப விமர்சனங்கள்