நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் சூரத்துல் கஹ்ஃபின் ஆரம்ப வசனங்களையும் அதன் இறுதியையும் ஓதுகிறாரோ அவருக்குக் காலில் இருந்து தலை வரை ஒளி உண்டாகும். யார் அதை முழுவதையும் ஓதுகிறாரோ வானத்திலிருந்து பூமி வரை ஒளி உண்டாகும்.
அறிவிப்பவர் : முஆத் பின் அனஸ் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 15626)حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا زَبَّانُ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذٍ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:
«مَنْ قَرَأَ أَوَّلَ سُورَةِ الْكَهْفِ وَآخِرَهَا، كَانَتْ لَهُ نُورًا مِنْ قَدَمِهِ إِلَى رَأْسِهِ، وَمَنْ قَرَأَهَا كُلَّهَا كَانَتْ لَهُ نُورًا مَا بَيْنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-15073.
Musnad-Ahmad-Shamila-15626.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-15318.
إسناد ضعيف فيه عبد الله بن لهيعة الحضرمي وهو ضعيف الحديث ، وزبان بن فائد الحمراوي وهو ضعيف الحديث مع صلاحه وعدالته ، وسهل بن معاذ الجهني وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-அப்துல்லாஹ் பின் லஹீஆ… , ஸப்பான் பின் ஃபாயித், ஸஹ்ல் பின் முஆத் போன்றோர் பலவீனமானவர்கள் என்பதால் இது பலவீனமான செய்தியாகும்.
- ஸப்பான் பின் ஃபாயித் பற்றி இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் இவர் நிராகரிக்கப்பட்டவர் என்றும், - இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் பலவீனமானவர் என்றும் - இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர் என்றும் இவர் ஸஹ்ல் பின் முஆத் என்பவர் வழியாக ஒரு ஏட்டின் மூலம் தனித்து அறிவிக்கிறார்; இது இட்டுக்கட்டதைப் போன்றதாகும்; இவரை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது என்றும் கூறுகிறார்கள். - இவரிடத்தில் நிராகரிக்கப்பட வேண்டிய செய்திகள் உள்ளன என்று ஸாஜீ குறிப்பிடுகிறார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம்: 3, பக்கம்: 265)
- ஸஹ்ல் பின் முஆத் பற்றி, இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும், - இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் இவரை ஸிகாத் என்ற கிதாபில் கூறிவிட்டு இவருடைய ஹதீஸை ஸப்பான் பின் ஃபாயித் வழியாக அறிவித்தால் கணக்கில் கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். (இந்த ஹதீஸ், ஸப்பான் பின் ஃபாயித் வழியாகவே இடம் பெற்றுள்ளது)
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.பாகம்:4, பக்கம்: 224
2 . இந்தக் கருத்தில் முஆத் பின் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ரஸ்ஸாக்-6022 , அஹ்மத்-15626 , அல்முஃஜமுல் கபீர்-443 ,
மேலும் பார்க்க : ஹாகிம்-2072 .
சமீப விமர்சனங்கள்