ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
15729. இஸ்மாயீல் பின் அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் சபை முடிந்து எழும்போது “சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க, லாயிலாஹ இல்லா அன்த்த, அஸ்தக்ஃபிருக்க வ அதூபு இலைக்க. (பொருள்: யா அல்லாஹ்! நீ தூய்மையானவன். உன் புகழைக்க கொண்டு உன்னைப் புகழ்கின்றேன். உன்னைத் தவிர வேறெந்த கடவுளும் இல்லை. உன்னிடத்தில் மன்னிப்பு தேடி உன்னிடமே திரும்புகின்றேன்)
என்று கூறினால் அந்த சபையில் ஏற்பட்ட தவறுக்காக அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி எனக்கு கிடைத்தது.
இதை நான், யஸீத் பின் குஸைஃபா (ரஹ்) அவர்களிடம் கூறியபோது அவர்கள், ஸாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார் என்று கூறினார்.
بَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَا مِنْ إِنْسَانٍ يَكُونُ فِي مَجْلِسٍ فَيَقُولُ حِينَ يُرِيدُ أَنْ يَقُومَ: سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ، إِلَّا غُفِرَ لَهُ مَا كَانَ فِي ذَلِكَ الْمَجْلِسِ “، فَحَدَّثْتُ هَذَا الْحَدِيثَ يَزِيدَ بْنَ خُصَيْفَةَ، قَالَ: هَكَذَا حَدَّثَنِي السَّائِبُ بْنُ يَزِيدَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
சமீப விமர்சனங்கள்