14509. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வலீமா விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டாவது நாள் கொடுப்பது நல்லதாகும்; மூன்றாவது நாள் கொடுப்பது விளம்பரமும், முகஸ்துதியுமாகும்.
அறிவிப்பவர்: ஸுஹைர் பின் உஸ்மான் (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கதாதா (ரஹ்) அவர்கள், இதில் வரும் ஸகீப் கிளையை சேர்ந்த கண் தெரியாத மனிதர் பற்றி நல்லவர் என்று கூறப்பட்டது என்றும், இவர் ஸுஹைர் பின் உஸ்மான் என்றில்லாவிட்டால் இவரின் பெயர் தனக்கு தெரியாது என்றும் கூறினார்.
الْوَلِيمَةُ أَوَّلَ يَوْمٍ حَقٌّ، وَالثَّانِيَ مَعْرُوفٌ، وَالْيَوْمَ الثَّالِثَ سُمْعَةٌ وَرِئَاءٌ
சமீப விமர்சனங்கள்