Month: February 2022

Muwatta-Malik-552

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

552. ‘ஒரு இமாம் ஸஜ்தா வசனத்தை ஓதி மிம்பரில் இருந்து இறங்கி ஸஜ்தா செய்வது கட்டாயமில்லை” என இமாம் மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


قَالَ مَالِكٌ: لَيْسَ الْعَمَلُ عَلَى أَنْ يَنْزِلَ الإِمَامُ إِذَا قَرَأَ السَّجْدَةَ عَلَى الْمِنْبَرِ، فَيَسْجُدَ.


Muwatta-Malik-553

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

553. ஸஜ்தா வசனங்களில் பதினொன்று எதுவும் முஃபஸ்ஸல் வசனங்களில் இல்லை. இது நம்மிடம் உள்ள சட்டமாகும் என இமாம் மாலிக் (ரலி) கூறுகின்றார்கள்.


قَالَ مَالِكٌ: الأَمْرُ عِنْدَنَا أَنَّ عَزَائِمَ سُجُودِ الْقُرْآنِ إِحْدَى عَشْرَةَ سَجْدَةً، لَيْسَ فِي الْمُفَصَّلِ مِنْهَا شَيْءٌ.


Muwatta-Malik-554

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

554. …சுப்ஹுத் தொழுகைக்குப் பின்னும், அஸருக்குப் பின்பும் குர்ஆனில் உள்ள ஸஜ்தா வசனங்களை ஓதிட ஒருவருக்கு அனுமதியில்லை. ஏனெனில் நபி(ஸல்) அவாகள் சுப்ஹுக்குப் பின் சூரியன் உதயமாகும் வரை தொழவும், அஸருக்குப் பின் சூரியன் மறையும் வரை தொழவும் தடை செய்துள்ளனர். ஸஜ்தாவும், தொழுகை போல் தான். எனவே இந்த இரண்டு நேரங்களிலும் ஸஜ்தா வசனங்களை ஓதிட ஒருவருக்கு அனுமதியில்லை…


قَالَ مَالِكٌ: لاَ يَنْبَغِي لأَحَدٍ يَقْرَأُ مِنْ سُجُودِ الْقُرْآنِ شَيْئًا بَعْدَ صَلاَةِ الصُّبْحِ، وَلاَ بَعْدَ صَلاَةِ الْعَصْرِ، وَذَلِكَ أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الصُّبْحِ، حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَعَنِ الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ، حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَالسَّجْدَةُ مِنَ الصَّلاَةِ، فَلاَ يَنْبَغِي لأَحَدٍ أَنْ يَقْرَأَ سَجْدَةً فِي تَيْنِكَ السَّاعَتَيْنِ.


Muwatta-Malik-555

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

555. …ஆண், பெண் இருவரும் சுத்தமாக இருந்தாலே தவிர ஸஜ்தா செய்யக் கூடாது”” என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்…


سُئِلَ مَالِكٌ: عَمَّنْ قَرَأَ سَجْدَةً وَامْرَأَةٌ حَائِضٌ تَسْمَعُ، هَلْ لَهَا أَنْ تَسْجُدَ؟ قَالَ مَالِكٌ: لاَ يَسْجُدُ الرَّجُلُ، وَلاَ الْمَرْأَةُ، إِلاَّ وَهُمَا طَاهِرَانِ.


Muwatta-Malik-556

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

556. ஸஜ்தா வசனத்தை ஒரு பெண் ஓதுகிறார். அதை ஒருவர் கேட்கிறார். இதற்காக இவரும் ஸஜ்தா செய்ய வேண்டுமா? என்று கேட்கப்பட்டதற்கு, ”ஸஜ்தா செய்ய இவருக்கு அவசியமில்லை. ஸஜ்தா ஒரு கூட்டத்தார் மீது கடமை என்பது, அவர்கள் இவருடன் உள்ளனர். அவரை இமாமாக பின் தொடர்கின்றனர். ஸஜ்தா வசனத்தை அவர் ஓதினால் அவருடன் சேர்ந்து இவர்களும் ஸஜ்தா செய்ய வேண்டும். இமாமாக இல்லாத நிலையில் ஒருவர் தனிப்பட்டவனாக ஸஜ்தா வசனத்தை ஓதிட ஒருவர் கேட்டால் அவருக்கு ஸஜ்தா செய்வது கடடாயமில்லை”” என்று மாலிக் (ரஹ்) பதில் கூறினார்கள்.


وسُئِلَ مَالِكٌ عَنِ امْرَأَةٍ قَرَأَتْ سَجْدَةً، وَرَجُلٌ مَعَهَا يَسْمَعُ، أَعَلَيْهِ أَنْ يَسْجُدَ مَعَهَا؟ قَالَ مَالِكٌ: لَيْسَ عَلَيْهِ أَنْ يَسْجُدَ مَعَهَا، إِنَّمَا تَجِبُ السَّجْدَةُ عَلَى الْقَوْمِ يَكُونُونَ مَعَ الرَّجُلِ يَأْتَمُّونَ بِهِ، فَيَقْرَأُ سَجْدَةً، فَيَسْجُدُونَ مَعَهُ، وَلَيْسَ عَلَى مَنْ سَمِعَ سَجْدَةً مِنْ إِنْسَانٍ يَقْرَؤُهَا، لَيْسَ لَهُ بِإِمَامٍ أَنْ يَسْجُدَ تِلْكَ السَّجْدَةَ.


Muwatta-Malik-43

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

43. மூக்கில் இரத்தம் வருவதினாலோ, புண்ணிலிருந்து வெளி வரும் சீல்களினாலோ, இரத்தத்தினாலோ ஒளுச் செய்யத் தேவையில்லை. முன் பின் துவாரங்களிலிருந்து வெளிப்படும் அசுத்தம் மற்றும் தூக்கம் காரணமாகவே தவிர ஒளுச் செய்யத் தேவையில்லை என்பதே நம்மிடம் சட்டமாகும் என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


قَالَ مالِكٌ: الأَمْرُ عِنْدَنَا أَنَّهُ لاَ يَتَوَضَّأُ مِنْ رُعَافٍ وَلاَ مِنْ دَمٍ وَلاَ مِنْ قَيْحٍ يَسِيلُ مِنَ الْجَسَدِ، وَلاَ يَتَوَضَّأُ إِلاَّ مِنْ حَدَثٍ يَخْرُجُ مِنْ ذَكَرٍ أَوْ دُبُرٍ أَوْ نَوْمٍ.


Muwatta-Malik-39

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

39. ஒருவர் வாய் கொப்பளிக்க அல்லது மூக்கை சுத்தம் செய்ய மறந்து விட்டு தொழுதும் வருகிறார். (இவர் தொழுகை கூடுமா?) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. தான் தொழுத தொகையை மீண்டும் செய்ய அவர் மீது கடமை இல்லை. ஆனால் இனி விரும்பினால் அவர் வாய் கொப்பளிக்கட்டும் அல்லது மூக்கை சுத்தம் செய்யட்டும்”” என்று பதில் கூறினார்கள் என யஹ்யா கூறுகிறார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ نَسِيَ أَنْ يَتَمَضْمَضَ وَيَسْتَنْثِرَ حَتَّى صَلَّى، قَالَ: لَيْسَ عَلَيْهِ أَنْ يُعِيدَ صَلاَتَهُ، وَلْيُمَضْمِضْ وَيَسْتَنْثِرْ مَا يَسْتَقْبِلُ إِنْ كَانَ يُرِيدُ أَنْ يُصَلِّيَ.


Muwatta-Malik-37

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

37. உமர் (ரலி) அவர்கள் தன் வேட்டியின் கீழ் உள்ளதை (மலம் கழித்தப்பின்) தண்ணீரால் கழுவினார்கள் என தன் தந்தை அப்துர் ரஹ்மான் (ரலி) கூறியதாக உஸ்மான் கூறுகின்றார்கள்.


أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَتَوَضَّأُ بِالْمَاءِ وُضُوءً لِمَا تَحْتَ إِزَارِهِ.


Muwatta-Malik-35

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

35.


سَمِعْتُ مَالِكًا يَقُولُ فِي الرَّجُلِ يَتَمَضْمَضُ وَيَسْتَنْثِرُ مِنْ غَرْفَةٍ وَاحِدَةٍ: إِنَّهُ لاَ بَأْسَ بِذَلِكَ.


Muwatta-Malik-31

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

31. ஸாலிம் இப்னு அப்துல்லா கூறினார்கள்:

எவரேனும் ஒருவர் தொழும் போது வாயை (துணியால்) மூடியிருக்கக் கூடாது. அவாரின் வாயில் இருந்து அது சுழலும் அளவுக்கு அவாரின் வாயில் உள்ள துணியை கடுமையாக உருவுவார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு முஜப்பிர் கூறுகின்றார்கள்.


أَنَّهُ كَانَ يَرَى سَالِمَ بْنَ عَبْدِ اللهِ، إِذَا رَأَى الإِنْسَانَ يُغَطِّي فَاهُ وَهُوَ يُصَلِّي، جَبَذَ الثَّوْبَ عَن فِيهِ جَبْذًا شَدِيدًا، حَتَّى يَنْزِعَهُ عَن فِيهِ.


Next Page » « Previous Page