Month: June 2024

Muwatta-Malik-718

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 17

ஸகாத் பொருளை பெறுவது யாருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது?

718. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐந்து நபர்களைத் தவிர வேறு எந்த செல்வந்தருக்கும் ஸகாத் பொருள் ஆகுமானதல்ல. (அவர்கள் யாரென்றால்)

1 . அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்.
2 . ஸகாத்தை வசூலிக்கும் பணியாளர்.
3 . கடன்பட்டவர்.
4 . தனது செல்வத்தைக் கொடுத்து ஸகாத் பொருளை விலைக்கு வாங்கிக்கொண்டவர்.
5 . ஏழையான அண்டைவீட்டார் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸகாத் பொருளை அந்த ஏழையிடமிருந்து அன்பளிப்பாக பெற்ற செல்வந்தர்.

அறிவிப்பவர்: அதாஉ பின் யஸார் (ரஹ்)


لاَ تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ إِلاَّ لِخَمْسَةٍ: لِغَازٍ فِي سَبِيلِ اللهِ، أَوْ لِعَامِلٍ عَلَيْهَا، أَوْ لِغَارِمٍ، أَوْ لِرَجُلٍ اشْتَرَاهَا بِمَالِهِ، أَوْ رَجُلٍ لَهُ جَارٌ مِسْكِينٌ، فَتُصُدِّقَ عَلَى الْمِسْكِينِ، فَأَهْدَى الْمِسْكِينُ لِلْغَنِيِّ.


Ibn-Majah-1841

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஸகாத் பொருள் யாருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது?

1841. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐந்து நபர்களைத் தவிர வேறு எந்த செல்வந்தருக்கும் ஸகாத் பொருள் ஆகுமானதல்ல. (அவர்கள் யாரென்றால்)

1 . ஸகாத்தை வசூலிக்கும் பணியாளர்.
2 . அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்.
3 . தனது செல்வத்தைக் கொடுத்து ஸகாத் பொருளை விலைக்கு வாங்கிக்கொண்டவர்.
4 . ஏழையான அண்டைவீட்டார் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸகாத் பொருளை, அந்த ஏழையிடமிருந்து அன்பளிப்பாக பெற்ற செல்வந்தர்.
5 . கடன்பட்டவர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


” لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ إِلَّا لِخَمْسَةٍ: لِعَامِلٍ عَلَيْهَا، أَوْ لِغَازٍ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ لِغَنِيٍّ اشْتَرَاهَا بِمَالِهِ، أَوْ فَقِيرٍ تُصُدِّقَ عَلَيْهِ فَأَهْدَاهَا لِغَنِيٍّ، أَوْ غَارِمٍ “


raavi-8696-அய்யூப் பின் உத்பா

அய்யூப் பின் உத்பா என்பவர் பற்றி சிலர் இவர் உண்மையாளர் தான் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும்; வேறு சிலர் அதிகம் தவறிழைப்பவர் என்றும்; வேறு சிலர் விடப்பட்டவர் என்றும் விமர்சித்துள்ளனர். இவர் பஸரா, பஃக்தாதில் இருக்கும் போது மனனத்திலிருந்து அறிவித்தார். அதனால் அதிகம் தவறாக அறிவித்தார். யமாமாவில் இருக்கும் போது நூலிலிருந்து அறிவித்தார். இவர் யஹ்யா பின் அபூகஸீர் அவர்களிடமிருந்து அறிவிப்பது சரியானது என்று ஸுலைமான் பின் தாவூத்...

raavi-3938-அஹ்மத் பின் ஸயீத் அல்ஹம்தானீ

அஹ்மத் பின் ஸயீத் பின் பிஷ்ர், அல்ஹம்தானீ – أحمد بن سعيد بن بشر بن عبيد الله ஹி-253 இறப்பு. தரம்: ஸதூக்-நடுத்தரமானவர். இயற்பெயர்: அஹ்மத் தந்தை பெயர்: ஸயீத் பின் பிஷ்ர் குறிப்புப் பெயர்: அபூஜஃபர் வமிசம் மற்றும் ஊர் பெயர்: ஹம்தானீ, எகிப்து பிறப்பு: ஹிஜ்ரீ-... இறப்பு: ஹிஜ்ரீ-253 கால கட்டம்: 11. அஹ்மத் பின் ஸயீத் அல்ஹம்தானீ என்பவர் பற்றி அஹ்மத் பின்...

Abu-Dawood-2874

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அநாதைகளின் சொத்துக்களை (அநியாயமாக) உண்பது குறித்து வந்துள்ள கண்டனம்.

2874. “அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்,

1 . “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும்,
2 . சூனியம் செய்வதும்,
3 . நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும்,
4 . வட்டி உண்பதும்,
5 . அனாதைகளின் செல்வத்தை உண்பதும்,
6 . போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும்,
7 . கற்புள்ள அப்பாவிகளான இறைநம்பிக்கை கொண்ட பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

(இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும்) அபுல் ஃகைஸ் என்பவர் இப்னு முதீஃ அவர்களின் அடிமையான ஸாலிம் என்பவர் ஆவார்.


«اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ». قِيلَ: يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ؟ قَالَ: «الشِّرْكُ بِاللَّهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ»


Kubra-Bayhaqi-6724

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

6724. தைஸலா பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், அரஃபா நாளில் ஒரு அராக் மரத்தின் கீழ் இருந்துக் கொண்டு தனது தலையிலும் முகத்திலும் தண்ணீரைத் தெளித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம், “அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக! பெரும்பாவங்கள் எவை? என்று தெரிவியுங்கள்” என்று கேட்டேன்.

அதற்கவர்கள், (பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவைகள்:

1 . அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது,
2 . கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவது,
3 . நம்பிக்கைக் கொண்ட உயிரை நியாயமின்றி கொலைசெய்வது,
4 . போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது,
5 . அனாதைகளின் செல்வத்தை உண்பது,
6 . முஸ்லிமான பெற்றோருக்கு நோவினை தருவது,
7 . உயிருள்ளவருக்கும் இறந்தவர்களுக்கும் கிப்லாவாக இருக்கும் கஃபாவின் புனிதத்தை கெடுப்பது ஆகியவைகளாகும்.


سَأَلْتُ ابْنَ عُمَرَ وَهُوَ فِي أَصْلِ الْأَرَاكِ يَوْمَ عَرَفَةَ، وَهُوَ يَنْضَحُ عَلَى رَأْسِهِ الْمَاءَ وَوَجْهِهِ، فَقُلْتُ لَهُ: يَرْحَمُكَ اللهُ، حَدِّثْنِي عَنِ الْكَبَائِرِ، فَقَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” الْكَبَائِرُ: الْإِشْرَاكُ بِاللهِ، وَقَذْفُ الْمُحْصَنَةِ ” فَقُلْتُ: أَقَتْلُ الدَّمِ؟ قَالَ: ” نَعَمْ، وَرَغْمًا، وَقَتْلُ النَّفْسِ الْمُؤْمِنَةِ، وَالْفِرَارُ يَوْمَ الزَّحْفِ، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ الْمُسْلِمَيْنِ، وَإِلْحَادٌّ بِالْبَيْتِ الْحَرَامِ قِبْلَتِكُمْ أَحْيَاءً وَأَمْوَاتًا “


Al-Adabul-Mufrad-8

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

பெற்றோரிடம் மென்மையாகப் பேசுதல்.

8. தைஸலா பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், (காரிஜிய்யாவின்-ஹரூரிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) நஜ்தா பின் ஆமிர் என்பவரின் ஆதரவாளர்களுடன் சேர்ந்திருந்தபோது சில பாவங்களை செய்துவிட்டேன். அவைகளை பெரும்பாவங்கள் என்று நான் கருதினேன். எனவே இது பற்றி இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நான் கூறினேன். அதற்கவர்கள், “அந்தப் பாவங்கள் எவை? என்று என்னிடம் கேட்டார்கள். நான், “அவை இன்னின்ன பாவங்கள்” என்று கூறினேன்.

அதற்கவர்கள், இவைகள் பெரும்பாவங்கள் அல்ல. பெரும்பாவங்கள் ஒன்பதாகும். அவைகள்:

1 . அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும்,
2 . நியாயமின்றி கொலைசெய்வதும்,
3 . போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும்,
4 . கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும்,
5 . வட்டியை உண்பதும்,
6 . அனாதைகளின் செல்வத்தை உண்பதும்,
7 . கஅபாவின் புனிதத்தை சீர்குழைப்பதும்,
8 . (கேலி கிண்டல் செய்வதும்; அல்லது) சூனியம் செய்வதும்,
9 . பெற்றோருக்கு தொல்லைத் தந்து அழவைப்பதும் ஆகும்

என்று கூறினார்கள்.

மேலும் இப்னு உமர் (ரலி) அவர்கள், “நீ நரகத்தை பயந்து; சொர்க்கம் செல்ல ஆசைப்படுகிறாயா? என்று என்னிடம் கேட்டார்கள். நான், “ஆம் அல்லாஹ்வின் மீது ஆணையாக!” என்று கூறினேன். அதற்கவர்கள், உனது தந்தை உயிரோடு உள்ளாரா?

كُنْتُ مَعَ النَّجَدَاتِ، فَأَصَبْتُ ذُنُوبًا لَا أَرَاهَا إِلَّا مِنَ الْكَبَائِرِ، فَذَكَرْتُ ذَلِكَ لِابْنِ عُمَرَ قَالَ: مَا هِيَ؟ قُلْتُ: كَذَا وَكَذَا، قَالَ: لَيْسَتْ هَذِهِ مِنَ الْكَبَائِرِ، هُنَّ تِسْعٌ: الْإِشْرَاكُ بِاللَّهِ، وَقَتْلُ نَسَمَةٍ، وَالْفِرَارُ مِنَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَةِ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَإِلْحَادٌ فِي الْمَسْجِدِ، وَالَّذِي يَسْتَسْخِرُ، وَبُكَاءُ الْوَالِدَيْنِ مِنَ الْعُقُوقِ. قَالَ لِي ابْنُ عُمَرَ: أَتَفْرَقُ النَّارَ، وَتُحِبُّ أَنْ تَدْخُلَ الْجَنَّةَ؟ قُلْتُ: إِي وَاللَّهِ، قَالَ: أَحَيٌّ وَالِدُكَ؟ قُلْتُ: عِنْدِي أُمِّي، قَالَ: فَوَاللَّهِ لَوْ أَلَنْتَ لَهَا الْكَلَامَ، وَأَطْعَمْتَهَا الطَّعَامَ، لَتَدْخُلَنَّ الْجَنَّةَ مَا اجْتَنَبْتَ الْكَبَائِرَ


Abu-Dawood-1636

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1636. ஹதீஸ் எண்-1635 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் (மவ்ஸூலாக-அதாஉ பின் யஸார் அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் அபூஸயீத் (ரலி) அவர்களை கூறப்பட்டு) வந்துள்ளது.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

ஹதீஸ் எண்-1635 இல் மாலிக் இமாம் அவர்கள் (முர்ஸலாக) அறிவித்திருப்பது போன்றே இப்னு உயைனா அவர்களும் (முர்ஸலாக) அறிவித்துள்ளார்.

ஸைத் பின் அஸ்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள், ஸைத் பின் அஸ்லம் —> ஒரு பலமானவர் —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.


بِمَعْنَاهُ،


Nasaayi-3671

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

அநாதைகளின் சொத்துக்களை (அநியாயமாக) உண்பதை விட்டு விலகியிருப்பது.

3671. “அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்,
1 . “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும்,
2 . கஞ்சத்தனம் செய்வதும்,
3 . நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும்,
4 . வட்டியை உண்பதும்,
5 . அனாதைகளின் செல்வத்தை உண்பதும்,
6 . போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும்,
7 . கற்புள்ள அப்பாவிகளான இறைநம்பிக்கை கொண்ட பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، مَا هِيَ؟ قَالَ: «الشِّرْكُ بِاللَّهِ، وَالشُّحُّ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ»


« Previous Page