தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-139

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம்: 6

உளூவை முழுமையாகச் செய்தல்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், உளூவை முழுமையாகச் செய்தல் என்பதன் கருத்து நன்கு தூய்மைப்படுத்துதல் என்பது தான் என்று கூறியுள்ளார்கள். 

139. (ஹஜ்ஜில்) நபி (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபா) சென்று கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு கணவாயில் வாகனத்தைவிட்டு இறங்கிச் சிறுநீர் கழித்தார்கள். பின்னர் சுருக்கமாக உளூச் செய்தார்கள். அப்போது, ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் தொழப் போகிறீர்களா?’ என்று நான் கேட்டதற்கு, ‘தொழுகை உமக்கு முன்னர் (முஸ்தலிஃபாவில்) நடைபெறும்’ என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறினார்கள்.

முஸ்தலிஃபா என்ற இடம் வந்ததும். இறங்கி மீண்டும் உளூச் செய்தார்கள். இப்போது உளூவை முழுமையாகச் செய்தார்கள். மக்ரிப் தொழுகை நடைபெறப் போகிறது என்று அறிவிக்கப்பட்டதும், நபி(ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகை நடத்தினார்கள். பின்னர் ஒவ்வொருவரும் தத்தம் ஒட்டகங்களைத் தங்குமிடங்களில் படுக்க வைத்தார்கள். பின்னர் இஷாத் தொழுகை நடைபெறப் போகிறது என்று அறிவிக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகை நடத்தினார்கள். (மக்ரிப், இஷா ஆகிய) இரண்டு தொழுகைகளுக்கிடையில் (வேறு எதுவும்) அவர்கள் தொழவில்லை’ என உஸமா இப்னு ஜைத் (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 4


بَابُ إِسْبَاغِ الوُضُوءِ

وَقَالَ ابْنُ عُمَرَ: «إِسْبَاغُ الوُضُوءِ الإِنْقَاءُ»

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ

دَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عَرَفَةَ حَتَّى إِذَا كَانَ بِالشِّعْبِ نَزَلَ فَبَالَ، ثُمَّ تَوَضَّأَ وَلَمْ يُسْبِغِ الوُضُوءَ فَقُلْتُ الصَّلاَةَ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ: «الصَّلاَةُ أَمَامَكَ» فَرَكِبَ، فَلَمَّا جَاءَ المُزْدَلِفَةَ نَزَلَ فَتَوَضَّأَ، فَأَسْبَغَ الوُضُوءَ، ثُمَّ أُقِيمَتِ الصَّلاَةُ، فَصَلَّى المَغْرِبَ ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ، ثُمَّ أُقِيمَتِ العِشَاءُ فَصَلَّى، وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا


Bukhari-Tamil-139.
Bukhari-TamilMisc-139.
Bukhari-Shamila-139.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

2 . அப்துல்லாஹ் பின் மஸ்லமா-அபூஅப்துர்ரஹ்மான்

3 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம்-மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் அனஸ்

4 . மூஸா பின் உக்பா-அல்குரைஷீ

5 . குரைப் பின் அபூமுஸ்லிம்-அல்குரைஷீ

6 . உஸாமா பின் ஸைத் பின் ஹாரிஸா (ரலி)


மேலும் பார்க்க: முஸ்லிம்-2475 .

புகாரி இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

محمد بن إسماعيل البخاري

இறப்பு: ஹி-256.

தரம்: மிகப் பலமானவர்.


இயற்பெயர்: முஹம்மத்

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வமிசம்: அல்ஜுஅஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅப்துல்லாஹ்

பிறப்பு: ஹிஜ்ரி-194.

இறப்பு: ஹிஜ்ரி-256

கால கட்டம்: 10.


இமாம் புகாரி

முழுப்பெயர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம் இப்னுல் முகீரா  (ஸஹீஹுல் புகாரி என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம் ஆவார்)

புனைப்பெயர்: அபூ அப்தில்லாஹ் இப்னு அபீ ஹஸனில் புகாரி அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: இஸ்மாயில்

பிறந்த ஊர்: ரஷ்யாவில் உள்ள புகாரா என்ற ஊரில் பிறந்தார்கள். எனவே தான் புகாரி – புகாராவைச் சார்ந்தவர் என்ற கருத்தில் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத் தனது 10 வயதில் இருந்தே ஈரானில் உள்ள குராஸான், கூஃபா, பாக்தாத் போன்ற  ஊர்களுக்கும் இன்னும் பஸரா,  எகிப்து, ஸிரியா, மக்கா, மதீனா, போன்ற உலகத்தின் பல பாகங்களுக்கு பயணம் செய்து இருக்கிறார்.

ஸஹீஹ் அல்புகாரிக்கு இமாம் புகாரி வைத்த பெயர்: அல்ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (நபியவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்களுடன் வந்துள்ள செய்திகள் இன்னும் அவர்களின் வழிமுறைகள், வாழ்நாட்கள்)

ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (ஸஹீஹுல் புகாரி)

அல் அதபுல் முஃப்ரத்,

அத்தாரிகுல் கபீர், (அறிவிப்பாளர் தொடர்பான நூல்),

அல்லுஃபாவுஸ் ஸகீர் (பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர்பான நூல்),

ரஃபவுல் யதய்ன் ஃபிஸ் ஸலாதி, (தொழுகையில் தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்),

அல் கிராஅது கல்ஃபல் இமாம்  (இமாமுக்கு பின்னால் ஓதுதல்) போன்ற பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

அஹ்மது இப்னு ஹன்பல், இப்ராஹீம் இப்னு மூஸா அர்ராஸியி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ்,           ஹஸன் இப்னு பஸருல் பஜலீ, அபுல் யமான் அல்ஹகம் இப்னு நாபிஃ, கைஸ் இப்னு ஹஃப்ஸுத்தாரமி, நுஐம் இப்னுல் ஹம்மாது அல்மரூஸியி, யஹ்யா இப்னு மயீன், ஹஸன் இப்னு லிஹாக் நைஸாபூரி, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்

அபூக்கர் அப்துல்லாஹ் இப்னு அபீதாவூத், ஃபல் இப்னுல் அப்பாஸுர்ராஸி அல்ஹாஃபிழ், அபுஹாதம் முஹம்மது இப்னு இத்ரீஸு அர்-ராஸியி, முஹம்மது இப்னு யூசுஃபுல் ஃபர்பரீய், அத்திர்மிதி, முஸ்லிம் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்

இறப்பு:  ஹிஜ்ரி 256ல் ஷவ்வால் மாதம் நோன்பு பெருநாள் அன்று சனிக்கிழமை இஷா தொழுகை நேரத்தில் மரணித்தார். அப்போது அவருக்கு 62 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

அப்துல்லாஹ் பின் மஸ்லமா-அபூஅப்துர்ரஹ்மான்

அப்துல்லாஹ் பின் மஸ்லமா-அல்கஅனபீ (ரஹ்) – 'Abdullah bin Muslima bin Qa'nab

இறப்பு: ஹிஜ்ரி 221-ல், மக்கா

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் மஸ்லமா பின் கஅனப்

தந்தை பெயர்: மஸ்லமா பின் கஅனப் அல்ஹாரிஸீ

வம்சம்: அல்ஹாரிஸீ

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, பஸரா, மக்கா

பிறப்பு: ஹிஜ்ரி 130-க்குப் பிறகு, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 221-ல், மக்கா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் மஸ்லமா அல்கஅனபீ ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 130-க்குப் பிறகு மதீனாவில் பிறந்தார். அவர் மதீனா, பஸரா, மக்கா ஆகிய நகரங்களில் வசித்தார். அவர் ஹதீஸ் கலையில் பலமானவர் ஆவார்.

மாலிக் இமாமின் 'முவத்தா' நூலை அறிவித்தவர்களில் இவரை விட சிறந்தவர் இல்லை என்று யஹ்யா பின் மயீன் மற்றும் அலீ பின் அல்மதீனீ போன்றோர் கூறினர். அவர் ஹிஜ்ரி 221-ல் மக்காவில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): மஸ்லமா பின் கஅனப் அல்ஹாரிஸீ, அஃப்லஹ் பின் ஹுமைத் பின் நாஃபிஃ, ஸலமா பின் வர்தான் அல்லைஸீ, மாலிக் இமாம், ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், அல்லைஸ் பின் ஸஅத், தாவூத் பின் கைஸ் அல்ஃபர்ரா, ஸுலைமான் பின் பிலால் அத்தைமீ, ஸைத் பின் அஸ்லம், யஸீத் பின் இப்ராஹீம் அத்தஸ்தரீ, நாஃபிஃ பின் அப்துர்ரஹ்மான், இப்ராஹீம் பின் ஸஅத் பின் இப்ராஹீம்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): புகாரி இமாம், முஸ்லிம் இமாம், அபூதாவூத், திர்மிதீ இமாம், அப்து பின் ஹுமைத் பின் நஸ்ர், அம்ர் பின் மன்சூர் அன்நஸாயீ, மூஸா பின் ஹிஸாம், ஹிலால் பின் அல்அலா பின் ஹிலால் பின் உமர், முஹம்மத் பின் ஸியாத் அல்யஷ்கரீ, முஹம்மத் பின் அப்துர்ரஹீம் பின் அபூஸுஹைர், அஹ்மத் பின் ஸினான் பின் அஸத், அபூ ஸுர்ஆ அர்ராஸீ

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்லமா அல்கஅனபீ, அப்துல்லாஹ் அல்கஅனபீ, அப்துல்லாஹ் பின் மஸ்லமா பின் கஅனப்


ஆதாரம்: muslimscholars.info (20164) · Should verify

மாலிக் இமாம்-மாலிக் பின் அனஸ்

مالك بن أنس الأصبحي

இறப்பு: ஹி-179 (வயது 86)

தரம்: ஹதீஸ்துறையின் முக்கியமான இமாம், மிகப் பலமானவர்.


இயற்பெயர்: மாலிக்.

தந்தை பெயர்: அனஸ் பின் மாலிக்

குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ்

குலம்: இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது.

பிறப்பு: ஹிஜ்ரீ 92 - 95 க்குள் மதீனாவில் பிறந்தார்.

இறப்பு: ஹிஜ்ரீ 178 அல்லது 179 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதம் ஞாயிற்றுக் கிழமையன்று மரணித்தார். மரணிக்கும் போது இவருடைய வயது 86 ஆகும்.

(93 இல் பிறந்து 179 ல் மரணித்தார் என்பதின்படி இவர் வயது 86. வாகிதீ என்பவர் 90 வயதை அடைந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்)

கால கட்டம்: 7.


வளர்ப்பு: ஸவ்ன், ரிஃபாஹியா ஆகிய ஊர்களில் வளர்ந்தார்.

கல்வி: பத்து வயதை அடைந்திருக்கும் போதே கல்வி கற்க ஆரம்பித்தார். ஹிஜாஸ்வாசிகளில் உள்ள அறிஞர்களில் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார். ஹதீஸ் துறையில் முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர். சட்டத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள்: இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயங்களை அறிந்திருந்தமையால் பல ஊர்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. தன்னிடத்தில் உள்ள ஞானமே போதும் என்று கருதினார். பல ஊர்களுக்குச் சென்று இவர் பயிலாவிட்டாலும் மார்க்கச் சட்டங்களைக் கூறுவதில் தலைமைத்துவத்தைப் பெற்றார். இவர் 21 வது வயதை அடைந்த போதே பிறருக்கு தான் படித்ததைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது.

1 . நாஃபிஃ,

2 . ஹிஷாம் பின் உர்வா,

3 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,

4 . அப்துல்லாஹ் பின் தீனார்,

5 . ஸைத் பின் அஸ்லம்,

6 . முஹம்மத் பின் முஸ்லிம்,

7 . அப்துல்லாஹ் பின் அபூபக்ர்,

8 . ஸயீத் பின் அபூஸயீத்

ஆகியோர் இவருடைய முக்கிய ஆசிரியர்கள்.

1 . முஹம்மத் பின் முஸ்லிம்,

2 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,

3 . நாஃபிஃ பின் மாலிக்

4 . யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான்,

ஆகிய இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து கற்றுள்ளார்கள்.

4 . இமாம் அபூஹனீஃபா, ...

5 . ஸுஃப்யான் ஸவ்ரீ,

6 . அல்லைஸ் பின் சஃத்,

7 . ஷுஅபா,

8 . அப்துல் மலிக்,

9 . மஃமர் பின் ராஷித்,

10 . இப்னுல் முபாரக்,

11 . வகீஃ பின் ஜர்ராஹ்

12 . இமாம் ஷாஃபிஈ

ஆகியோர் இவருடைய முக்கிய மாணவர்கள்.

புகாரி மற்றும் முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பு இவர் எழுதிய அல்முஅத்தா என்ற ஹதீஸ்களின் தொகுப்பு நூல் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. பல அறிஞர்கள் இந்த நூலையே சார்ந்திருந்தார்கள்.

1 . ரிஸாலத்துன் ஃபில் கத்ர்,

2 . ரிசாலத்துன் ஃபின்னஜ்ம்,

3 . ரிசாலத்துன் ஃபில் அக்ளியா,

4 . ரிசாலத்துன் இலா அபீ ஹஸ்ஸான்,

5 . ரிசாலத்துன் இலல் லைஸ்,

6 . ஜுஸ்உன் ஃபித் தஃப்சீர்,

7 . கிதாபுஸ் ஸிர்,

8 . ரிஸாலத்துன் இலர் ரஷீத் ஆகியவற்றைத் தொகுத்துள்ளார்.

மூஸா பின் உக்பா-அல்குரைஷீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

குரைப் பின் அபூமுஸ்லிம்-அல்குரைஷீ

குரைப் பின் அபூமுஸ்லிம்-அல்குரைஷீ-அல்மதனீ (ரஹ்) – Karayb bin Abi Muslim

இறப்பு: ஹிஜ்ரி 98-க்கு முன், மதீனா

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: குரைப்

தந்தை பெயர்: அபூமுஸ்லிம்

வம்சம்: பனூ ஹாஷிம் கோத்திரத்தின் அடிமை

புனைப்பெயர்: அபூ ரஷ்தீன்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 98-க்கு முன், மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

குரைப் பின் அபூமுஸ்லிம் ரஹ் அவர்கள் இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் அடிமை ஆவார். இவரின் குன்யா அபூ ரஷ்தீன் ஆகும். இவர் ஒரு தாபிஈ ஆவார்.

இவர் பலமானவர் என்று அறிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார். இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் ஏராளமான நூல்களைப் பாதுகாத்து வைத்திருந்தார். இவர் ஹிஜ்ரி 98-க்கு முன் மதீனாவில் மரணித்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): இப்னு அப்பாஸ் ரலி, உம்முல் ஃபழ்ல் லுபாபா பின்த் அல்ஹாரிஸ் ரலி, மைமூனா பின்த் அல்ஹாரிஸ் ரலி, ஆயிஷா பின்த் அபூபக்ர் ரலி, உம்மு ஸலமா ரலி, உம்மு ஹானி பின்த் அபூதாலிப் ரலி, ஃபழ்ல் பின் அல்அப்பாஸ் ரலி, முஆவியா ரலி, உஸாமா பின் ஸைத் ரலி, ஸைத் பின் ஸாபித் ரலி, இப்னு உமர் ரலி, அல்மிஸ்வர் ரலி

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ரஷ்தீன் பின் குரைப், முஹம்மத் பின் குரைப், ஸுலைமான் பின் யஸார், அபூ ஸலமா பின் அப்துர்ரஹ்மான், ஷரீக் பின் அப்துல்லாஹ் பின் அபூநமிர், மூஸா பின் உக்பா, முஹம்மத் பின் உக்பா, இப்ராஹீம் பின் உக்பா, ஹபீப் பின் அபூ ஸாபித், ஸல்ம் பின் அபில் ஜஅத், மக்ஹூல் அஷ்ஷாமீ, புகைர் பின் அப்துல்லாஹ் பின் அல்அஷ்ஜ்

வேறு பெயர்கள்: குரைப், குரைப் பின் அபூமுஸ்லிம், குரைப் மவ்லா இப்னு அப்பாஸ்


ஆதாரம்: muslimscholars.info (11211) · Should verify

உஸாமா பின் ஸைத் பின் ஹாரிஸா (ரலி)

உஸாமா பின் ஸைத் பின் ஹாரிஸா (ரலி)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.