சலமா பின் குஹைல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் (தமது ஹஜ்ஜின்போது) முஸ்தலிஃபாவில் ஒரே இகாமத்தில், மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதார்கள். பிறகு, “இவ்வாறே இப்னு உமர் (ரலி) அவர்களும் தொழுதார்கள்” என்றும், “அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் தொழுவார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்” என்றும் அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 15
(முஸ்லிம்: 2475)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، وَسَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ
أَنَّهُ «صَلَّى الْمَغْرِبَ بِجَمْعٍ وَالْعِشَاءَ بِإِقَامَةٍ» ثُمَّ حَدَّثَ عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ صَلَّى مِثْلَ ذَلِكَ، وَحَدَّثَ ابْنُ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ ذَلِكَ
Tamil-2475
Shamila-1288
JawamiulKalim-2275
1 . நபி ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிப் மற்றும் இஷாத் தொழுகைகளை ஒரு பாங்கும், இரண்டு இகாமத்தும் கூறி தொழுதார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன.
2 . இதற்கு மாற்றமாக ஒரு பாங்கும், ஒரு இகாமத்தும் கூறி தொழுதார்கள் எனவும் ஹதீஸ் உள்ளன.
3 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்களின் வழியாக வரும் சில ஹதீஸ்களில் மட்டுமே ஒரு இகாமத் கூறினார்கள் என்று வருகிறது. (மேற்கண்ட செய்தியைப் போன்று.)
(பார்க்க: முஸ்லிம்-2475 , 2476 , 2477 , 2478 , …)
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் இந்த தகவல் சரியானதல்ல. ஏனென்றால் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்கள் வழியாகவும், வேறு சில நபித்தோழர்கள் வழியாகவும் இதற்கு மாற்றமாக இரண்டு இகாமத் என்ற கருத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
- இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்களின் வழியாக வரும் ஹதீஸ்கள்:
பார்க்க: புகாரி-1673 , நஸாயீ-481 , 660 ,
- உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் வழியாக வரும் ஹதீஸ்கள்:
பார்க்க: புகாரி-139 ,
- ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் வழியாக வரும் ஹதீஸ்கள்:
பார்க்க: முஸ்லிம்-2334 , நஸாயீ-656 ,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-2474 ,
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்