بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
الوجادة – அல்விஜாதஹ்-கடிதம் அல்லது நூலிலிருந்து ஹதீஸைப் பெறுதல், அதை அறிவித்தல்.
ஹதீஸை பெறும் வழிகள் 8 ஆகும்.
1 . السماع – ஹதீஸை அறிவிப்பவரிடமிருந்து நேரடியாக செவியேற்பது.
2 . القراءة على الشيخ حفظاً أو من كتاب – மனனம் செய்த ஹதீஸ்களை அல்லது எழுதிவைத்திருந்த ஹதீஸ்களை ஹதீஸை அறிவிப்பவரிடம் கூறி சரிபார்த்துக் கொள்ளுதல்.
3 . الإجازة – ஹதீஸ்களை நூலாக தொகுத்துள்ளவர், அதை தனது மாணவர்களிடம் கொடுத்து இதிலிருந்து அறிவித்துக் கொள்ளுங்கள் என்று அனுமதி அளிப்பது.
4 . المناولة – ஹதீஸ்களை நூலாக தொகுத்துள்ளவர், அதை தனது மாணவர்களிடம் கொடுப்பது. இதிலிருந்து அறிவித்துக் கொள்ளுங்கள் என்று அனுமதி கொடுத்தால் அது அல்இஜாஸாவாகும். அனுமதி இல்லாவிட்டால் முனாவலாவாகும்.
5 . المكاتبة – ஹதீஸை அறிவிப்பவர் தன் கைப்பட ஹதீஸை எழுதி மாணவர்களுக்கு தருவது; அல்லது நம்பிக்கைக்குரியவர் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது.
இதிலிருந்து அறிவித்துக் கொள்ளுங்கள் என்று அனுமதி கொடுத்தால் அது அல்இஜாஸாவாகும். அனுமதி இல்லாவிட்டால் முனாவலாவாகும்.
6 . الإعلام – ஹதீஸை அறிவிப்பவர், தனது மாணவருக்கு சில ஹதீஸ்களை குறிப்பிட்டோ அல்லது நூலைக் கொடுத்தோ இதில் உள்ள ஹதீஸ்களை நான் இன்னாரிடமிருந்து செவியேற்றேன் என்று தெரிவிப்பது.
7 . الوصية – தனது ஆசிரியரிடமிருந்து பெற்ற ஹதீஸ்நூலை மற்றவரிடம் தந்து இதிலிருந்து ஹதீஸை அறிவியுங்கள் என்று வஸிய்யத் செய்வது.
8 . الوجادة – விஜாதஹ் – மற்றவரின் கடிதம் அல்லது நூலிலிருந்து ஹதீஸைப் பெறுதல், பிறகு அதை அறிவித்தல்.
விஜாதஹ் பற்றிய விளக்கம்:
இந்த வகையில் ஹதீஸை பெறுபவர் ஹதீஸை அறிவிக்கும் முறைகள்:
1 . وجدت ، أو وجدنا في كتاب فلان – இன்னாரின் நூலில் நான் கண்டேன்; அல்லது நாங்கள் கண்டோம் என்று கூறிவிட்டு அதில் உள்ள அறிவிப்பாளர்தொடரைக் கூறி ஹதீஸை அறிவித்தல்.
2 . قرأت في كتاب فلان – இன்னாரின் நூலில் நான் படித்தேன் என்று கூறிவிட்டு அதில் உள்ள அறிவிப்பாளர்தொடரைக் கூறி ஹதீஸை அறிவித்தல்.
3 . இன்னார் கைப்பட எழுதிய நூல் என்று குறிப்பிட்டுவிட்டு அதில் உள்ள ஹதீஸை அறிவிப்பாளர்தொடருடன் அறிவித்தல்.
இந்த முறையில் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்களின் மகன் அப்துல்லாஹ் அறிவித்துள்ளார். وجدت في كتاب أبي بخط يده – எனது தந்தை கைப்பட எழுதிய நூலில் நான் கண்டேன் என்று கூறிவிட்டு ஹதீஸை அறிவித்துள்ளார்.
இவ்வாறே முஹம்மது பின் முஸன்னா அவர்களும் அறிவித்துள்ளார்.
نسخت هذا الحديث من كتاب غندرٍ – இந்த செய்தியை நான் குன்தர் (முஹம்மது பின் ஜஃபர்) அவர்களின் நூலிலிருந்து எடுத்தெழுதிக் கொண்டேன் என்று அறிவித்துள்ளார்.
4 . யாரின் நூல் என்று குறிப்பிடாமல் அறிவித்தல்.
அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸாலிஹ் அவர்கள் அறிவிக்கும் وجدت في كتاب بالمدينة – நான் மதீனாவில் கிடைத்த ஒரு நூலில் கண்டேன் என்ற செய்தியை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
…
இதை அறிவிப்பவர் நூலுடையவரின் காலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். நூலுடையவரை சந்திக்காமல் இருக்கலாம். அல்லது சந்தித்திருந்து அந்த ஹதீஸ்களை கேட்காமலும் இருக்கலாம். மேலும் இந்த நூலில் உள்ள ஹதீஸ்களை அறிவிப்பதற்கு நூலுடையவரிடமிருந்து அனுமதி கிடைத்திருக்கலாம். அனுமதி கிடைக்காமலும் இருக்கலாம்.
1 . விஜாதஹ் முறையில் கிடைக்கும் ஹதீஸ்களை அறிவிப்பது கூடும் என்பதால் தான் ஹஸன் பஸரீ, ஆமிர் ஷஅபீ,பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
அதாஉ பின் அபூரபாஹ், அபுஸ் ஸுபைர் மக்கீ, தல்ஹா பின் நாஃபிஃ, கதாதா, ஹகம் பின் உதைபா, லைஸ் பின் ஸஅத் போன்ற பலர் இந்த முறையில் சில ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.
2 . இந்த முறையில் ஹதீஸை அறிவிப்பவர் தனது ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை என்பதாலும்; அல்லது சந்திக்கவில்லை என்பதாலும் அல்லது இருவருக்கும் இடையில் கால இடைவெளி இருப்பதாலும் இந்த வகை ஹதீஸ்களை முன்கதிஃ என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
முஹம்மது பின் ஸீரீன் அவர்கள் இந்த முறையில் ஹதீஸ்களை அறிவிப்பதை தடுத்துள்ளார். (இவர் ஆரம்பக் காலத்தில் உள்ளவர் என்பதால்) ஹதீஸ்களை எழுதக் கூடாது; மனனமிட்டே ஹதீஸை அறிவிக்கவேண்டும் என்பது இவரின் கொள்கையாகும்).
ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
ஆகியோர் இந்த வகை ஹதீஸ்களை முன்கதிஃ என்று கூறியுள்ளனர்.
…
விஜாதஹ் முறையில் கிடைக்கும் ஹதீஸ்களை ஏற்கலாமா? ஏற்கக் கூடாதா? என்பதில் அறிஞர்களுக்கிடையில் மூன்று வகை கருத்துக்கள் உள்ளன.
1 . சிலர் ஏற்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.
2 . சிலர் ஏற்கலாம் என்று கூறியுள்ளனர்.
3 . சிலர் உறுதியாக தெரியும் போது அதன்படி அமல் செய்வது கட்டாயம் என்று கூறியுள்ளனர்.
…
விஜாதஹ் முறையில் கிடைக்கும் ஹதீஸ்களை ஏற்கலாம் என்பதற்கு சிலர் ஆதாரங்களையும், நிபந்தனைகளையும் கூறியுள்ளனர்…
இப்னு கஸீர் பிறப்பு ஹிஜ்ரி 700
இறப்பு ஹிஜ்ரி 774
வயது: 74
அவர்கள், விஜாதஹ் முறையில் கிடைக்கும் ஹதீஸ்களை ஏற்கலாம் என்பதற்கு முஸ்னத் பஸ்ஸார்-7294 இல் இடம்பெறும் செய்தியின் கருத்தில் வரும் ஹதீஸ்களை ஆதாரமாகக் கூறியுள்ளார்.
…
விஜாதஹ் முறையில் கிடைக்கும் ஹதீஸ்களை எவ்வாறு அறிவிக்க வேண்டும்?
1 . நூலில் உள்ளவை இன்னார் எழுதியவை தான் என்று உறுதியாகத் தெரியும் போது وجدت بخط فلان – இன்னார் கைப்பட எழுதிய நூலில் கண்டேன் என்று கூறிவிட்டு அதில் உள்ள அறிவிப்பாளர்தொடரைக் கூறி அறிவிக்க வேண்டும்.
2 . தத்லீஸ் நிலை ஏற்படாது என்றால் قال فلان – இன்னார் கூறினார் என்று கூறிவிட்டு அறிவிக்கலாம்.
3 . حدثنا , أخبرنا – ஹத்தஸனா, அக்பரனா – எங்களுக்கு அறிவித்தார் போன்ற வார்த்தைகளைக் கூறி அறிவிக்கக் கூடாது.
4 . நூலாசிரியரின் எழுத்து அல்ல; அவருக்கு உதவியாக மற்றவர்கள் எழுதினார்கள் என்றிருந்தால் ذكر فلان , قال فلان – இன்னார் கூறினார் என்று கூறிவிட்டு அறிவிக்க வேண்டும்.
5 . இது இன்னாரின் நூல் தான் என்று உறுதியாகத் தெரியாத போது
بلغني عن فلان – இன்னார் கூறியதாகத் தகவல் கிடைத்தது என்று கூறி அறிவிக்க வேண்டும்.
இப்னு கஸீர் பிறப்பு ஹிஜ்ரி 700
இறப்பு ஹிஜ்ரி 774
வயது: 74
போன்ற அறிஞர்கள் விஜாதா முறையில் ஹதீஸை அறிவிப்பது ரிவாயத் அல்ல; ஹிகாயத் ஆகும் என்று கூறியுள்ளனர்.(இப்னு கஸீர் பிறப்பு ஹிஜ்ரி 700
இறப்பு ஹிஜ்ரி 774
வயது: 74
அவர்கள் கூறும் இந்த இரண்டு வார்த்தைக்கும் பெரிய வேறுபாடு இல்லை)
…
இன்னாரின் கடிதம் தான் என்றோ அல்லது இன்னாரின் நூல் தான் என்றோ உறுதியாகத் தெரிந்து, அந்த நூலில் எந்த மாற்றமும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றால் அது சரியானது என்று இமாம் ஷாஃபிஈ போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர். பிற்கால ஆய்வாளர்களில் சிலர் இது போன்ற செய்திகளின் படி அமல் செய்வது கட்டாயம் என்றும் கூறியுள்ளனர்.
…
(ஆதார நூல்கள்: முகத்திமது இப்னுஸ் ஸலாஹ்,பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
அல்பாயிஸுல் ஹஸீஸ், அல்முக்னிஉ ஃபீ உலூமில் ஹதீஸ், தஹ்ரீரு உலூமில் ஹதீஸ், நுஸ்ஹதுன் நள்ர், ஃபத்ஹுல் முஃகீஸ், தத்ரீபுர் ராவீ)…
சமீப விமர்சனங்கள்