தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3824

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

கிப்லா திசையை நோக்கி எச்சில் துப்பியவர், அவரது எச்சில் அவரின் இரண்டு கண்களுக்கு முன்பாக இருக்கும் நிலையில் மறுமை நாளில் வருவார் என்றும்; இந்த துர்வாடை வீசும் செடியிலிருந்து எதையேனும் சாப்பிட்டவர் தொழுமிடத்தில் நம்மருகே நெருங்க வேண்டாம்” என்றும் மூன்று தடவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)

(அபூதாவூத்: 3824)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ حُذَيْفَةَ، أَظُنُّهُ عَنْ رَسُولِ اللَّهِ صلّى الله عليه وسلم قَالَ:

«مَنْ تَفَلَ تُجَاهَ الْقِبْلَةِ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ تَفْلُهُ بَيْنَ عَيْنَيْهِ، وَمَنْ أَكَلَ مِنْ هَذِهِ الْبَقْلَةِ الْخَبِيثَةِ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا» ثَلَاثًا


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3824.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




இந்தக் கருத்தில் ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7456 , 24481 , அபூதாவூத்-3824 , முஸ்னத் பஸ்ஸார்-2905 , இப்னு குஸைமா-925 , 1314 , 1663 , இப்னு ஹிப்பான்-1639 , 1643 , குப்ரா பைஹகீ-5055 ,

பள்ளிக்குள் தொழும் போதும், தொழாதபோதும்..

பள்ளிக்கு வெளியில் தொழும் போதும், தொழாதபோதும்..

வலது பக்கம்…

இடது பக்கம்…

2 comments on Abu-Dawood-3824

  1. இந்த ஹதீஸின் இரண்டாம் பகுதி, வேறு சில வார்த்தைகளுடன் இதே கருத்தில் ஸஹீஹ் புகாரி-5451 இடம் பெறுகிறது

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      புகாரி-5451இல் இடம்பெறும் கருத்தில் பிரச்சனை இல்லை. முதல் பகுதியின் கருத்தில்-தொழுகைக்கு வெளியில் பொதுவாக கிப்லாவை நோக்கி எச்சில் துப்புவது பற்றிய செய்திகள் ஆய்வுக்குரியவை…இதனுடன் தொடர்புடைய செய்திகள் அதிகம் என்பதால் இன்ஷா அல்லாஹ் பிறகு பதிவு செய்யப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.