பாடம்: 127
ஒரு அடியார், அல்லாஹ்விடம் நரகத்தை விட்டு பாதுகாப்புக் கேட்டால், அல்லாஹ்வே! இவரை என்னை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது. சொர்க்கத்தைக் கேட்டாலும் இவ்வாறே! (அல்லாஹ்வே! இவரை என்னுள் நுழையச் செய்வாயாக என்று சொர்க்கம் கூறுகிறது)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு அடியார், அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை என்னை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 29808)127- مَنْ قَالَ إذا استعاذ العبد مِن النّارِ قالت النار : اللهمّ أعِذه ، والجنّة مِثل ذلِكَ.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ يُونُسَ بْنِ عَمْرٍو، عَنْ يَزِيدَ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَا مِنْ عَبْدٍ يَسْأَلُ اللَّهَ الْجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ إِلَّا قَالَتِ النَّارُ: اللَّهُمَّ أَجِرْهُ مِنِّي
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-29808.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-29224.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-42155-முஹம்மது பின் ஃபுளைல் பற்றி சிலர் பலமானவர் என்றும் சிலர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர். இவர் ஷீஆ அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது ஆட்சிக்கு எதிராக காரிஜியாக்கள் புரட்சி செய்த போது, அலீ அவர்களது ஆட்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டம் செயல்படத் தொடங்கியது. இவர்களே ஷியாக்கள் ஆவர். ஷியா என்ற சொல் (شيعة علي ஷீஅது அலீ) “அலீயை பின்பற்றுவோர்” என்று பொருள்படும் அரபு மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. காலப் போக்கில், அலீ அவர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று விட்டனர். முகம்மது நபி, அலீ, அலீயின் மனைவி ஃபாத்திமா, மகன்கள் ஹஸன், ஹுசைன் ஆகிய ஐவருக்கும் தெய்வத் தன்மை இருப்பதாக ஷியாக்கள் நம்புகின்றனர். இவர்கள் பல பிரிவினராக உள்ளனர். பல விசயங்களில் அஹ்லுஸ் ஸுன்னாவிற்கு-குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவோருக்கு மாறுபடுகின்றனர். அலீ அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நபித்துவம் அவர் சிறு வயதினராக இருந்ததால் முகம்மது நபி அவர்களிடம் வழங்கப்பட்டது என்பதும் ஷியாக்களின் நம்பிக்கையாகும்.கொள்கையில் ஊறிப்போனவர் என்றும்; இவரை ஆதாரமாக சிலர் ஏற்பதில்லை என்றும் இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
கூறியுள்ளார். இவர் புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிமின் அறிவிப்பாளர் ஆவார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/676)
முஹம்மது பின் ஃபுளைல் என்பவர் பலமானவர் என்றாலும் இந்த செய்தியில் குறைவான வார்த்தைகள் உள்ளது. இவர் வழியாக வரும் இந்த செய்தி முஸ்னத் அபீயஃலா-3682 , 3683 ஆகிய எண்களில் முழுமையாக வந்துள்ளது. எனவே மேற்கண்ட செய்தியில் குறைவான வார்த்தை இடம்பெற்றிருப்பது இந்த பிரதியில் ஏற்பட்ட தவறு. வேறு பிரதிகளில் முழுமையான வாக்கியம் உள்ளது.
மேலும் பார்க்க: திர்மிதீ-2572 .
சமீப விமர்சனங்கள்