தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-1263

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நேரம் தவறி தொழக்கூடியவருக்கு பின்னால் தொழுதல்.

“தொழுகையை உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்தும் மக்களிடையே நீர் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டால் “உமது நிலை எப்படி இருக்கும்?” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வும், அவனது தூதருமே நன்கு அறிந்தவர்கள்! என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அப்போது தொழுகையை உரிய நேரத்தில் நீர் தொழுதுக் கொள்வீராக! பின்பு பள்ளிக்கு செல்வீராக! நீர் பள்ளிவாசலில் இருக்கும் போது இகாமத் சொல்லப்பட்டால் அப்போதும் மக்களுடன் சேர்ந்து தொழுதுக் கொள்வீராக! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

(ஸுனன் தாரிமீ: 1263)

بَابُ الصَّلَاةِ خَلْفَ مِنْ يُؤَخِّرُ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا

أَخْبَرَنَا سَهْلُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ بُدَيْلٍ، عَنْ أَبِي الْعَالِيَةِ الْبَرَّاءِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «كَيْفَ أَنْتَ إِذَا بَقِيتَ فِي قَوْمٍ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا؟» قَالَ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ: «صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا وَاخْرُجْ. فَإِنْ أُقِيمَتِ الصَّلَاةُ وَأَنْتَ فِي الْمَسْجِدِ فَصَلِّ مَعَهُمْ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1263.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1202.




மேலும் பார்க்க: முஸ்லிம்-1140 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.