தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-2230

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

காஸிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:

அன்ஸாரிகளைச் சார்ந்த ஒரு பெண்மனி உமர் (ரலி) அவர்களிடத்தில் (மனைவியாக) இருந்த போது, ஆஸிம் பின் உமர் என்பவரை (உமர் (ரலி) அவர்களின் மூலம்) பெற்றெடுத்தார். பிறகு அப்பெண்னை விட்டும் உமர் (ரலி) அவர்கள் பிரிந்து விட்டார்கள்.

(ஒரு நாள்) உமர் (ரலி) அவர்கள் குபா என்ற இடத்திற்கு வந்தார்கள். அப்போது பள்ளிவாசலின் முற்றத்தில் தம் மகன் ஆஸிம் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரது கொடுங்கையை பிடித்து தம் வாகனத்தில் தனக்கு முன்னால் வைத்தார்கள். அப்போது அச்சிறுவனின் பாட்டியார் வந்து உமர் (ரலி) அவர்களிடத்தில் சர்ச்சையில் ஈடுபட்டார்கள்.

இறுதியில் இருவரும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டு) வந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் இவன் என்னுடைய மகன். (என்னிடத்தில் தான் இருப்பான்) என்று கூறினார்கள். இவன் எனது மகன் (என்னிடத்தில் தான் இருப்பான்) என்று அப்பெண் கூறினார்.

அப்போது அபூபக்ர் (ரலி) அப்பெண்ணுடன் அச்சிறுவனை விட்டுவிடு என்று (உமர் (ரலி) அவர்களிடத்தில்) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் பதிலுக்கு ஒரு வார்த்தையும் அபூபக்ரிடம் பேசவில்லை.

யஹ்யா பின் யஹ்யா அல்லைஸீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:

மாலிக் இமாம் (ரஹ்) அவர்கள், (சிறு வயதுடையை குழந்தைகள் தாயாரிடம் அல்லது தாய் வழி பாட்டியிடம் இருக்கவேண்டும் என்ற) இந்த சட்டத்தின்படியே நாம் முடிவு செய்கிறோம் என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

(முஅத்தா மாலிக்: 2230)

وحَدَّثَنِي مَالِكٌ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، أَنَّهُ قَالَ: سَمِعْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ يَقُولُ:

كَانَتْ عِنْدَ عُمَرَ بْنِ الْخَطَّابِ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ، فَوَلَدَتْ لَهُ عَاصِمَ بْنَ عُمَرَ، ثُمَّ إِنَّهُ فَارَقَهَا، فَجَاءَ عُمَرُ قُبَاءً، فَوَجَدَ ابْنَهُ عَاصِمًا يَلْعَبُ بِفِنَاءِ الْمَسْجِدِ، فَأَخَذَ بِعَضُدِهِ، فَوَضَعَهُ بَيْنَ يَدَيْهِ عَلَى الدَّابَّةِ، فَأَدْرَكَتْهُ جَدَّةُ الْغُلاَمِ، فَنَازَعَتْهُ إِيَّاهُ، حَتَّى أَتَيَا أَبَا بَكْرٍ الصِّدِّيقَ، فَقَالَ عُمَرُ: ابْنِي، وَقَالَتِ الْمَرْأَةُ: ابْنِي، فَقَالَ أَبُو بَكْرٍ: خَلِّ بَيْنَهَا وَبَيْنَهُ، قَالَ: فَمَا رَاجَعَهُ عُمَرُ الْكَلاَمَ.

قَالَ: وَسَمِعْتُ مَالِكًا يَقُولُ: وَهَذَا الأَمْرُ الَّذِي آخُذُ بِهِ فِي ذَلِكَ.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-1260.
Muwatta-Malik-Shamila-2230.
Muwatta-Malik-Alamiah-1260.
Muwatta-Malik-JawamiulKalim-1434.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . யஹ்யா பின் யஹ்யா அல்லைஸீ

2 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம்

3 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்அன்ஸாரீ

4 . காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர்

5 . உமர் (ரலி)

6 . அபூபக்ர் (ரலி)


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34099-காஸிம் பின் முஹம்மத் அவர்கள் இந்தச் செய்தியை நேரடியாக உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கவில்லை. நடந்த ஒரு தகவலாக அறிவிக்கிறார். இவரின் பிறப்பு ஹிஜ்ரீ-35 ஆகும். உமர் (ரலி) அவர்கள் இறப்பு ஹிஜ்ரீ-23 அல்லது 24 ஆகும். எனவே இவர் உமர் (ரலி) அவர்களின் காலத்தில் பிறக்கவில்லை என்பதால் இது முன்கதிஃ ஆகும்.


இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-2230, குப்ரா பைஹகீ-15765, …



இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-2053, திர்மிதீ-1357,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.