தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2053

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

‘ஸம்ஆ’ என்பவரின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். எனவே, அவனை நீ கைப்பற்றிக் கொள்!’ என்று உத்பா இப்னு அபீ வக்காஸ் (ரலி) (தம் மரண வேளையில்) தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடம் உறுதிமொழி வாங்கினார். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அந்தச் சிறுவனைப் பிடித்துக் கொண்டு, ‘இவன் என் சகோதரரின் மகன்! என்னிடம் அவர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்!’ எனக் கூறினார்.

அப்போது ஸம்ஆவின் மகன் அப்து (ரலி), ‘இவன் என் சகோதரன்; என் தந்தையின் அடிமைக்குப்பிறந்தவன்; என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாயார் இருக்கும்போது பிறந்தவன்!’ எனக் கூறினார். இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர்.

அப்போது ஸஅத் (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரரின் மகன். இவனைப் பற்றி என் சகோதரர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்’ எனக் கூறினார். அதற்கு ஸம்ஆவின் மகன் அப்து (ரலி) ‘இவன் என் சகோதரன்! என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாய் இருக்கும்போது என் தந்தைக்குப் பிறந்தவன்! எனக் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள்,’ஸம்ஆவின் மகன் அப்தே! இவன் உமக்குரியவனே! எனக் கூறினார்கள். பின்னர் ‘(தாய்) யாருடைய ஆதிக்கத்தில் இருக்கும்போது குழந்தை பிறக்கிறதோ அவருக்கே அக்குழந்தை உரியது! விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது! எனக் கூறினார்கள்.

பின்னர், தம் மனைவியும் ஸம்ஆவின் மகளுமான ஸவ்தா (ரலி) அவர்களிடம் ‘ஸவ்தாவே! நீ இவரிடம் ஹிஜாபைப் பேணிக் கொள்!’ என்றார்கள்.

(‘அவர் ஸம்ஆவின் மகன்தான்! என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தாலும்) உத்பாவின் தோற்றத்தில் அவர் இருந்ததால்தான் இவ்வாறு நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு அவர் அன்னை ஸவ்தா (ரலி) அவர்களை மரணிக்கும்வரை சந்திக்கவில்லை.

அத்தியாயம்: 34

(புகாரி: 2053)

حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ

كَانَ عُتْبَةُ بْنُ أَبِي وَقَّاصٍ، عَهِدَ إِلَى أَخِيهِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ مِنِّي فَاقْبِضْهُ، قَالَتْ: فَلَمَّا كَانَ عَامَ الفَتْحِ أَخَذَهُ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ وَقَالَ: ابْنُ أَخِي قَدْ عَهِدَ إِلَيَّ فِيهِ، فَقَامَ عَبْدُ بْنُ زَمْعَةَ، فَقَالَ: أَخِي، وَابْنُ وَلِيدَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ، فَتَسَاوَقَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، ابْنُ أَخِي كَانَ قَدْ عَهِدَ إِلَيَّ فِيهِ، فَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ: أَخِي، وَابْنُ وَلِيدَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ»، ثُمَّ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الحَجَرُ» ثُمَّ قَالَ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ – زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ -: «احْتَجِبِي مِنْهُ» لِمَا رَأَى مِنْ شَبَهِهِ بِعُتْبَةَ فَمَا رَآهَا حَتَّى لَقِيَ اللَّهَ


Bukhari-Tamil-2053.
Bukhari-TamilMisc-2053.
Bukhari-Shamila-2053.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


குழந்தையை வளர்க்கும் உரிமை யாருக்கு என்பது குறித்து வந்துள்ள செய்திகள்:


1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • உர்வா பின் ஸுபைர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: மாலிக்-2157, முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-2053, 2218, 2421, 2533, 2745, 4303, 6749, 6765, 6817, 7182முஸ்லிம்-2888, இப்னு மாஜா-, அபூதாவூத்-, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, முஸ்னத் அபீ யஃலா-, ஷரஹ் மஆனில் ஆஸார்-, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, தாரகுத்னீ-, குப்ரா பைஹகீ-,


2 . அபூஹுரைரா

3 . அப்துல்லாஹ் பின் அம்ர்

4 . உஸ்மான்

5 . அபூஉமாமா

6 . அம்ர் பின் காரிஜா

7 . அப்துல்லாஹ் பின் ஸுபைர்

8 . இப்னு மஸ்ஊத்

9 . உமர்

10 . அலீ

11 . ஒரு நபித்தோழர்

12 . உபாதா பின் ஸாமித்

13 . இப்னு உமர்

14 . ஸைத் பின் அர்கம்

15 . பராஉ பின் ஆஸிப்

16 . இப்னு அப்பாஸ்

17 . அபூமஸ்ஊத்

18 . வாஸிலா பின் அஸ்கஃ

19 . ஸஃத் பின் அபூவக்காஸ்

20 . முஆவியா

21 . அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா

22 . அப்துல்லாஹ் பின் ஸம்ஆ



இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: மாலிக்-2230, திர்மிதீ-1357,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.