ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
உத்பான இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம், ‘ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். அவனைப் பிடித்து உன்னிடம் வைத்துக் கொள்’ என்று உறுதிமொழி வாங்கியிருந்தார். மக்கா வெற்றி ஆண்டில் ஸஅத்(ரலி) அவர்கள் அவனைப் பிடித்துவைத்துக் கொண்டு ‘(இவன்) என் சகோதரர் மகன். இவன் விஷயத்தில் என் சகோதரர் (இவனைப் பிடித்துவருமாறு) என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்’ என்றார்கள். அப்போது அப்து இப்னு ஸம்ஆ(ரலி) அவர்கள் சஅதை நோக்கி எழுந்து, ‘(இவன்) என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுடைய மகன். இவன் (உடைய தாய்) என் தந்தையின் அதிகாரத்திலிருந்தபோது பிறந்தவன்’ என்று கூறினார். எனவே, இருவரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் பின் ஒருவராக (தீர்ப்புக் கேட்டுச்) சென்றர். ஸஅத்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (இவன்) விஷயத்தில் (இவனைப் பிடித்துவருமாறு) என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்’ என்று கூற, அப்து இப்னு ஸம்ஆ(ரலி) அவர்கள், ‘(இவன்) என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்; அவரின் ஆதிக்கத்தில் (இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்’ என்றார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அப்து இப்னு ஸம்ஆவே! அவன் உனக்கே உரியவன்’ என்று (தீர்ப்புக்) கூறிவிட்டுப் பிறகு ‘தாந் யாருடைய ஆதிக்கத்தில் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்புத்தான் உரியது’ என்றார்கள்.
பிறகு (தம் துணைவியும்) ஸம்ஆவின் புதல்வியுமான சவ்தா(ரலி) அவர்களிடம், ‘இவனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு (மறைத்து)க்கொள்’ என்று கூறினார்கள். சாயலில் அவன் உத்பாவைப் போன்றே இருக்கக் கண்டால்தான் நபியவர்கள் இப்படிக் கூறினார்கள். அந்த மனிதர், தாம் இறக்கும்வரை சவ்தா(ரலி) அவர்களைப் பார்க்கவில்லை.46
Book :93
(புகாரி: 7182)حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ
كَانَ عُتْبَةُ بْنُ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَى أَخِيهِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ مِنِّي، فَاقْبِضْهُ إِلَيْكَ، فَلَمَّا كَانَ عَامُ الفَتْحِ أَخَذَهُ سَعْدٌ فَقَالَ ابْنُ أَخِي قَدْ كَانَ عَهِدَ إِلَيَّ فِيهِ، فَقَامَ إِلَيْهِ عَبْدُ بْنُ زَمْعَةَ فَقَالَ: أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ، فَتَسَاوَقَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، ابْنُ أَخِي كَانَ عَهِدَ إِلَيَّ فِيهِ، وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ: أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي وُلِدَ عَلَى فِرَاشِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ» ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الحَجَرُ»، ثُمَّ قَالَ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ: «احْتَجِبِي مِنْهُ» لِمَا رَأَى مِنْ شَبَهِهِ بِعُتْبَةَ، فَمَا رَآهَا حَتَّى لَقِيَ اللَّهَ تَعَالَى
சமீப விமர்சனங்கள்