பாடம்: 6
மரண சாசனம் யாருக்குச் செய்யப்பட்டதோ அவர் மரண சாசனம் செய்த (இறந்த)வருக்காக வாதிடுவது செல்லும்.
ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
அப்து இப்னு ஸம்ஆ (ரலி) அவர்களும் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களும் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனின் விஷயத்தில் (தமக்குள் ஏற்பட்ட தகராறைத் தீர்த்துக் கொள்ள) நபி (ஸல்) அவர்களிடம் வழக்கொன்றைக் கொண்டு வந்தனர். ஸஅத் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரர், ‘நீ (மக்காவுக்குத் திரும்பிச்) சென்றால், ஸம்ஆவுடைய அடிமைப் பெண்ணின் மகனைக் கண்டு (அழைத்து வந்து) பராமரி. ஏனென்றால், அவன் என்னுடைய மகன்’ என்று என்னிடம் (மரணப் படுக்கையில் தன் இறுதி விருப்பமாகக்) கூறியிருந்தார்’ என்றார்கள்.
அப்து இப்னு ஸம்ஆ (ரலி), ‘அவர் என் சகோதரர்; என் தந்தையின் அடிமைப் பெண்ணின் மகன்; என் தந்தையின் ஆதிக்கத்தில் அவன் இருந்தபோது பிறந்தவர்’ என்று கூறினார். அந்த அடிமைப் பெண்ணின் மகனிடம் (ஸஅதுடைய சகோதரர்) உத்பாவின் சாயலைத் தெளிவாகக் கண்ட நபி(ஸல்) அவர்கள், ‘அப்து இப்னு ஸம்ஆவே! அவன் (சட்டப்படி) உனக்கு உரியவனே. (ஏனெனில், ஒரு பெண், யாருடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே அவள் பெற்றெடுத்த குழந்தை சொந்தமாகும். விபச்சாரம் செய்வதவருக்கு இழப்புதான் உரியது’ என்று (தீர்ப்புக்) கூறினார்கள்.
பிறகு ,தம் மனைவி சவ்தா(ரலி) அவர்களை நோக்கி, ‘சவ்தாவே! இந்த இளைஞனிடம் நீ ஹிஜாபைப் பேணிக் கொள். (உன்னை நீ திரையிட்டு மறைத்துக் கொள்.)’ என்று கூறினார்கள்.
Book : 44
بَابُ دَعْوَى الوَصِيِّ لِلْمَيِّتِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
أَنَّ عَبْدَ بْنَ زَمْعَةَ، وَسَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، اخْتَصَمَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ابْنِ أَمَةِ زَمْعَةَ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، أَوْصَانِي أَخِي إِذَا قَدِمْتُ أَنْ أَنْظُرَ ابْنَ أَمَةِ زَمْعَةَ، فَأَقْبِضَهُ، فَإِنَّهُ ابْنِي، وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ: أَخِي وَابْنُ أَمَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِ أَبِي، فَرَأَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَبَهًا بَيِّنًا بِعُتْبَةَ، فَقَالَ: «هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ، الوَلَدُ لِلْفِرَاشِ، وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ»
சமீப விமர்சனங்கள்