தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-521

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தண்ணீரின் வாடை, சுவை, நிறம் ஆகியவற்றை மிகைத்து அதை மாற்றிவிடக் கூடியதைத் தவிர்த்து வேறு எதுவும் தண்ணீரை அசுத்தமாக்கிவிடாது.

அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)

(இப்னுமாஜா: 521)

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ وَالْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيَّانِ قَالَا: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا رِشْدِينُ قَالَ: أَنْبَأَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ إِلَّا مَا غَلَبَ عَلَى رِيحِهِ وَطَعْمِهِ وَلَوْنِهِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-521.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

..


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15783-ரிஷ்தீன் பின் ஸஃத் பற்றி இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    அவர்கள் பலவீனமானவர் என்றும், இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவர் ஒரு பொருட்டே அல்ல என்றும், இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
    இறப்பு ஹிஜ்ரி 199
    வயது: 84
    அவர்கள் இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
  • இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள், இவர் நல்ல மனிதர் என்றாலும் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். இவர் அறிவிக்கும் நல்உபதேசம் சார்ந்த ஹதீஸ்கள் பரவாயில்லை என்று கூறியுள்ளார்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவரிடம் கவனக்குறைவு உள்ளது; இவர் பலமானவர்களிடமிருந்து முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்பதால் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். அபூஸுர்ஆ அவர்களும் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2320, அல்காமிஃலு ஃபிள்ளுஅஃபா-669, தஹ்தீபுத் தஹ்தீப்-3/278)..

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


இது முர்ஸலான செய்தி என்பதே உண்மையாகும்…

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.