தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-1370

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது எழுதுவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும்; அதன் மீது உட்காருவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

(ஹாகிம்: 1370)

حَدَّثَنَاهُ أَبُو الْحَسَنِ أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْعَنَزِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، ثنا أَبُو مُعَاوِيَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ:

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَجْصِيصِ الْقُبُورِ، وَالْكِتَابَةِ فِيهَا، وَالْبِنَاءِ عَلَيْهَا، وَالْجُلُوسِ عَلَيْهَا»

هَذِهِ الْأَسَانِيدُ صَحِيحَةٌ «وَلَيْسَ الْعَمَلُ عَلَيْهَا، فَإِنَّ أَئِمَّةَ الْمُسْلِمِينَ مِنَ الشَّرْقِ إِلَى الْغَرْبِ مَكْتُوبٌ عَلَى قُبُورِهِمْ، وَهُوَ عَمَلٌ أَخَذَ بِهِ الْخَلَفُ عَنِ السَّلَفِ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1370.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1302.




  • ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள், கப்ரின் மீது எழுதுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்ற செய்தியை சரியானது என்று ஏற்றுக்கொண்டாலும் இது செயலில் இல்லை; கிழக்கு முதல் மேற்குவரை உள்ள முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    தலைவர்களின் பெயர்கள் கப்ரில் எழுதப்பட்டுள்ளது. இதை பின்வந்தவர்கள், முன்சென்றவர்களிடமிருந்து பெற்றிருப்பார்கள் என்று கூறியுள்ளார். ஆனால் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இந்தக் கருத்தை மறுத்து நபித்தோழர்களில் யாரும் இவ்வாறு செய்யவில்லை. இந்த தடைப் பற்றி தெரியாத சில தாபிஈன்களோ அல்லது அவர்களுக்கு பின் வந்தவர்களோ இதை உருவாக்கிவிட்டனர் என்று பதில் கூறியுள்ளார்…

(நூல்: முக்தஸர் தல்கீஸுத் தஹபீ-1/291, இர்வாஉல் ஃகலீல்-757)

மேலும் பார்க்க: முஸ்லிம்-1765 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.