தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-3164

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

கப்ருகளின் மீது எழுதுவது குறித்து வந்துள்ள கண்டனம்.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது எழுதுவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும்; அதன் மீது உட்காருவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

(இப்னு ஹிப்பான்: 3164)

ذِكْرُ الزَّجْرِ عَنِ الْكِتْبَةِ عَلَى الْقُبُورِ

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، وَعَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، قَالَا:

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَجْصِيصِ الْقُبُورِ، وَالْكِتَابِ عَلَيْهَا، وَالْبِنَاءِ عَلَيْهَا، وَالْجُلُوسِ عَلَيْهَا»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-3164.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-3243.




  • இந்த செய்தியின் முதல் அறிவிப்பாளர்தொடர் இப்னு ஜுரைஜ் —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) என்றும், இரண்டாவது அறிவிப்பாளர்தொடர் இப்னு ஜுரைஜ் —> அபுஸ்ஸுபைர் —> ஸுலைமான் பின் மூஸா என்றும் வந்துள்ளது. ஆனால் இரண்டாவது அறிவிப்பாளர்தொடர் இப்னு ஜுரைஜ் —> ஸுலைமான் பின் மூஸா —> ஜாபிர் (ரலி) என்பதே சரியானதாகும்.
  • இதனடிப்படையில் இரண்டாவது அறிவிப்பாளர்தொடர் பலவீனமானதாகும். காரணம் இப்னு ஜுரைஜ், ஸுலைமான் பின் மூஸா அவர்களிடம் நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை. மேலும் ஸுலைமான் பின் மூஸா அவர்கள், ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/111)

மேலும் பார்க்க: முஸ்லிம்-1765 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.