கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும்; அதன் மீது உட்காருவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
(almujam-alawsat-5983: 5983)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ الصَّابُونِيُّ الْبَصْرِيُّ قَالَ: ثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ قَالَ: نا عَدِيُّ بْنُ الْفَضْلِ، عَنْ أَشْعَثَ، عَنِ الْحَسَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ:
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَجْصِيصِ الْقُبُورِ، وَالْبِنَاءِ عَلَيْهَا، وَالْقُعُودِ عَلَيْهَا»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ أَشْعَثَ إِلَّا عَدِيُّ بْنُ الْفَضْلِ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-5983.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-6132.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28301-அதீ பின் ஃபள்ல் என்பவர் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர், இவர் பலவீனமானவர் என்றும், சிலர், இவர் கைவிடப்பட்டவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/87, தக்ரீபுத் தஹ்தீப்-1/672)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க: முஸ்லிம்-1765 .
சமீப விமர்சனங்கள்