ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நமக்கும், நயவஞ்சகர்களுக்கும் இடையில் உள்ள அடையாளம் அவர்கள், ஸம்ஸம் நீரை வயிறு நிரம்ப குடிக்கமாட்டார்கள். (நாம் வயிறு நிரம்ப குடிப்போம்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11246)حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الدَّبَرِيُّ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُمَرَ، قَالَ عَبْدُ الرَّزَّاقِ: وَلَا أَعْلَمُ الثَّوْرِيَّ إِلَّا حَدَّثَنَا، عَنْ عُثْمَانَ بْنِ الْأَسْوَدِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«آيَةُ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُنَافِقِينَ أَنَّهُمْ لَا يَتَضَلَّعُونَ مِنْ زَمْزَمَ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-11246.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-11090.
- உஸ்மான் பின் அஸ்வத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் உபைதுல்லாஹ் பின் மூஸா, மக்கீ பின் இப்ராஹீம், அப்துல்லாஹ் பின் முபாரக் ஆகியோர் உஸ்மான் பின் அஸ்வத் —> முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்)என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். அதிகமான பலமானவர்கள் இவ்வாறு அறிவித்திருப்பதால் இதுவே முன்னுரிமை பெற்ற செய்தியாகும். மேற்கண்ட அறிவிப்பாளர்தொடர் ஷாத் ஆகும்.
மேலும் பார்க்க: இப்னு மாஜா-3061 .
சமீப விமர்சனங்கள்