தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-6619

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் வானவர்களில்) ஒரு வானவரைப் பற்றி அறிவிப்பதற்கு எனக்கு (அல்லாஹ்விடமிருந்து) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவரின் இரு கால்களும் ஏழாவது பூமியில் ஊன்றியுள்ளன. அவரின் தோளில் அர்ஷ் உள்ளது. மேலும், அவர் “ஸுப்ஹானக, அய்ன குன்த, வ அய்ன தகூனு (அல்லாஹ்வே! நீ (இதற்குமுன்) எங்கிருந்திருந்தாலும், (இதற்குபின்) எங்கிருந்தாலும் நீ தூய்மையானவன்! என்று கூறிக்கொண்டிருப்பார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(abi-yala-6619: 6619)

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ إِسْحَاقَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

أُذِنَ لِي أَنْ أُحَدِّثَ عَنْ مَلَكٍ قَدْ مَرَقَتْ رِجْلَاهُ الْأَرْضَ السَّابِعَةَ، وَالْعَرْشُ عَلَى مَنْكِبِهِ، وَهُوَ يَقُولُ: سُبْحَانَكَ أَيْنَ كُنْتَ؟ وَأَيْنَ تَكُونُ؟


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-6619.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-6584.




  • இந்த செய்தியை இஸ்ராயீல் பின் யூனுஸ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இஸ்ஹாக் பின் மன்ஸூர், உபைதுல்லாஹ் பின் மூஸா ஆகியோர் இஸ்ராயீல் —> முஆவியா பின் இஸ்ஹாக் —> ஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)
    என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
  • ஆனால் மற்றவர்கள், இஸ்ராயீல் —> இப்ராஹீம் பின் ஃபள்ல் (இப்ராஹீம் அபூஇஸ்ஹாக்) —> ஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)
    என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

ஸயீத் அல்மக்புரீ வழியாக அறிவிப்பவர்களில் இப்ராஹீம் பின் ஃபள்ல் பிரபலமானவர் என்பதால் இந்த செய்தி இப்ராஹீம் பின் ஃபள்ல் வழியாக வந்திருப்பதற்கே வாய்ப்புள்ளது. இப்ராஹீம் பின் ஃபள்ல் பலவீனமானவர் என்பதால் இந்த செய்தி பலவீனமானது என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-1475, 4/122)

மேலும் இந்த செய்தியின் கருத்தும் பல வகையில் குளறுபடியாக வந்துள்ளது. சிலவற்றில் வானவர் என்றும், சிலவற்றில் சேவல் என்றும் வந்துள்ளது.  வானவர் கூறும் திக்ர் பற்றியும் வெவ்வேறு வார்த்தைகள் கூறப்பட்டுள்ளது என்பதால் இதை சரி என்று கூறிய அறிஞர்களின் கருத்தை விட, பலவீனமானது என்று கூறும் அறிஞர்களின் கருத்தே பலமாக உள்ளது.

(இஸ்ஹாக் பின் மன்ஸூரிடமிருந்து அறிவிக்கும் அம்ர் அந்நாகித் மற்றவர்களை விட மிகப்பலமானவர் என்பதால் இந்த செய்தியில் வானவர் பற்றி கூறப்படுவதே சரியாக இருக்க வாய்ப்புள்ளது. சேவலைப் பற்றி வரும் செய்தி பலவீனமானது)

  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-150)

2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-6619 ,

…அல்முஃஜமுல் அவ்ஸத்-7324 , ஹாகிம்-7813 ,

சரியான ஹதீஸ் பார்க்க: அபூதாவூத்-4727 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.