நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் வானவர்களில் ஒருவரைப் பற்றி அறிவிப்பதற்கு எனக்கு (அல்லாஹ்விடமிருந்து) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவரின் காது சோனையிலிருந்து தோள்புஜம் வரை உள்ள இடைவெளியானது எழுநூறு ஆண்டுகள் பயணிக்கும் தொலைவாகும்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
(அபூதாவூத்: 4727)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَفْصِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«أُذِنَ لِي أَنْ أُحَدِّثَ عَنْ مَلَكٍ مِنْ مَلَائِكَةِ اللَّهِ مِنْ حَمَلَةِ الْعَرْشِ، إِنَّ مَا بَيْنَ شَحْمَةِ أُذُنِهِ إِلَى عَاتِقِهِ مَسِيرَةُ سَبْعِ مِائَةِ عَامٍ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4727.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4104.
அர்ஷை சுமக்கும் வானவர்களில் ஒரு வானவர் பற்றி வரும் இந்த செய்தி பலவாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
- சில அறிவிப்புகளில் வானவரின் காதுக்கும், தோள்புஜத்திற்கும் உள்ள இடைவெளி பற்றி 50 ஆண்டுகள் பயணிக்கும் தொலைவு என்றும்,
- சிலவற்றில் 70 ஆண்டுகள் என்றும்,
- சிலவற்றில் 100 ஆண்டுகள் என்றும்,
- சிலவற்றில் 400 ஆண்டுகள் என்றும்,
- சிலவற்றில் 500 ஆண்டுகள் என்றும்,
- சிலவற்றில் 700 ஆண்டுகள் என்றும் வந்துள்ளது.
இப்ராஹீம் பின் தஹ்மான் அவர்கள் தொகுத்த நூலில் 700 ஆண்டுகள் என்று வந்திருப்பதால் இதுவே சரியானதாக இருக்க வாய்ப்புள்ளது.
(நூல்: மஷ்யக்கது இப்னு தஹ்மான்-21)
- இந்தப் பக்கத்தில் நாம் பதிவு செய்துள்ள செய்திகளில் ஜாபிர் (ரலி) வழியாக வரும் மேற்கண்ட செய்தியைத் தவிர மற்ற செய்திகளில் விமர்சனம் உள்ளது. சிலர் அவைகளை சரியானது என்று கூறியிருந்தாலும் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் அவற்றை விமர்சித்துள்ளார்கள் என்பதால் அவை பலவீனமானதாகும்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-1475, 4/122)
1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-4727 , அல்முஃஜமுல் அவ்ஸத்-1709 , 4421 ,
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-6619 .
3 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-6503 .
4 . ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-7391 .
5 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஹில்யதுல் அவ்லியா-,
6 . முஹம்மது பின் முன்கதிர் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
சமீப விமர்சனங்கள்