அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும்; பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்; நன்மையை ஏவி, தீமையைத் தடுக்காதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
…
(திர்மிதி: 1921)حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَبَانَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ شَرِيكٍ، عَنْ لَيْثٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيُوَقِّرْ كَبِيرَنَا، وَيَأْمُرْ بِالمَعْرُوفِ وَيَنْهَ عَنِ المُنْكَرِ»
هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَحَدِيثُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، وَقَدْ رُوِيَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو مِنْ غَيْرِ هَذَا الوَجْهِ أَيْضًا، قَالَ بَعْضُ أَهْلِ العِلْمِ: مَعْنَى قَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا» يَقُولُ: لَيْسَ مِنْ سُنَّتِنَا، لَيْسَ مِنْ أَدَبِنَا، وَقَالَ عَلِيُّ بْنُ المَدِينِيِّ: قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ: كَانَ سُفْيَانُ الثَّوْرِيُّ يُنْكِرُ هَذَا التَّفْسِيرَ: «لَيْسَ مِنَّا» يَقُولُ: لَيْسَ مِثْلَنَا
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1921.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1840.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன் என்பவர் பற்றி பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் மூளைக்குழம்பிவிட்டார். இவரின் எந்த செய்திகள் சரியானவை எந்த செய்திகள் தவறானவை என பிரித்து அறியமுடியவில்லை; எனவே இவர் கைவிடப்பட்டு விட்டார் என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/484, தக்ரீபுத் தஹ்தீப்-5721)
- மேலும் இதில் வரும் ராவீ-19163-ஷரீக் பின் அப்துல்லாஹ் பற்றி, இவர் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், அதிகம் தவறிழைப்பவர் என்றும் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-2802)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-458 .
சமீப விமர்சனங்கள்