அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகை) வரிசைகளில் (இடைவெளியின்றி) சேர்ந்திருப்போருக்கு அல்லாஹ் அருள்புரிகிறான். வானவர்கள், அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளைக் கேட்கின்றனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 25270)حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أُسَامَةَ، عَنْ عُثْمَانَ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الَّذِينَ يَصِلُونَ الصُّفُوفَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-25270.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-6786-உஸாமா பின் ஸைத் அல்லைஸீ அவர்கள் இடம்பெறும் செய்திகளை புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
போன்றோர் துணை சான்றாக கூறியுள்ளனர். - யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள் ஆரம்பத்தில் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்தாலும் பின்னால் அவரின் செய்திகளை நான் இனி அறிவிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். இவரின் கருத்தையே இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் போன்றோர் ஏற்றுள்ளனர். - இமாம் இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
தஹாவீ பிறப்பு ஹிஜ்ரி 238
இறப்பு ஹிஜ்ரி 321
வயது: 83
போன்றோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர். யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
அவர்கள், இவர் மதீனாவாசிகளிடம் நம்பிக்கைக்குரிய, பலமானவர் என்று கூறியதாக பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்கள் குறிப்பிட்டுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் சில இடங்களில் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ளார். - தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இவரின் செய்திகளை புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
போன்றோர் துணை ஆதாரமாகக் கூறியுள்ளனர். எனவே இவர் ஹஸன் தரத்தில் உள்ளவர் எனக் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.1/108, தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/124, ஸியரு அஃலாமின் நுபலா-145)
…உஸாமா பின் ஸைத் அல்லைஸீ மனனத்திலிருந்து அறிவித்தால் தவறிழைப்பார் என்பதாலே அவரை சிலர் விமர்சித்துள்ளனர். அவர் நூலிலிருந்து அறிவித்தால் தவறு செய்யமாட்டார். அவர் தன் நூலிலிருந்து அறிவிக்கும் செய்தியையே இப்னு வஹ்ப் அறிவிப்பார் என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர். (இந்த செய்தியை இப்னு வஹ்ப் அவர்களும் இவரிடமிருந்து அறிவித்துள்ளார்)
(பார்க்க: இப்னு குஸைமா-1550)
எனவே இந்த செய்தியை சில அறிஞர்கள் ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.
1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-24381 , 24587 , 25270, இப்னு மாஜா-995 , இப்னு குஸைமா-1550 , இப்னு ஹிப்பான்-2163 , 2164 , ஹாகிம்-775 , குப்ரா பைஹகீ-5187 , 5200 , 5201 ,
இன்ஷா அல்லாஹ் மற்ற கூடுதல் தகவல்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-676 ,
சமீப விமர்சனங்கள்