பாடம் : 124 தும்மியவர் (‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று) அல்லாஹ்வைப் புகழ்ந்தால், அவருக்கு (‘யர்ஹமுகல்லாஹ்லிஅல்லாஹ் உமக்குக் கருணைபுரிவானாக’ என்று) மறுமொழி கூறுவது. இது குறித்து அபூஹுரைரா (ரலி) அவர் களிடமிருந்து ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.256
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏழு செயல்களைச் செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடைவிதித்தார்கள்.
எங்களுக்குக் கட்டளையிட்ட ஏழு விஷயங்கள் இவைதாம்:
1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.
2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.
3. தும்மிய(வர் ‘அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’ என்று கூறினால் அ)வருக்கு (‘அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக’ என்று) மறுமொழி கூறுவது.
4. விருந்து அழைப்பை ஏற்றுக் கொள்வது.
5. சலாமுக்கு (முகமனுக்கு) பதில் உரைப்பது
6. அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுவது.
7. சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது.
(ஆண்களாகிய) எங்களுக்கு அவர்கள் தடை செய்த ஏழு விஷயங்கள் இவைதாம்:
1. ‘தங்கமோதிரம் அணிவது’ அல்லது ‘தங்க வளையம் அணிவது’ 2. சாதாரணப் பட்டு அணிவது. 3. அலங்காரப் பட்டு அணிவது. 4. மென்பட்டு அணிவது 5. மென்பட்டுத் திண்டு பயன்படுத்துவது. 257
Book : 78
(புகாரி: 6222)بَابُ تَشْمِيتِ العَاطِسِ إِذَا حَمِدَ اللَّهَ
فِيهِ أَبُو هُرَيْرَةَ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَشْعَثِ بْنِ سُلَيْمٍ، قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، عَنِ البَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ، وَنَهَانَا عَنْ سَبْعٍ: أَمَرَنَا بِعِيَادَةِ المَرِيضِ، وَاتِّبَاعِ الجِنَازَةِ، وَتَشْمِيتِ العَاطِسِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَرَدِّ السَّلاَمِ، وَنَصْرِ المَظْلُومِ، وَإِبْرَارِ المُقْسِمِ. وَنَهَانَا عَنْ سَبْعٍ: عَنْ خَاتَمِ الذَّهَبِ، أَوْ قَالَ: حَلْقَةِ الذَّهَبِ، وَعَنْ لُبْسِ الحَرِيرِ، وَالدِّيبَاجِ، وَالسُّنْدُسِ، وَالمَيَاثِرِ
சமீப விமர்சனங்கள்