பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டு, ஏழு விஷயங்களை எங்களுக்குத் தடை செய்தார்கள்.
- நோயாளிடம் நலம் விசாரிக்கும்படியும்,
- ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லும்படியும்,
- தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் – எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்லும்படியும்,
- விருந்து அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும்,
- ஸலாம் எனும் முகமனைப் பரப்பும்படியும்,
- அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும்,
- சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
மேலும்,
- (ஆண்கள்) தங்க மோதிரங்களை அணிய வேண்டாமென்றும்,
- (யாரும்) வெள்ளிப் பாத்திரத்தில் நீர் அருந்த வேண்டாமென்றும்,
- மென்பட்டுத் திண்டு-மெத்தை (மீஸரா),
- பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும்,
- சாதாரணப் பட்டு,
- அலங்காரப் பட்டு,
- தடித்தப்பட்டு ஆகியவற்றை அணிய வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.
அத்தியாயம்: 74
(புகாரி: 5635)حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَشْعَثِ بْنِ سُلَيْمٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ
أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ وَنَهَانَا عَنْ سَبْعٍ: أَمَرَنَا بِعِيَادَةِ المَرِيضِ، وَاتِّبَاعِ الجِنَازَةِ، وَتَشْمِيتِ العَاطِسِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَإِفْشَاءِ السَّلاَمِ، وَنَصْرِ المَظْلُومِ، وَإِبْرَارِ المُقْسِمِ، وَنَهَانَا عَنْ خَوَاتِيمِ الذَّهَبِ، وَعَنِ الشُّرْبِ فِي الفِضَّةِ، أَوْ قَالَ: آنِيَةِ الفِضَّةِ، وَعَنِ المَيَاثِرِ وَالقَسِّيِّ، وَعَنْ لُبْسِ الحَرِيرِ وَالدِّيبَاجِ وَالإِسْتَبْرَقِ
Bukhari-Tamil-5635.
Bukhari-TamilMisc-5635.
Bukhari-Shamila-5635.
Bukhari-Alamiah-5204.
Bukhari-JawamiulKalim-5231.
- இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் முழுமையாகவும் அறிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்
2 . மூஸா பின் இஸ்மாயீல்
3 . அபூஅவானா-வள்ளாஹ் பின் அப்துல்லாஹ்
4 . அஷ்அஸ் பின் ஸுலைம்
5 . முஆவியா பின் ஸுவைத்
6 . பராஉ பின் ஆஸிப் (ரலி)
1 . இந்தக் கருத்தில் பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அஷ்அஸ் பின் ஸுலைம் —> முஆவியா பின் ஸுவைத் —> பராஉ பின் ஆஸிப் (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, புகாரி-1239, 2445, 5175, 5635, 5650, 5838, 5849, 5863, 6222, 6235, 6654, முஸ்லிம்-4194, இப்னு மாஜா-2115, 3589, திர்மிதீ-1760, 2809, குப்ரா நஸாயீ-, நஸாயீ-1939, 3778, 5309, ஷரஹ் மஆனில் ஆஸார்-, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, குப்ரா பைஹகீ-,
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-1240,
சமீப விமர்சனங்கள்