தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1240

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை:

  1. ஸலாமுக்கு பதிலுரைப்பது,
  2. நோயாளியை விசாரிப்பது,
  3. ஜனாஸாவைப் பின்தொடர்வது,
  4. விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது,
  5. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அத்தியாயம்: 23

புகாரீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை அம்ர் பின் அபூஸலமா என்பவர், ஸுஹ்ரீ வழியாக அறிவித்திருப்பதைப் போன்றே அப்துர்ரஸ்ஸாக் அவர்களும் மஃமர் அவர்களிடமிருந்து ஸுஹ்ரீ வழியாக அறிவித்துள்ளார்.

இவ்வாறே ஸலாமா பின் ரவ்ஹ் என்பவரும், உகைல் பின் காலிதிடமிருந்து ஸுஹ்ரீ வழியாக அறிவித்துள்ளார்.

(புகாரி: 1240)

حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ

حَقُّ المُسْلِمِ عَلَى المُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلاَمِ، وَعِيَادَةُ المَرِيضِ، وَاتِّبَاعُ الجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ العَاطِسِ

تَابَعَهُ عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، وَرَوَاهُ سَلاَمَةُ بْنُ رَوْحٍ، عَنْ عُقَيْلٍ


Bukhari-Tamil-1240.
Bukhari-TamilMisc-1240.
Bukhari-Shamila-1240.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . முஹம்மத் பின் யஹ்யா அத்துஹ்லீ

3 . அம்ர் பின் அபூஸலமா…

4 . அவ்ஸாஈ இமாம்

5 . ஸுஹ்ரீ இமாம்

6 . ஸயீத் பின் முஸய்யிப்

7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32106-அம்ர் பின் அபூஸலமா என்பவர் பற்றி இமாம் ஷாஃபிஈ, இப்னு யூனுஸ், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள், இவர் சில செய்திகளை தவறாக அறிவித்துள்ளார் என்றும், பலவீனமானவர் என்றும் கூறியுள்ளார்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளலாம். (தனி) ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
  • உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அவர்கள், இவரின் செய்தியில் தவறு உள்ளது என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரின் இரு செய்திகளை மட்டுமே புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் பதிவு செய்துள்ளார். மேலும் இவரின் செய்தியுடன் மற்றவர்களின் அறிவிப்புகளை துணைச் சான்றாக கூறியுள்ளார் என்ற கருத்தில் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/235, தஹ்தீபுல் கமால்-22/51, அல்காஷிஃப்-3/515, தஹ்தீபுத் தஹ்தீப்-3/275, தக்ரீபுத் தஹ்தீப்-1/737)

இந்தச் செய்தியை அம்ர் பின் அபூஸலமா தனித்து அறிவிக்கவில்லை என்பதால் தான் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இவரின் செய்தியை பதிவு செய்துள்ளார் என்று தெரிகிறது.


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • 1 . ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, அஹ்மத்-, புகாரி-1240, முஸ்லிம்-4367, அபூதாவூத்-, …


  • 2 . அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, இப்னு மாஜா-1435, முஸ்னத் பஸ்ஸார்-, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-,


  • 3 . அப்துர்ரஹ்மான் பின் யஃகூப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-, முஸ்லிம்-, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-, குப்ரா பைஹகீ-,


  • 4 . ஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: திர்மிதீ-2737, குப்ரா நஸாயீ-, நஸாயீ-1938,


  • 5 . அப்துர்ரஹ்மான் பின் ஹுஜைரா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-,


  • 6 . மஃமர் —> ஸுஹ்ரீ (ரஹ்)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, குப்ரா பைஹகீ-,



இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-5635,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.