பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களை(க் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டு, ஏழு விஷயங்களை எங்களுக்குத் தடைசெய்தார்கள்.
- நோயாளியிடம் நலம் விசாரிக்கும்படியும்,
- ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லும்படியும்,
- தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -உங்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக என) பதில் சொல்லும்படியும்,
- (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும்,
- அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும்,
- ‘ஸலாம்’ எனும் முகமனைப் பரப்புப்படியும்,
- விருந்து அழைப்பை ஏற்கும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
மேலும்,
- (ஆண்கள்) தங்க மோதிரங்களை அணிய வேண்டாமென்றும்,
- வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்றும்,
- ‘மைஸரா’ எனும் பட்டுமெத்தை,
- பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை,
- தடித்தப் பட்டு,
- (கலப்படமில்லாத) சுத்தப் பட்டு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.
இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
அத்தியாயம்: 67
(புகாரி: 5175)حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ ، عَنِ الْأَشْعَثِ ، عَنْ مُعَاوِيَةَ بْنِ سُوَيْدٍ: قَالَ الْبَرَاءُ بْنُ عَازِبٍ رَضِيَ اللهُ عَنْهُمَا
أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ ، وَنَهَانَا عَنْ سَبْعٍ: أَمَرَنَا بِعِيَادَةِ الْمَرِيضِ ، وَاتِّبَاعِ الْجِنَازَةِ ، وَتَشْمِيتِ الْعَاطِسِ ، وَإِبْرَارِ الْقَسَمِ ، وَنَصْرِ الْمَظْلُومِ ، وَإِفْشَاءِ السَّلَامِ ، وَإِجَابَةِ الدَّاعِي ، وَنَهَانَا عَنْ خَوَاتِيمِ الذَّهَبِ ، وَعَنْ آنِيَةِ الْفِضَّةِ ، وَعَنِ الْمَيَاثِرِ ، وَالْقَسِّيَّةِ ، وَالْاسْتَبْرَقِ ، وَالدِّيبَاجِ .
تَابَعَهُ أَبُو عَوَانَةَ وَالشَّيْبَانِيُّ عَنْ أَشْعَثَ فِي إِفْشَاءِ السَّلَامِ
Bukhari-Tamil-5175.
Bukhari-TamilMisc-5175.
Bukhari-Shamila-5175.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
- இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் முழுமையாகவும் அறிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
மேலும் பார்க்க: புகாரி-5635.
சமீப விமர்சனங்கள்