தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5863

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 45

தங்க மோதிரங்கள்.

 பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்:

‘தங்க மோதிரம்’ அல்லது ‘தங்க வளையம்’, சாதாரணப் பட்டு, தடித்தப்பட்டு அலங்காரப்பட்டு, சிவப்பு மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, வெள்ளிப் பாத்திரம் ஆகிய ஏழு பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

மேலும், நோயாளிகளை நலம் விசாரிப்பது, ‘ஜனாஸா’வைப் பின்தொடர்ந்து செல்வது, தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்வது, சலாமுக்கு பதிலுரைப்பது, விருந்து அழைப்பை ஏற்பது, சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவிடுவது மற்றும் அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவிபுரிவது ஆகிய ஏழு (நற்)செயல்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.79

Book : 77

(புகாரி: 5863)

بَابُ خَوَاتِيمِ الذَّهَبِ

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَشْعَثُ بْنُ سُلَيْمٍ، قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، قَالَ: سَمِعْتُ البَرَاءَ بْنَ عَازِبٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ

نَهَانَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ سَبْعٍ: نَهَانَا عَنْ خَاتَمِ الذَّهَبِ ” أَوْ قَالَ: ” حَلْقَةِ الذَّهَبِ، وَعَنِ الحَرِيرِ، وَالإِسْتَبْرَقِ، وَالدِّيبَاجِ، وَالمِيثَرَةِ الحَمْرَاءِ، وَالقَسِّيِّ، وَآنِيَةِ الفِضَّةِ. وَأَمَرَنَا بِسَبْعٍ: بِعِيَادَةِ المَرِيضِ، وَاتِّبَاعِ الجَنَائِزِ، وَتَشْمِيتِ العَاطِسِ، وَرَدِّ السَّلاَمِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَإِبْرَارِ المُقْسِمِ، وَنَصْرِ المَظْلُومِ





இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


மேலும் பார்க்க: புகாரி-5635.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.