பாடம்: 28
‘கஸ்’ வகைப் பட்டு அணிவது.
அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் அலீ (ரலி) அவர்களிடம், ‘ ‘கஸ்’ வகைத் துணி என்றால் என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது ஷாம் (சிரியா) நாட்டிலிருந்தோ எகிப்திலிருந்தோ எங்களுக்கு வந்துகொண்டிருந்த ஒரு வகைத் துணியாகும். அதில் விலா எலும்புகளைப் போன்று வரி வரியாகக் கோடுகள் இருக்கும்; அதில் பட்டும் கலந்திருக்கும். நாரத்தையைப் போன்ற (தடித்த வளைந்த) கோடுகள் அதில் இருக்கும்.
‘மீஸரா’ என்பது, பெண்கள் தம் கணவர்களுக்காக மென்பட்டுத் திண்டுகளைப் போன்று தயாரித்து வந்த விரிப்புகளாகும்’ என்று பதிலளித்தார்கள்.
ஜரீர் பின் அப்துல்ஹமீத் (ரஹ்) அவர்கள் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸில் (பின்வருமாறு) காணப்படுகிறது:
‘கஸ்’ வகைத் துணி என்பது விலா எலும்புகளைப் போன்று வரி வரியாகக் கோடுகள் போடப்பட்ட எகிப்திலிருந்து கொண்டு வரப்படுகின்ற ஒரு வகைத் துணியாகும். அதில் பட்டு கலந்திருக்கும். ‘மீஸரா’ என்பது விலங்குகளின் தோல்களாகும்.
அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய) நான் கூறுகிறேன்:
‘மீஸரா’ தொடர்பாக ஆஸிம் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள (மேற்கண்ட) கருத்தே அதிகமான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளதாகும்; (யஸீத் அவர்கள் கூறியுள்ள விலங்குகளின் தோல் என்பதை விடச்) சரியானதும் ஆகும்.
பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்கள் (‘மீஸரா) சிவப்பு மென்பட்டு விரிப்புகளையும், ‘கஸ்’ வகைப்பட்டுத் துணியையும் எங்களுக்குத் தடை செய்தார்கள்.
அத்தியாயம்: 77
(புகாரி: 5838)بَابُ لُبْسِ القَسِّيِّ
وَقَالَ عَاصِمٌ: عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ: قُلْتُ: لِعَلِيٍّ: مَا القَسِّيَّةُ؟ قَالَ: ثِيَابٌ أَتَتْنَا مِنَ الشَّأْمِ، أَوْ مِنْ مِصْرَ، مُضَلَّعَةٌ فِيهَا حَرِيرٌ وَفِيهَا أَمْثَالُ الأُتْرُنْجِ، وَالمِيثَرَةُ: كَانَتِ النِّسَاءُ تَصْنَعُهُ لِبُعُولَتِهِنَّ، مِثْلَ القَطَائِفِ يُصَفِّرْنَهَا “
وَقَالَ جَرِيرٌ: عَنْ يَزِيدَ فِي حَدِيثِهِ: القَسِّيَّةُ: ثِيَابٌ مُضَلَّعَةٌ يُجَاءُ بِهَا مِنْ مِصْرَ فِيهَا الحَرِيرُ، وَالمِيثَرَةُ: جُلُودُ السِّبَاعِ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «عَاصِمٌ أَكْثَرُ وَأَصَحُّ فِي المِيثَرَةِ»
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ
«نَهَانَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ المَيَاثِرِ الحُمْرِ وَالقَسِّيِّ»
Bukhari-Tamil-5838.
Bukhari-TamilMisc-5838.
Bukhari-Shamila-5838.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
- இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் முழுமையாகவும் அறிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
மேலும் பார்க்க: புகாரி-5635.
சமீப விமர்சனங்கள்