தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-21282

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

(ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். அப்போது அவரிடம், “உமக்கு எப்போதாவது காய்ச்சல் வந்ததுண்டா? காய்ச்சல் என்றால் தோலுக்கும் சதைக்கும் இடையில் ஏற்படும் சூடு” என்று நபி (ஸல்) கூறினார்கள். அதற்கவர், இது போன்ற வலி எனக்கு ஏற்பட்டதில்லை என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இறைநம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானதாகும். அது சில நேரம் சிவந்துவிடுகிறது. சில நேரம் மஞ்சனித்து (வெளுத்து) விடுகிறது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபைய்யு பின் கஅப் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 21282)

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَمَّنْ، حَدَّثَهُ، عَنْ أُمِّ وَلَدِ أُبَيِّ بْنِ كَعْبٍ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ:

أَنَّهُ دَخَلَ رَجُلٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَتَى عَهْدُكَ بِأُمِّ مِلْدَمٍ؟» وَهُوَ حَرٌّ بَيْنَ الْجِلْدِ وَاللَّحْمِ، قَالَ: إِنَّ ذَلِكَ لَوَجَعٌ مَا أَصَابَنِي قَطُّ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الْمُؤْمِنِ مَثَلُ الْخَامَةِ تَحْمَرُّ مَرَّةً، وَتَصْفَرُّ أُخْرَى»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-21282.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் உபைய்யு பின் கஅப் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவரும், இஸ்மாயீல் பின் உமய்யாவின் ஆசிரியரும் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அஹ்மத்-8395 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.