தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3989

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

உமர் (ரலி) அவர்கள், ஒரு நாள் மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசலுக்கு சென்றார்கள். அப்போது முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் மண்ணறைக்கருகில் அமர்ந்து அழுதுக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள், “உம்மை இவ்வாறு அழ வைத்தது எது? (என்னக் காரணம்) என்று கேட்டார்கள். அதற்கு முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், “குறைந்த அளவான முகஸ்துதியும் இணைவைத்தலாகும். அல்லாஹ்வின் நேசரை பகைத்துக் கொள்பவர் அல்லாஹ்விடம் போர்ப் பிரகடனம் செய்தவர் ஆவார். அல்லாஹ், நல்லோர்களான; இறையச்சமுடையோர்களான; (மக்களை விட்டு) விலகி வாழ்கின்றோர்களை நேசிக்கிறான். ஒரு இடத்தில் அவர்கள் இல்லாவிட்டால் அவர்களை யாரும் தேடமாட்டார்கள். ஒரு இடத்தில் அவர்கள் இருந்தாலும் அவர்கள் யாராலும் அழைக்கப்பட மாட்டார்கள். யாராலும் அறியப்பட மாட்டார்கள். அவர்களின் உள்ளம் நேர்வழியின் விளக்காகும். இருள்நிறைந்த (பாவம் என்னும்) தூசிகளிலிருந்து அவர்கள் நீங்கியவர்களாக இருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியேற்ற இந்த செய்தி தான் என்னை அழவைத்துவிட்டது என்று கூறினார்கள்.

(இப்னுமாஜா: 3989)

بَابُ مَنْ تُرْجَى لَهُ السَّلَامَةُ مِنَ الْفِتَنِ

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ، عَنْ عِيسَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ،

أَنَّهُ خَرَجَ يَوْمًا إِلَى مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدَ مُعَاذَ بْنَ جَبَلٍ قَاعِدًا عِنْدَ قَبْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْكِي؟ فَقَالَ: مَا يُبْكِيكَ؟ قَالَ: يُبْكِينِي شَيْءٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ يَسِيرَ الرِّيَاءِ شِرْكٌ، وَإِنَّ مَنْ عَادَى لِلَّهِ وَلِيًّا، فَقَدْ بَارَزَ اللَّهَ بِالْمُحَارَبَةِ، إِنَّ اللَّهَ يُحِبُّ الْأَبْرَارَ الْأَتْقِيَاءَ الْأَخْفِيَاءَ، الَّذِينَ إِذَا غَابُوا لَمْ يُفْتَقَدُوا، وَإِنْ حَضَرُوا لَمْ يُدْعَوْا، وَلَمْ يُعْرَفُوا قُلُوبُهُمْ مَصَابِيحُ الْهُدَى، يَخْرُجُونَ مِنْ كُلِّ غَبْرَاءَ مُظْلِمَةٍ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3989.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32972-ஈஸா பின் அப்துர்ரஹ்மான் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/768)

4 . இந்தக் கருத்தில் முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸைத் பின் அஸ்லம் —> அஸ்லம் —> உமர் (ரலி) —> முஆத் பின் ஜபல் (ரலி)

பார்க்க: இப்னு மாஜா-3989 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-,

  • உமர் (ரலி) —> முஆத் பின் ஜபல் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, அல்முஃஜமுஸ் ஸகீர்-, ஹாகிம்-,

மேலும் பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-3481 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.