நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்கு (ஹதஸ் எனும்) சிறுதுடக்கு ஏற்பட்டால் அவர் (உளூ) அங்கத் தூய்மை செய்து கொள்ளாத வரை அவரது தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழியாகும்.
(திர்மிதி: 76)حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ صَلَاةَ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
Tirmidhi-Tamil-71.
Tirmidhi-TamilMisc-71.
Tirmidhi-Shamila-76.
Tirmidhi-Alamiah-71.
Tirmidhi-JawamiulKalim-71.
(குறிப்பு: பெரும்பாலான திர்மிதீ நூலின் பிரதிகளில் இந்தச் செய்தியில் மேற்கண்டவாறே திர்மிதீ இமாம் அவர்களின் கருத்து உள்ளது. தாருல் ஃபிக்ர் என்ற பிரதியில் திர்மிதீ இமாம் அவர்களின் கருத்து கீழ்க்கண்டவாறு கூடுதலாக உள்ளது.
قال: وفى الباب عن عبد الله بن زيد ، وعلى بن طلق ، وعائشة ، وابن عباس
، وابن مسعود ، وابى سعيد . قال أبو عيسى : هذا حديث حسن صحيح .وهو قول العلماء : ان لا يجب عليه الوضوء الا من حدث : يسمع صوتا
أو يجد ريحا .
இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி, அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி), அலீ பின் தல்க் (ரலி), ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி), அபூஸயீத் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் பிரகாரமே, சிறுதுடக்கு ஏற்படும்போது சத்தத்தை கேட்டால் அல்லது நாற்றத்தை உணர்ந்தால் தான் உளூ கடமையாகும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.)
இந்தப் பகுதி பெரும்பாலான பிரதிகளில் ஹதீஸ் எண் 75 இல் உள்ளது. அந்த ஹதீஸுக்குத் தான் இந்தப்பகுதி பொருத்தமானதாகும்.
மேலும் பார்க்க: புகாரி-135 .
சமீப விமர்சனங்கள்