பாடம்: 28
தாங்க முடியாத சோதனையிலிருந்து பாதுகாப்புக் கோருவது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரிவந்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த அறிவிப்பில் மூன்று மட்டுமே உள்ளது. நான்தான் ஒன்றை அதிகபட்சமாக அறிவித்துள்ளேன். இவற்றில் அது எதுவென எனக்குத் தெரியவில்லை. (மறந்துவிட்டேன்.)
அத்தியாயம்: 80
(புகாரி: 6347)بَابُ التَّعَوُّذِ مِنْ جَهْدِ البَلاَءِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي سُمَيٌّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَعَوَّذُ مِنْ جَهْدِ البَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ القَضَاءِ، وَشَمَاتَةِ الأَعْدَاءِ» قَالَ سُفْيَانُ: «الحَدِيثُ ثَلاَثٌ، زِدْتُ أَنَا وَاحِدَةً، لاَ أَدْرِي أَيَّتُهُنَّ هِيَ»
Bukhari-Tamil-6347.
Bukhari-TamilMisc-6347.
Bukhari-Shamila-6347.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
فتح الباري لابن حجر (11/ 148)
وَأَخْرَجَهُ الْإِسْمَاعِيلِيُّ من طَرِيق بن أَبِي عُمَرَ عَنْ سُفْيَانَ وَبَيَّنَ أَنَّ الْخَصْلَةَ الْمَزِيدَةَ هِيَ شَمَاتَةُ الْأَعْدَاءُ وَكَذَا أَخْرَجَهُ الْإِسْمَاعِيلِيُّ مِنْ طَرِيقِ شُجَاعِ بْنِ مَخْلَدٍ عَنْ سُفْيَانَ مُقْتَصِرًا عَلَى الثَّلَاثَةِ دُونَهَا
இஸ்மாயீலீ அவர்களின் இரு அறிவிப்புகளின் மூலம் ஸுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூடுதலாக அறிவித்த வார்த்தை شَمَاتَةُ الْأَعْدَاءُ (எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல்) என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: ஃபத்ஹுல் பாரீ-11/148)
சமீப விமர்சனங்கள்