தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-4295

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

ராஃபிஉ பின் கதீஜ்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பனூ அப்துல்அஷ்ஹல் குலத்தாரான) எங்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது எங்களுக்கு ‘மஃக்ரிப்’ தொழுகை தொழுவித்தார்கள். அவர்கள், ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்தபோது, “(மஃக்ரிப் தொழுகையின்) இந்த இரண்டு ரக்அத் (பின் சுன்னத்) தொழுகையை உங்கள் வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் உமர் (ரஹ்)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 4295)

حَدَّثَنَا أَبُو زَيْدٍ الْحَوْطِيُّ، ثنا أَبُو الْيَمَانِ الْحَكَمُ بْنُ نَافِعٍ، ثنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ:

أَتَانَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَنِي عَبْدِ الْأَشْهَلِ فَصَلَّى بِنَا الْمَغْرِبَ فِي مَسْجِدِنَا ثُمَّ قَالَ: «ارْكَعُوا هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فِي بُيُوتِكُمْ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-4295.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-4170.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் தப்ரானீ அவர்களின் ஆசிரியரான; ராவீ-4231-அபூஸைத் அல்ஹவ்தீ-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் அப்துர்ரஹீம்
    என்பவர் அறியப்படாதவர் என்று இப்னுல் கத்தான் அல்ஃபாஸீ பிறப்பு ஹிஜ்ரி 562
    இறப்பு ஹிஜ்ரி 628
    வயது: 66
    கூறியுள்ளார். என்றாலும் இவரைப் பற்றி தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் முஹத்திஸ்-ஹதீஸ்கலை அறிஞர் என்றக் கருத்தில் கூறியுள்ளார். எனவே இவர் குறைந்த பட்சம் ஸதூக்-நம்பகமானவர் என்ற தரத்தில் உள்ளவர் என அபுத்தய்யிப் என்பவர் கூறியுள்ளார்.

(நூல்: இர்ஷாதுல் காஸீ, வத்தானீ-126)

  • மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-7845-இஸ்மாயீல் பின் அய்யாஷ் ஷாம்வாசிகள் வழியாக அறிவித்தால் மட்டுமே சரியானதாகும் என்று அதிகமான அறிஞர்கள் கூறியிருப்பதாக இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/142)

இவரின் ஆசிரியர் முஹம்மது பின் இஸ்ஹாக் ஷாம்வாசி அல்ல. என்றாலும் ஷாம்நாட்டின் ஜஸீரா நகரத்திற்கு சென்றுள்ளார். ஆனால் முஹம்மது பின் இஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள் இந்த செய்தியை மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்களின் ஹதீஸாக அறிவித்துள்ளனர் என்பதால் அதற்கே முன்னுரிமை அளிக்கப்படும். இது ஷாத் ஆகும்.

மேலும் பார்க்க: அஹ்மத்-23624 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.