அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கத்னா எனும்) விருத்தசேதனம் செய்வது ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 26468)حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، عَنْ حَجَّاجٍ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ مَكْرُمَةٌ لِلنِّسَاءِ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-26468.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-25883.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் அபுல்மலீஹ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மனிதர் யாரென அறியப்படாதவர்.
- மேலும் ராவீ-11282-ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர்; தத்லீஸ் செய்பவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/356)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- வேறு சில நூல்களிலும் இந்தச் செய்தி ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) வழியாக வந்துள்ளது. அனைத்திலும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் இடம்பெறுகிறார்; மேலும் இவர் வழியாக பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடர்கள் வந்திருப்பதால் அவை அனைத்தும் பலவீனமான அறிவிப்பாளர்தொடர்களாகும் என்று ஷிஹாபுத்தீன் பூஸீரீ பிறப்பு ஹிஜ்ரி 762
இறப்பு ஹிஜ்ரி 840
வயது: 78
இமாம் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: இத்ஹாஃபுல் கியரா-1/293)
1 . இந்தக் கருத்தில் ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-26468 , அல்அதப் லிஇப்னி அபீஷைபா-, அல்இயால்-, அத்தரஜ்ஜுல்-, அல்முஃஜமுல் கபீர்-7112 , 7113 , தாரீகு திமிஷ்க்-,
2 . உஸாமா பின் உமைர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-20719 .
3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11590 .
4 . அபூஅய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: குப்ரா பைஹகீ-17568 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-5271 ,
சமீப விமர்சனங்கள்