தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-11590

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கத்னா எனும்) விருத்தசேதனம் செய்வது ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11590)

حَدَّثَنَا عَبْدَانُ بْنُ أَحْمَدَ، ثنا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ، ثنا الْوَلِيدُ بْنُ الْوَلِيدِ، ثنا ابْنُ ثَوْبَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ، مَكْرُمَةٌ لِلنِّسَاءِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-11590.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-11432.




إسناد شديد الضعف فيه الوليد بن الوليد العنسي وهو متروك الحديث (جوامع الكلم)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47729-வலீத் பின் வலீத் பின் ஸைத் என்பவர் பற்றி அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் ஸதூக் என்றும், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    பாராட்டியும் கூறியிருந்தாலும் வேறொரு இடத்தில் இவர் இப்னு ஸவ்வான் வழியாக அறிவிக்கும் செய்திகள் சரியானவை அல்ல என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    கூறியுள்ளார்.

வலீத் பின் வலீத் என்ற பெயரில் 3 பேர் உள்ளனர்.

1 . வலீத் பின் மூஸா அத்திமிஷ்கீ,

2 . வலீத் பின் வலீத் அத்திமிஷ்கீ,

3 . வலீத் பின் வலீத் பின் ஸைத் அல்அன்ஸீ அத்திமிஷ்கீ.

இந்த 3 பேரும் ஒருவரே என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
கூறியுள்ளார்.

என்றாலும் அபூநுஐம் அவர்கள், வலீத் பின் மூஸா அத்திமிஷ்கீ என்பவர் அவ்ஸாயீ வழியாக முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்றும், வலீத் பின் வலீத் பின் ஸைத் அல்அன்ஸீ அத்திமிஷ்கீ என்பவர் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் வழியாக இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவித்துள்ளார் என்றும் விமர்சித்துள்ளார்.

(நூல்: லிஸானுல் மீஸான்-8/393)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

3 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) 

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11590 , குப்ரா பைஹகீ-17565 ,

  • கதாதா —> ஜாபிர் பின் ஸைத் —> இப்னு அப்பாஸ் (ரலி) 

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-12828 , குப்ரா பைஹகீ-17566 ,

மேலும் பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-26468 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.