தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-2082

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

காஸிம் பின் முஹம்மது (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் வேதத்திற்கு (என்னுடைய) சுயஅறிவைக்கொண்டு நான் (விளக்கமாக) கூறிவிட்டால், எந்த வானம் எனக்கு நிழல் தரும்? எந்த பூமி என்னை சுமந்து கொள்ளும்? என்று அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை இப்னு அபூமுலைகா (ரஹ்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார். அதில், “அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு வசனத்திற்கு தூயோனும் உயர்ந்தோனுமான; அல்லாஹ் நாடாத ஒன்றை நான் (விளக்கமாக) கூறிவிட்டால்” என்று இடம்பெற்றுள்ளது.

இதுவும் (மேற்கண்டசெய்தி) போன்றே முர்ஸலாகும். (அதாவது முன்கதிஃ ஆகும்)

(shuabul-iman-2082: 2082)

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الْمُفَسِّرُ، أَخْبَرَنا إِسْحَاقُ بْنُ سَعْدِ بْنِ الْحَسَنِ، حدثنا جَدِّي الْحَسَنُ بْنُ سُفْيَانَ، أَنَّ هُدْبَةَ بْنَ خَالِدٍ، حَدَّثَهُمْ، قال حدثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدِ بْنِ جُدْعَانَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ:

أَيُّ سَمَاءٍ تُظِلُّنِي، وَأَيُّ أَرْضٍ تُقِلُّنِي إِذَا قُلْتُ فِي كِتَابِ اللهِ بِرَأْيٍ “

وَرَوَاهُ ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ أَبِي بَكْرٍ، كَذَلِكَ مُرْسَلًا، وَقَالَ فِي مَتْنِهِ: ” إِذَا أَنَا قُلْتُ فِي آيَةٍ مِنْ كِتَابِ اللهِ بِغَيْرِ مَا أَرَادَ اللهُ سُبْحَانَهُ وَتَعَالَى بِهَا “


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-2082.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-2088.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-29905-அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், ஆதாரம்கொள்ளத்தக்கவர் அல்ல என்றும் விமர்சித்துள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/162, தக்ரீபுத் தஹ்தீப்-4768)

மேலும், காஸிம் பின் முஹம்மத் அவர்கள், தனது தந்தை முஹம்மதிடமும், தனது பாட்டனார் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் ஹதீஸைக் கேட்கவில்லை. இவரின் தந்தை முஹம்மத் அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை.

(நூல்: ஸியரு அஃலாமின் நுபலா-5/54)

எனவே இது முன்கதிஃ என்பதால் பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

1 . இந்தக் கருத்தில் அபூபக்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

இந்தச் செய்தி அபூபக்ர் (ரலி) வழியாக 7 வகையான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1 . அலீ பின் ஸைத் ஜுத்ஆன் —> காஸிம் பின் முஹம்மது —> அபூபக்ர் (ரலி) 

பார்க்க: ஷுஅபுல் ஈமான்-2082 ,


2 . அய்யூப் —> அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் —> அபூபக்ர் (ரலி)

பார்க்க: ஸுனன் ஸயீத் பின் மன்ஸூர்-39 , ஷுஅபுல் ஈமான்-2082 , அல்மத்கல்-பைஹகீ-792 ,

سنن سعيد بن منصور – بداية التفسير – ت الحميد (1/ 168):

39 – حَدَّثَنَا سَعِيدٌ، قَالَ: نا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ: سُئِلَ أَبُو بَكْرٍ الصِّدِيقُ – رَضِيَ اللَّهُ عَنْهُ – عَنْ آيَةٍ مِنْ كِتَابِ اللَّهِ – عَزَّ وَجَلَّ -، قَالَ: أَيّة أَرْضٍ تُقِلُّني، أَوْ أيَة سَمَاءٍ تُظِلُّني، أَوْ أَيْنَ أَذْهَبُ، وَكَيْفَ أَصْنَعُ إِذَا أَنَا قُلْتُ فِي آيَةٍ مِنْ كِتَابِ اللَّهِ بِغَيْرِ مَا أراد الله بها؟»

المدخل إلى السنن الكبرى للبيهقي (ص: 430)
792 – أَخْبَرَنَا أَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ، أبنا أَبُو مَنْصُورٍ الْعَبَّاسُ بْنُ الْفَضْلِ، ثنا أَحْمَدُ بْنُ نَجْدَةَ، ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ: سُئِلَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ آيَةٍ مِنْ كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ فَقَالَ: «أَيَّةُ أَرْضٍ تُقِلُّنِي وَأَيَّةُ سَمَاءٍ تُظِلُّنِي أَوْ أَيْنَ أَذْهَبُ أَوْ كَيْفَ أَصْنَعُ إِذَا قُلْتُ فِي آيَةٍ مِنْ كِتَابِ اللَّهِ بِغَيْرِ مَا أَرَادَ اللَّهُ سُبْحَانَهُ بِهَا»

இப்னு அபூமுலைகா-அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்களிடம் குர்ஆனின் ஒரு வசனம் பற்றி விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “அல்லாஹ்வின் வேதத்தின் ஒரு வசனத்திற்கு அல்லாஹ் நாடாத ஒன்றை நான் (விளக்கமாக) கூறிவிட்டால், எந்த பூமி என்னை சுமந்து கொள்ளும்? அல்லது எந்த வானம் எனக்கு நிழல் தரும்? அல்லது நான் எங்கே செல்வேன்? என்று கூறிவிட்டு, அதற்கு எவ்வாறு நான் விளக்கம் கூறுவேன்? என்று பதிலளித்தார்கள்.

(நூல்: ஸுனன் ஸயீத் பின் மன்ஸூர்-39, அல்மத்கல்-பைஹகீ-792)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் வரும் ராவீ-25000-இப்னு அபூமுலைகா அவர்கள் ஹிஜ்ரீ 117 இல் இறந்தார். அப்போது இவரின் வயது 80 என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: ஸியரு அஃலாமின் நுபலா-5/90)

இதன்படி இவர் பிறந்தது ஹிஜ்ரீ 37 ஆகும். அபூபக்ர் (ரலி) அவர்கள், ஹிஜ்ரீ 13 இல் இறந்துவிட்டார். எனவே இதை இவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டிருக்க வாய்ப்பில்லை.

மேலும் இவர் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரிடமிருந்து அறிவிப்பது முர்ஸல் என்று அபூஸுர்ஆ அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அல்மராஸீல்-இப்னு அபூஹாதிம்-413, பக்கம்-113)

இதன்படி இவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பதும் முர்ஸல் அதாவது முன்கதிஃ ஆகும். எனவே இடையில் ஒருவர் விடுபட்டுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


3 . அவ்வாம் பின் ஹவ்ஷப் —> இப்ராஹீம் அத்தைமீ —> அபூபக்ர் (ரலி) 

பார்க்க: ஃபளாஇலுல் குர்ஆன்-அபூஉபைத்-1/375 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-30107 ,

فضائل القرآن للقاسم بن سلام (ص: 375)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ، عَنِ الْعَوَّامِ بْنِ حَوْشَبٍ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ، سُئِلَ عَنْ قَوْلِهِ: {وَفَاكِهَةٌ وَأَبًّا} [عبس: 31] فَقَالَ: أَيُّ سَمَاءٍ تُظِلُّنِي، أَوْ أَيُّ أَرْضٍ تُقِلُّنِي إِنْ أَنَا قُلْتُ فِي كِتَابِ اللَّهِ مَا لَا أَعْلَمُ؟

இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

கனிகளையும், தீவனங்களையும் அதில் முளைக்கச் செய்தோம். (அல்குர்ஆன் 80:31) எனும் வசனத்தின் விளக்கம் பற்றி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “அல்லாஹ்வின் வேதத்தில் தெரியாத ஒன்றை நான் (விளக்கமாக) கூறினால் எந்த வானம் எனக்கு நிழல் தரும்? எந்த பூமி என்னை சுமந்து கொள்ளும்? என்று பதிலளித்தார்கள்.

(நூல்: ஃபளாஇலுல் குர்ஆன்-அபூஉபைத்-1/375)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-1311-இப்ராஹீம் பின் யஸீத் பின் ஷரீக் அத்தைமீ அவர்கள் பலமானவர் என்றாலும் இவர் பெரும்பாலான நபித்தோழர்களிடம் ஹதீஸ்களைக் கேட்கவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்களைவிட வயது குறைந்த பிற்கால நபித்தோழர்களிடம் இவர் ஹதீஸைக் கேட்கவில்லை. இவர் ஹிஜ்ரீ 92 அல்லது 93 இல் இறந்ததாகவும், அப்போது அவருக்கு வயது 40 என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இவர் ஹிஜ்ரீ 92 இல் இறந்தவர் என்று கருதினாலும் இவர் பிறந்தது ஹிஜ்ரீ 52 ஆகும். அபூபக்ர் (ரலி) ஹிஜ்ரீ 13 இல் இறந்துவிட்டார். எனவே இதை இவர், அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டிருக்க வாய்ப்பில்லை. மேலும் இவர் தத்லீஸ் செய்பவர் என்ற விமர்சனமும் உள்ளது.

(நூல்: ஸியரு அஃலாமின் நுபலா-5/61, தக்ரீபுத் தஹ்தீப்-1/118)

எனவே இது முன்கதிஃ என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


4 . இப்ராஹீம் அந்நகஈ, அப்துல்லாஹ் பின் முர்ரா —>  அபூமஃமர் —> அபூபக்ர் (ரலி).

பார்க்க: தஃப்ஸீருத் தபரீ-1/72 , ஜாமிஉ பயானில் இல்மி-1561 , (அப்து பின் ஹுமைத் அறிவிப்பு) அல்மதாலிபுல் ஆலியா-3512,

تفسير الطبري = جامع البيان ط هجر (1/ 72)

وَحَدَّثَنِي أَبُو السَّائِبٍ سَلْمُ بْنُ جُنَادَةَ السُّوَائِيُّ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ: قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَيُّ أَرْضٍ تُقِلُّنِي، وَأَيُّ سَمَاءٍ تُظِلُّنِي، إِذَا قُلْتُ فِي الْقُرْآنِ مَا لَا أَعْلَمُ»

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ: قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ: «أَيُّ أَرْضٍ تُقِلُّنِي، وَأَيُّ سَمَاءٍ تُظِلُّنِي، إِذَا قُلْتُ فِي الْقُرْآنِ بِرَأْيِي أَوْ بِمَا لَا أَعْلَمُ»

«جامع بيان العلم وفضله» (2/ 833):

1561 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، ثنا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ يَحْيَى، ثنا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، ثنا مُوسَى بْنُ هَارُونَ، نا يَحْيَى الْحِمَّانِيُّ قَالَ: نا حَفْصٌ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ قَالَ: «أَيُّ سَمَاءٍ تُظِلُّنِي؟ وَأَيُّ أَرْضٍ تُقِلُّنِي؟ إِذَا قُلْتُ فِي كِتَابِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ»

وَذَكَرَ مِثْلَ هَذَا عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ مَيْمُونُ بْنُ مِهْرَانَ، وَعَامِرٌ الشَّعْبِيُّ، وَابْنُ أَبِي مُلَيْكَةَ

المطالب العالية (14/ 425):

39 – كتاب التفسير

3512 – قَالَ مُسَدَّدٌ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مرَّة، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أيُّ سَمَاءِ تُظِلُّني، وأيُّ أَرْضٍ تُقِلُّني، ‌إِذَا ‌قُلْتُ ‌فِي ‌كِتَابِ (‌اللَّهِ) مَا ‌لَا ‌أدري، أو ما لم أسمع»

நான்கு அறிவிப்பாளர்தொடர்களின் பொருள்:

அபூமஃமர்-அப்துல்லாஹ் பின் ஸக்பரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் வேதமான-குர்ஆனுக்கு நான் அறியாதவற்றை அல்லது (நபி (ஸல்) அவர்களிடமிருந்து) கேட்காதவற்றை எனது சுயஅறிவைக் கொண்டு, அல்லது நான் அறியாதவற்றைக் கொண்டு (விளக்கமாக) கூறினால் எந்த பூமி என்னை சுமந்து கொள்ளும்? எந்த வானம் எனக்கு நிழல் தரும்? என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24561-அபூமஃமர்-அப்துல்லாஹ் பின் ஸக்பரா அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    போன்றோர் கூறியுள்ளனர்.

(நூல்: தபகாதுல் குப்ரா-1986, 6/160, தஹ்தீபுத் தஹ்தீப்-2/342)

அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து ராவீ-46107-மைமூன் பின் மிஹ்ரான் அறிவித்துள்ளார் என்று இப்னு அப்துல்பர் கூறியுள்ளார். மைமூன் பின் மிஹ்ரான் ஹிஜ்ரீ 40 இல் பிறந்தவர். இவரும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை.

எனவே இது முன்கதிஃ என்பதால் பலவீனமான அறிவிப்பாளர் தொடர்களாகும்.


5 . இப்ராஹீம் அந்நகஈ —> அபூபக்ர் (ரலி).

பார்க்க: ஃபத்ஹுல் பாரீ-13/271 ,

فتح الباري لابن حجر (13/ 271)
وَمِنْ وَجْهٍ آخَرَ عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ قَالَ قَرَأَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ وَفَاكِهَةً وَأَبًّا فَقِيلَ مَا الْأَبُّ فَقِيلَ كَذَا وَكَذَا فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّ هَذَا لَهُوَ التَّكَلُّفُ أَيُّ أَرْضٍ تُقِلُّنِي أَوْ أَيُّ سَمَاءٍ تُظِلُّنِي إِذَا قُلْتُ فِي كِتَابِ اللَّهِ بِمَا لَا أَعْلَمُ

وَهَذَا مُنْقَطِعٌ بَيْنَ النَّخَعِيِّ وَالصِّدِّيقِ

இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

கனிகளையும், தீவனங்களையும் அதில் முளைக்கச் செய்தோம். (அல்குர்ஆன் 80:31) எனும் வசனத்தை அபூபக்ர் (ரலி) அவர்கள் ஓதினார்கள். அப்போது அவர்களிடம், அதில் இடம்பெறும் ابا – அப்பா எனும் (அரபு) வார்த்தையின் விளக்கம் பற்றி கேட்கப்பட்டது. (வேறுசிலரால்) இன்னின்ன பொருள் என்று (விளக்கம்) கூறப்பட்டது. உடனே, அபூபக்ர் (ரலி) அவர்கள், “இவ்வாறு விளக்கம் கூறுவது தேவையில்லாத வேலையாகும். அல்லாஹ்வின் வேதத்திற்கு நான் அறியாதவற்றைக் கொண்டு (விளக்கம்) கூறினால் எந்த பூமி என்னை சுமந்து கொள்ளும்? எந்த வானம் எனக்கு நிழல் தரும்? என்று கூறினார்கள்.

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
கூறுகிறார்:

இந்தச் செய்தி முன்கதிஃ ஆகும்.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-1312-இப்ராஹீம் பின் யஸீத் பின் கைஸ் அந்நகஈ அவர்கள் ஹிஜ்ரீ 38 அல்லது 47 அல்லது 50 இல் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. அபூபக்ர் (ரலி) ஹிஜ்ரீ 13 இல் இறந்துவிட்டார். எனவே இதை இவர், அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டிருக்க வாய்ப்பில்லை. மேலும் இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அவர்கள் இவர் எந்த நபித்தோழரையும் சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/92)

எனவே இது முன்கதிஃ என்பதால் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


6 . ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
—> (இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி), அலீ (ரலி) ஆகியோரின்) தோழர்கள், அபூபக்ர் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-30103 , அல்ஜாமிஉ லிஅக்லாகிர் ராவீ-1585 ,

الجامع لأخلاق الراوي وآداب السامع للخطيب البغدادي (2/ 193)

1585 – أنا ابْنُ رِزْقٍ، أنا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ، نا أَحْمَدُ بْنُ يَحْيَى الْحُلْوَانِيُّ، نا يَحْيَى بْنُ عَبْدِ الْحَمِيدِ الْحِمَّانِيُّ، نا ابْنُ الْمُبَارَكِ، عَنِ الْحَسَنِ بْنِ عُمَرَ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ: قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ: «أَيُّ سَمَاءٍ تُظِلُّنِي وَأَيُّ أَرْضٍ تُقِلُّنِي إِذَا قُلْتُ فِي كِتَابِ اللَّهِ مَا لَا أَعْلَمُ»

ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் வேதத்தில் (உள்ள ஒன்றுக்கு), நான் அறியாத ஒன்றை (விளக்கமாக) கூறினால் எந்த வானம் எனக்கு நிழல் தரும்? எந்த பூமி என்னை சுமந்து கொள்ளும்? என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20513-ஆமிர் அஷ்ஷஅபீ அவர்கள் பிறந்தது ஹிஜ்ரீ 19, 20 , 21 , 31 என்று பலவாறு கூறப்பட்டுள்ளது. இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 456
    வயது: 72
    அவர்கள், உமர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட பிறகே இவர் பிறந்தார் என்று கூறியுள்ளார். இதன்படி இவர் ஹிஜ்ரீ 23 இல் பிறந்தார் என்றும் கூறப்படுகிறது. இவர் ஹிஜ்ரீ 19 இல் பிறந்தார் என்று கருதினாலும் அபூபக்ர் (ரலி) ஹிஜ்ரீ 13 இல் இறந்துவிட்டார். எனவே இதை இவர், அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டிருக்க வாய்ப்பில்லை.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/264)

எனவே இது முன்கதிஃ என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


7 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
—> யஹ்யாபின்ஸயீத் —> அபூபக்ர் (ரலி)

பார்க்க: முஅத்தா மாலிக்-அபூமுஸ்அப்-2079 ,

موطأ مالك رواية أبي مصعب الزهري (2/ 166)

2079 – أَخْبَرَنَا أَبُو مُصْعَبٍ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ: َأَيُّ أَرْضٍ تُقِلُّنِي، وَأَيُّ سَمَاءٍ تُظِلُّنِي، إذَا قُلْتُ عَلَى اللهِ مَا لاَ أَعْلَمُ.

யஹ்யாபின்ஸயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அறியாத ஒன்றை அல்லாஹ்வின் விசயத்தில் கூறினால், எந்த பூமி என்னை சுமந்து கொள்ளும்? எந்த வானம் எனக்கு நிழல் தரும்? என்று அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48293-யஹ்யாபின்ஸயீத் பின் கைஸ் அவர்கள் அனஸ் (ரலி) அவர்களைத் தவிர மற்றவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    கூறியுள்ளார். இவர் தத்லீஸ் செய்பவர் என்று யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அல்கத்தான் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/360)

எனவே இது முன்கதிஃ என்பதால் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-257 , இப்னு மாஜா-1801 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.