بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
கருத்துவேறுபாடு உள்ள அறிவிப்பாளரின் தரம் பற்றி எவ்வாறு முடிவு செய்வது?
ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் சிலரை, இவர்கள் பலமானவர்கள் என்று அறிஞர்கள் கூறியிருப்பார்கள். இதற்கு மாற்றமாக வேறு அறிஞர் எதுவும் கூறியிருக்கமாட்டார். சிலரை பலவீனமானவர்கள் என்று அறிஞர்கள் கூறியிருப்பார்கள். இதற்கு மாற்றமாக வேறு அறிஞர் எதுவும் கூறியிருக்கமாட்டார். இதில் கருத்துவேறுபாடு இல்லை என்பதால் எளிதாக அறிவிப்பாளரின் தரம் பற்றி முடிவு செய்து விடலாம்.
ஆனால் சில அறிவிப்பாளர்கள் விசயத்தில் ஹதீஸ்கலை அறிஞர்களின் தரச் சான்றிதல் பலவாறு இருக்கும்.
1 . ஒரே அறிவிப்பாளர் பற்றி ஒரு அறிஞரின் கருத்தே பலவாறு கூறப்பட்டிருக்கும்.
2 . இவ்வாறே ஒரு அறிவிப்பாளர் பற்றி ஒரு அறிஞர் பலமானவர் என்றும்; மற்றொரு அறிஞர் பலவீனமானவர் என்றும்; மற்றொரு அறிஞர் சுமாரானவர் என்றும்; மற்றொரு அறிஞர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும் கூறியிருப்பார். இது போன்று கருத்துவேறுபாடு இருக்கும் போது அந்த அறிவிப்பாளரின் தரத்தை எவ்வாறு முடிவு செய்யவேண்டும் என்பதற்கும் சில நிபந்தனைகள் உள்ளன.
(அறிஞர்களின் கருத்துவேறுபாட்டுக்கு காரணங்கள்:
1 . சில அறிஞர்கள் அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குள்ளவர்களாக இருப்பார்கள். (ஒரு அறிவிப்பாளரிடம் நிகழும் ஒன்றிரண்டு தவறுகளினால் கூட அவரை பலவீனமானவர் என்று விமர்சித்து விடுவார்கள்.)
2 . சில அறிஞர்கள், அறிவிப்பாளர்களை நம்பகமானவர் என்று கூறுவதில் கவனக்குறைவுள்ளவர்களாக இருப்பார்கள்.
3 . சில அறிஞர்கள் நடுநிலையானவர்களாக; நீதமானவர்களாக இருப்பார்கள்.
4 . ஒரே காலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் அறிஞர்களில் சிலர், தங்களுக்குள் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சனையின் காரணத்தினால் ஒருவர் மற்றொருவரை விமர்சித்திருப்பார்கள்.
5 . ஒரு அறிஞரும், அறிவிப்பாளரும் வெவ்வேறு கொள்கையுடையவர்களாக இருக்கும்போது அந்த அறிஞர் அந்த அறிவிப்பாளரை விமர்சித்திருப்பார்.
6 . அல்லது அரசியல் காரணங்களுக்காக விமர்சித்திருப்பார்.
7 . அல்லது அறிவிப்பாளர் பற்றி சரியாக தெரியாமல் பிறர் கூறியதின் அடிப்படையில் முடிவு செய்து கூறியிருப்பார்.
8 . அறிஞர்கள், அறிவிப்பாளர்களை பற்றி கூறும் குறை, நிறை வார்த்தைகளின் கருத்தைப் பொருத்தும், அறிஞர்களின் வழக்குச் சொல்லின் அடிப்படையிலும் கருத்துவேறுபாடு ஏற்படும்).
இதனடிப்படையில், ஒரு அறிவிப்பாளரின் தரம் பற்றி அறிஞர்களுக்கிடையில் கருத்துவேறுபாடு இருந்தால் அவரின் தரம் பற்றி முடிவு செய்யும் நிபந்தனைகள்:
1 . ஹதீஸ்கலை அறிஞர்களில் யார் கடினப்போக்குவுடையவர்கள்; யார் பொடுபோக்கானவர்கள்; யார் நடுநிலையானவர்கள் என்பதை தெரிந்திருக்க வேண்டும்.
- சில அறிஞர்கள் அறிவிப்பாளரை குறைக் கூறுவதில் கடினப்போக்குள்ளவர்களாகவும், அறிவிப்பாளரை பலமானவர் என்று கூறுவதில் சரியானவர்களாகவும் உள்ளனர். இதற்கு உதாரணமாக இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூஇஸ்ஹாக்-இப்ராஹீம் பின் யஃகூப் ஜோஸ்ஜானீ ஆகியோரைக் கூறலாம். இவர்கள் ஒரு அறிவிப்பாளரை பலமானவர் என்று கூறியிருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். காரணமின்றி ஒருவரை பலவீனமானவர் என்று கூறியிருந்து, மற்ற நடுநிலையான அறிஞர்களும் (இவர்களின் கருத்தின் அடிப்படையில் கூறாமல்) பலவீனமானவர் என்று கூறியிருந்தால் அதை ஏற்கலாம். மற்றவர்கள் அவ்வாறு கூறாதிருந்து இவர்களும் பலவீனமானவர் என்பதற்கு காரணத்தை கூறாவிட்டால் அதை ஏற்கக் கூடாது. இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் அறிவிப்பாளரை குறை கூறுவதில் கடினப்போக்குடையவர் ஆவார். எனவே இவர் மட்டும் தனித்து ஒரு அறிவிப்பாளரை காரணமின்றி விமர்சித்திருந்தால் அதை ஏற்கக்கூடாது. - சில அறிஞர்கள், அறிவிப்பாளரை பலமானவர் என்று கூறுவதில் பொடுபோக்குள்ளவர்களாக, கவனக்குறைவுள்ளவர்களாக இருப்பார்கள். இதற்கு உதாரணமாக திர்மிதீ, இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
ஆகியோரைக் கூறலாம். - சில அறிஞர்கள் நடுநிலையானவர்களாக இருப்பார்கள். இதற்கு உதாரணமாக இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஸுர்ஆ, இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
ஆகியோரைக் கூறலாம்.
இந்தத் தகவலை தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் தனது “திக்ரு மய் யுஃதமது கவ்லுஹூ ஃபில்ஜர்ஹி வத்தஃதீல்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
என்றாலும் இந்தச் சட்டம் சில இடங்களில் பொருந்தாமல் போகலாம்.
2 . அறிஞர்களின் குறை, நிறைப் பற்றிய தகவல்களை அஸல் நூலிலிருந்தும், அறிவிப்பாளர்தொடருடனும் தெரிந்திருக்க வேண்டும். எது ஆரம்பத்தில் கூறப்பட்டது; எது கடைசியில் கூறப்பட்டது என்பதையும் தெரிந்திருக்க வேண்டும்.
இதன் மூலம் ஒரு அறிஞரிடமிருந்து ஒரு அறிவிப்பாளர் பற்றி பலதரப்பட்ட கருத்துக்கள் அறிவிக்கப்பட்டிருந்தால் அதன் நிலையை தெரிந்துக் கொள்ளலாம்.
3 . விமர்சித்தவரும் விமர்சிக்கப்பட்டவரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்களாக அல்லது ஒரே வயதுடையவர்களாக அல்லது ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கிடையில் உள்ள தொடர்புகளை தெரிந்திருக்க வேண்டும். (கொள்கை, விரோதம், அரசியல், பொறாமை போன்ற காரணங்கள் இருந்தால் கூட ஒருவர் மற்றொருவரை விமர்சித்திருக்கலாம்)
4 . விமர்சிப்பவர் மற்றவர்களால் விமர்சிக்கப்பட்டவராக இருக்கக் கூடாது. மற்றவர்களால் விமர்சிக்கப்பட்டவரின் குறைப்படுத்தும், நிறைபடுத்தும் வார்த்தைகள் ஏற்கப்படாது.
5 . ஒருவர் பலமானவர் என்பதற்கு காரணம் கூறப்பட்டால் அது பொருத்தமான காரணமாக இருக்க வேண்டும். இவ்வாறே ஒருவரை பலவீனமானவர் என்பதற்கு காரணம் கூறப்பட்டால் அது பொருத்தமான காரணமாக இருக்க வேண்டும். சம்பந்தமில்லாத காரணங்கள் கூறப்பட்டால் அது ஏற்கப்படாது.
6 . அறிஞர்கள், அறிவிப்பாளர்களை பற்றி கூறும் குறை, நிறை வார்த்தைகளின் வழக்குச் சொல்லை தெரிந்திருக்க வேண்டும்.
7 . ஒரு அறிஞர், ஒரு அறிவிப்பாளர்பற்றி கூறும் தகவலை, அவர் எவ்வாறு தெரிந்துக் கொண்டார் என்பதை தெரிந்திருக்க வேண்டும்.
(அவர் அறிவிப்பாளரின் குறையை நேரடியாகவே பார்த்திருக்கலாம். அல்லது அவரின் அறிவிப்புகளை ஆய்வு செய்வதின் மூலம் தெரிந்திருக்கலாம். அல்லது அவரைப் பற்றி அறிந்தவர்களின் வழியாக தெரிந்திருக்கலாம்.
ஏனெனில் பிற்காலத்தில் வந்தவர் முற்காலத்தில் உள்ளவரை ஆதாரமின்றி விமர்சிப்பது ஏற்கத்தக்கதல்ல. மேலும் ஒருவர் பற்றி அந்த ஊர்வாசிகளே நன்கு அறிந்திருப்பர்.
இதில் குறையிருந்தால் அந்த அறிஞரின் நற்சான்றிதலோ அல்லது விமர்சனமோ ஏற்கப்படாது)
8 . அறிவிப்பாளரின் வாழுமிடம், பயணித்த இடங்கள், சந்தித்த ஆசிரியர்கள் போன்ற பல தகவல்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
ஏனெனில் சில அறிவிப்பாளர்கள் சில குறிப்பிட்ட அறிவிப்பாளர்களிடமிருந்து அறிவிக்கும் போது தவறிழைத்ததால் விமர்சிக்கப்பட்டிருப்பார்கள்.
இவ்வாறே சிலர் கடைசிக் காலத்தில் மூளைக்குழம்பியதால் ஹதீஸ்களை தவறாக அறிவித்ததால் விமர்சிக்கப்பட்டிருப்பார்கள்.
இவ்வாறே சில ஊர்வாசிகளிடமிருந்து அறிவித்ததில் அதிகம் தவறு இருந்ததால் அதைக் கண்ட அறிஞர்கள் விமர்சித்திருப்பார்கள்.
இந்த விமர்சனத்தின்படி இவர்கள் பொதுவாக பலவீனமானவர்கள் என்று முடிவு செய்துவிடக்கூடாது.
…
கருத்துவேறுபாடு உள்ள அறிவிப்பாளர்கள் பற்றி சிலர் தனிநூலை தொகுத்துள்ளனர். அவற்றில் சில:
1 . المختلف فيهم – அல்முக்தலஃபு ஃபீஹிம்-இப்னு ஷாஹீன்.
2 . ذكر الرواة المختلف فيهم المشار إليهم في هذا الكتاب – அப்துல் அளீம் முன்திரீ அவர்களின் நூலான தர்ஃகீபின் கடைசி பகுதி.
…
(கருத்துவேறுபாடு உள்ள அறிவிப்பாளர்கள் விசயத்திலிருந்து எடுக்கப்பட்ட சட்டங்கள்:
1 . கருத்துவேறுபாடு உள்ள அறிவிப்பாளர்களின் செய்திகள், 2 நிபந்தனைகளின் அடிப்படையில் ஹஸன் தர செய்திகளாகும்.
- குறிப்பிட்ட அறிவிப்பாளர், தத்லீஸ் செய்பவர் என்றோ அல்லது சில குறிப்பிட்ட அறிவிப்பாளர்கள் வழியாக அறிவித்தால் அல்லது சில குறிப்பிட்ட அறிவிப்பாளர்கள் இவரிடமிருந்து அறிவித்தால் பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டவராக இருக்க வேண்டும்.
(இந்த நிலை இல்லாத செய்திகள் ஹஸன் தர செய்திகள் ஆகும்)
- மேலும் இந்த செய்திகள் இவரைவிட மிகப் பலமானவர்களுக்கு மாற்றமாக இருக்கக் கூடாது.
2 . கருத்துவேறுபாடு உள்ள அறிவிப்பாளர், நம்பகமானவராகவும், உண்மையாளராகவும் இருக்கவேண்டும்.
3 . கருத்துவேறுபாடு உள்ள அறிவிப்பாளர் பற்றிய விமர்சனம், நினைவாற்றல் சம்பந்தமாக இருக்க வேண்டும்.
இந்த வகையினர் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் குறிப்பிட்டிருக்கும் 12 வகையினரில் 5 வது வகையினர் ஆவர்.)
(ஆதார நூல்: அர்ராவில் முக்தலஃபு ஃபீஹி ஜர்ஹன் வ தஃதீலன், ஆசிரியர்: முஸ்தஃபா அபூஸைத்)
இதனுடன் தொடர்புடைய தகவல்கள்:
1 . பார்க்க: அறிவிப்பாளர்களின் தர விளக்க வார்த்தைகள் .
2 . பார்க்க: ஹதீஸை ஆய்வு செய்யும் முறை .
சமீப விமர்சனங்கள்